Friday, October 19, 2012

பாடகி சின்மயி Vs ட்விட்டர் ராஜன்



பாடகி சின்மயி, கமிஷனர் அலுவலகத்தில் இரண்டு புகார்களை அளித்துள்ளார். ஒன்று அவர் பங்கேற்ற நிகழ்ச்சி ஒன்றின் தயாரிப்பாளர் பணம் கொடுக்காமல் ஏமாற்றி விட்டார் என்பது. மற்றையது தமிழ் இணைய ட்விட்டர் உலகில் இருக்கும் சிலர் தனக்கு மிரட்டல் விடுக்கிறார்கள் / தொந்தரவு தருகிறார்கள் என்று. அதில் ஒரு குறிப்பிட்ட நபர் (ராஜன் இல்லாத மற்றைய ஒருவர்) மீது மேலும் கடுமையான புகாரை சொல்லியிருக்கிறார்...

இதில் ராஜன் தவிர்த்து மற்றைய யாரும் எனக்கு பரிச்சயம் இல்லாதவர்கள், ஒரு முறைகூட தொலைபேசியில் தொடர்புகொண்டவர்கள் அல்ல. அதனால் அவர்கள் செய்த தவறுகள் என்ன என்பதை பற்றி எனக்கு தெரியாது. அவர்கள் பாடகி சின்மயியின் மாடஸ்டியை குலைப்பது போன்ற நடவடிக்கைகளில் இணைய உலகில் ஈடுபட்டிருந்தாலோ அல்லது அவருக்கு மிரட்டல் விடுத்திருந்தாலோ அல்லது அவருக்கு மன உளைச்சல் தந்திருந்தாலோ அதற்கு காவல் துறை தகுந்த நடவடிக்கை எடுக்கும் என்பதில் எனக்கு சந்தேகமில்லை.

தமிழக காவல்துறை, அதிலும் சைபர் க்ரைம், தமிழ் இணைய உலகுக்கு பரிச்சயமானது தான். தமிழ் இணையத்தில் அனைவரையும் ஆபாச அர்ச்சனை செய்துவந்த ஒரு சைக்கோவை வெறும் மின்னஞ்சல் முகவரியை மட்டும் வைத்து டவுசரை கழட்டி உட்காரவைத்தவர்கள். கூகிள் / ட்விட்டர் / யாஹூ உட்பட அனைத்து நிறுவனங்களும் தமிழக காவல்துறை அனுப்பும் மின்னஞ்சலுக்கு உடனே பதில் தருகிறார்கள். மின்னஞ்சல் முகவரி / ட்விட்டர் முகவரியை உருவாக்கியதில் இருந்து என்ன என்ன எழுதியிருந்தாலும் (டெலீட் செய்யப்பட்டவை உட்பட) முழுமையான பி.டி.எப் கோப்பாக அனுப்பிவிடுகிறார்கள். ஆகவே இதுபோன்ற சைபர் குற்றங்களில் தமிழக காவல்துறையின் அனுபவம் பற்றியோ, அல்லது அவர்களின் வேகம் பற்றியோ எனக்கு எள் அளவும் சந்தேகமில்லை...

ஆனால் இந்த குறிப்பிட்ட புகார் எப்படி தொடங்கியது என்பது பற்றி எனக்கு தெரிந்த வகையில் பதிவு செய்ய கடமைப்பட்டுள்ளேன்...(சமீப காலங்களில் ட்விட்டர் முகவரி உருவாக்கியவர்களுக்கு இது பற்றி தெரியாது, அவர்களுக்கு விளக்கம் தரவேண்டும் என்பதை விட, டெல்லியில் இருந்துகொண்டு என்னால் சைபர் க்ரைம் காவல் அதிகாரிகள் முன்னிலையில் ஆஜர் ஆகி விளக்கம் கொடுக்க இயலாத நிலையில் என்னால் முடிந்த வகையில் ஆரம்பகால தகவல்களை பதிவு செய்து வைப்பது என் கடமை என்று கருதுகிறேன்).

மேலும் பொதுவாகவே பெண் புகார் கொடுத்தால் இளகும் மனம் உள்ள காவல் துறையினர், பாடகி சின்மயி போன்ற ஒரு பிரபலம் / செலப்ரட்டி புகார் கொடுத்தால் எதிர் தரப்பில் உள்ள சிவிலியன்கள் (ராஜன் உட்பட), என்ன சொல்லியிருக்கிறார்கள் / செய்திருக்கிறார்கள் என்று அவர்களது விளக்கத்தை தர கூட அனுமதிப்பார்களா என்பது கேள்விக்குறியே...!!! அதனால் இது போன்ற விளக்கத்தை எழுதி, எனக்கு தெரிந்த காவல்துறை நன்பர்கள் மூலம் அவர்களுக்கு முன்பே கிடைக்குமாறு செய்வதும் இந்த பிரச்சனையில் இரண்டு தரப்பையும் விளக்க உதவியாக இருக்கும் என்று நம்புகிறேன். (மேலும் இந்த வாரம் தான் புகார் கொடுக்கப்பட்டுள்ளது, அதற்குள் பெரிதாக ஏதும் நடைபெற்றிருக்காது என்று நம்புகிறேன்)..

பீடிகையிலேயே பீடி குடிக்க போகும் அளவுக்கு ப்ளேடு போடாதே ரவி விஷயத்துக்கு வா என்று அண்ணன் உண்மைத்தமிழன் அலறுகிறார்...!!

- பாடகி சின்மயி ட்விட்டருக்கு வந்தபோது உற்சாகமாக அனைவரும் பாலோ செய்தோம், அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்று அவரது கருத்துக்களை தெரிந்துகொள்ள....


- இலங்கை படையினர் தமிழக மீனவர்களை சுட்டு கொன்ற ஒரு நிகழ்வின்போது, மீனவன் மீனை கொல்றான், சிங்கள படையினர் மீனவனை கொல்றான் என்ற வகையில் ஒரு ட்வீட்டை இட்டார். இது பரந்துபட்ட அளவில் அனைத்து தமிழ் ட்வீட்டர்கள் மத்தியில் எதிர்ப்பு எழ காரணமாக இருந்தது. தமிழ் உணர்வாளர்கள், நடுநிலையாளர்கள், பெண்கள் என அனைவரும் பாடகி சின்மயிக்கு எதிராக தங்களது ட்விட்டர் பக்கத்தில் கருத்துக்களை எழுதினார்கள். பாடகி சின்மயி, இதற்கு மறுப்போ மன்னிப்போ தெரிவிக்காமல், நான் ப்ராமின் என்பதால் என்னை தாக்குகிறீர்கள் என்ற ரீதியில் - சரியாக நினைவில்லை - எழுதினார். அதே நேரம் அவரை கேள்வி கேட்டவர்களை எல்லாம் தடை செய்தார். இந்த குறிப்பிட்ட நிகழ்வின் போது நான் ட்விட்டரில் ஆக்டிவ் ஆக பங்கேற்க இயலாத வகையில் பணி சுமை இருந்தது. அதனால் நான் இதில் கலந்துகொள்ள இயலவில்லை...


- சாதி ரீதியான இட ஒதுக்கீடு தவறு என்று தமிழக அரசின் இட ஒதுக்கீட்டை தூற்றி எழுதினார். பொருளாதார அடிப்படையிலேயே இட ஒதுக்கீடு அமைய வேண்டும் என்றும் சொன்னார். இது அவரது கருத்து என்ற வகையில் அல்லாமல், வன்மம் தெறிக்கும் ஆங்கில வார்த்தைகளை உபயோகப்படுத்தியிருந்தார். நானும் என்னைப்போல மற்றவர்களும் அவரை கேள்வி கேட்டோம். சாதி ரீதியாக கணக்கெடுப்பு எடுத்து அதன் படியே இட ஒதுக்கீடு அமையவேண்டும் என்று நான் அவரிடம் விவாதம் செய்தேன். விவாதம் என்னவோ ஆரோக்கியமான வகையில் தான் சென்றது. ஆனால் ஒரு பிரபலம் / செலப்ரட்டி என்பதற்கான எந்த மெச்சூரிட்டியும் இல்லாமல் தன்னுடைய கருத்தை எதிர்த்து கருத்து சொன்னவர்களை எல்லாம் க்ளிக் / ப்ளாக் (தடை செய்வது) செய்தார். ஒரு கட்டத்தில் தமிழில் பதில் சொன்னவர்களை எல்லாம் தடை செய்தார். குறைந்தபட்சம் 100 பேரையாவது தடை செய்திருப்பார் என்பது என் கணிப்பு. பள்ளிக்கூட பிள்ளைகள் டூ விடுவது போல மிகையான இம்மெச்சூரிட்டியோடு நடந்துகொண்டார்...

இது தான் ஆரம்பம்.

இதன் பிறகு ராஜன் என்ன சொன்னாலும் அது தன்னை நோக்கித்தான் சொல்கிறார் என்ற வகையில் நடந்துகொண்டார். அதற்கு தூபம் போடுவது போல அவருடைய பாலோவர் ஆக இருக்கும் சில தோழர்கள் / தோழிகள் அவருக்கு தவறான வழிகாட்டியாக இருந்து "ஏய் அவன் உன்னைத்தான் சொல்கிறான்" என்பது போல அந்த ட்வீட்டுகளை எல்லாம் படம் எடுத்து பாடகி சின்மயிக்கு தொடந்து அனுப்பிவைத்திருக்கிறார்கள்...

ஒரு படத்தில் வரதட்சணை வாங்காமல் திருமணம் செய்ய முயலும் வைகை புயல் வடிவேலு, புரோக்கராக செயல்பட்ட சிங்க முத்துவுக்கு கமிஷன் தொகையினை தர மறுக்க, சொம்பு கேட்கிறான், தங்க சொம்பு கேட்கிறான் என்று சொல்லியும், அதிலும், வடிவேலு காலை தூக்கி கொசு அடிக்க, "அங்க பாரு சொம்புக்காக ஒத்தை காலில் நிற்கிறான்" என்று ஒரே போடாக போட்டு தரும அடி வாங்க வைத்து கல்யாணத்தையே நிறுத்துவார்...

 இறுதியில் அந்த நிலையானதுங்க இந்த பிரச்சனை...

ராஜனை பொறுத்த வரை இது தான் நேர்ந்தது. ஆனால் ராஜனுக்கு சப்போர்ட் செய்வதாக நினைத்துக்கொண்டு சில அல்லக்கைகள் ஓவராக நடந்துகொண்டார்கள், (அதிலும் குறிப்பிட்ட ஒருவர் படு ஆபாசமாக பேசியிருக்கிறார் )..அவர்களை கண்டறிந்து (அதற்கான ஸ்க்ரீன் ஷாட் எல்லாம் பாடகி சின்மயி கொடுத்திருப்பார் என்று நினைக்கிறேன்) தக்க நடவடிக்கை எடுக்கவேண்டும், அதன் மூலம் தமிழ் இணையத்தில் பெண்கள் மேலும் சுகந்திரமாக இயங்கும் நிலை ஏற்படவேண்டும் என்பது சரியானதே...

இதை பற்றி மேலும் பார்த்தோமானால், பொதுவாகவே தமிழ் இணையத்தில் பெண்கள் சுகந்திரமாக இயங்க இயலாத சூழ்நிலை கடந்த ஒரு ஆண்டாகவே ஏற்பட்டது. பெண்கள் தொட்டா சிணுங்கிகளாக இருக்கிறார்கள் என்பதை விட, அடிப்படை மனித பண்புகள், தனிமனித ஒழுக்கம் இல்லாத வீணாப்போனதுகளும் ட்விட்டர் பேஸ்புக் போன்ற சமூக ஊடகங்களில் பங்கேற்க தொடங்கியதும் ஒரு காரணம். இதற்கு காரணம், நமது கல்வி முறை. ஒழுக்கத்தை கட்டுப்பாடாக கற்பிக்கிறோமே தவிர, அதனை ஒரு வாழ்வியல் முறையாக கற்பிப்பது இல்லை. இதற்கு காரணம் மெக்காலே. ஆங்கிலேய ஆட்சி. இப்படி காரணம் சொல்லிக்கொண்டே போகலாம். இவை இன்னும் 100 ஆண்டுகள் ஆனாலும் மாறப்போவதில்லை. பெண்கள் தான் மாற வேண்டும். you have to be more stronger in the social networks. நெல்லில் அடித்தால் கல்லில் அடியுங்கள். இது தான் தேவை. இதன் மூலம் தான், படிப்பினை தந்து மாற்றத்தை கொண்டுவர முடியும். கொஞ்சம் off topic ஆக போகிறேன் என்று நினைக்கிறேன்...!!

நான் சொல்ல நினைத்ததை கன்வே செய்துவிட்டேன் என்று நினைக்கிறேன்...!!

மேலும் ராஜனோ அல்லது அவரது டிசைப்பிள்ஸோ வேறு என்ன வகையில் பாடகி சின்மயிக்கு மன உளைச்சல் தந்தார்கள் என்பது பற்றி வேறு தகவல்கள் எதுவும் எனக்கு தெரியாத நிலையில், எனக்கு தெரிந்த தகவல்களை தெரிவித்துவிட்டேன்.

இதில் கொடுமையான விஷயம் என்னவென்றால், ராஜன் உட்பட இந்த பிரச்சனையில் இருக்கும் யாரையும் நான் சந்தித்ததே இல்லை. ராஜனிடம் மட்டும் சில முறை தொலைபேசியில் பேசியிருக்கிறேன்...வேறு ஒரு பிரச்சனையில், மனித தன்மை இல்லாமல் நடந்துகொண்ட ராஜன் உட்பட அனைவரையும் ப்ளாக் செய்துவிட்டேன்..இதனால் இவர்கள் என்ன கருத்து சொல்கிறார்கள் என்பது எனக்கு தெரியாது. நான் எழுதுவதும் இவர்களுக்கு போகாது :)))

எல்லோரும் வாழ்க வளமுடன்...

பி.கு: சில மாதம் முன் சென்னை சென்றிருந்தபோது, பாடகி சின்மயியை சந்தித்து இது குறித்து விளக்கம் தர முயன்றபோது, அவர் நான் அனுப்பிய மின்னஞ்சலுக்கு பதில் அளிக்கவில்லை...

(பதிவில் உள்ள படம் உதவி : விக்கிபீடியா)

Thursday, October 18, 2012

மாவீரர் மாதமும் தமிழ் அடிப்படைவாதிகளும் !!!



இளையராஜா நவம்பர் மாதம் கனடாவில் (நவம்பர் 3) - ரோஜர்ஸ் செண்டரில் இசை நிகழ்ச்சி நடத்துகிறார்...இது கனடாவில் அல்லது முழு நார்த் அமெரிக்காவில் அவரது முதல் இசை கச்சேரி என்று சொல்கிறார்கள்..

அடியேன் இளைய ராஜாவை விட ஏ.ஆர்.ரகுமானை அதிகம் ரசிப்பவன். நான் இசையை ரசிக்க ஆரம்பித்த தொண்ணூறுகளின் இறுதியில் இளையராஜாவின் சாம்ராஜ்யம் முடிவுக்கு வந்து, ரகுமான் கோலோச்சிக்கொண்டிருந்தார்...

இளையராஜாவின் பல பாடல்கள் விருப்பம் என்றாலும் (மூனாவது படிக்கும்போது ஏனென்று தெரியாமல் விரும்பிய ஏதோ..மோஹம்...ஏதோ தாகம் பாடலாகட்டும்...பத்தாவது படிக்கும்போது பக்காவாக மனதில் இறங்கிய பனிவிழும் மலர்வனமாகட்டும்) அவரே பாடும் பாடல்கள் கொஞ்சம் கொலைவெறியை தூண்டுவது என்னவோ உண்மைதான்..முரளி படத்தில் எம்பாட்டு எம்பாட்டு என்று அவர் பாடியபோது வெறுப்பாகி திரையரங்கில் பக்கத்தில் இருந்த ஆளை கடித்து வைத்து அவர் மருத்துவமனை போனதெல்லாம் வேறு கதை)..

ஏ.ஆர்.ரகுமானைப்போல பல புதிய முகங்களை அறிமுகப்படுத்தாமல் ஏசுதாஸ், சித்ரா, எஸ்பிபி, அவுங்க யாரும் ப்ரீயா இல்லைன்னாலோ இல்லை எஸ்.பி.பிக்கு ஜலதோஷம் பிடித்திருந்தால் தானே பாடுவது என்றதொரு குண்டு சட்டியை வைத்து டிங்கிரி டம்பா ஆடிக்கொண்டிருந்ததும் என் விருப்பமின்மைக்கு ஒரு காரணமாக இருக்கலாம்...

பெரியார் படத்துக்கு இசையமைக்க மறுத்தது அவரது தொழில் சம்பந்தமானது என்று எப்படி புறக்கணித்தோமோ அதே போல லண்டனோ பாரீஸோ கனடாவோ அவுஸ்திரேலியாவோ, எங்கே வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் பாட்டு கட்டட்டும், டிங்கிரி டம்பா பாடட்டும். குத்தாட்டம் போடட்டும்..யார் வேண்டாம்ங்கறா ?

இது தான் நமது நிலை...(நமதுன்னா, அட அது நான் தாங்க)..

ஆனால் தமிழீழ விடுதலை புலிகளின் பெயரால் புலம் பெயர் தேசங்களில் இயங்கிவரும் ஏஜெண்டுகள், இது மாவீரர் மாதம், இந்த மாதத்தில் இசை நிகழ்ச்சிகள், கேளிக்கை நிகழ்ச்சிகள், களியாட்டங்களில் ஈடுபடக்கூடாது என்று வலியுறுத்துவதும், அதை கச்சிதமாக கவ்விக்கொண்ட தமிழக ஏஜெண்டுகள், போலி தமிழ் தேசிய வாதிகள், திடீர் குபீர் புரட்சியாளர்கள், பேசுபுக், ட்விட்டர் போராளிகள், புலம்பெயர் தேசங்களில் இருந்து ஏற்கனவே வாங்கிய காசுக்கும், இனி வரப்போகும் டாலர் பவுண்டுகளுக்கும் கூவுபவர்களும், திராவிட முன்னேற்ற கழகத்தை மட்டும் எதிர்த்து அரசியல் நடத்தும் போராளிகள், நாங்க தான் தமிழர், மீதி பேரெல்லாம் தெலுங்கர், மே 17, 18, 19, 20 என்று எல்லாம் பேன்ஸி நேமில் புரட்சி கட்சி நடத்தும் அமைப்பினர்,   வலியுறுத்துகிறார்கள்...

உண்மை ஒன்று தான். இதன் பின் புலம் இது தான்.

தாயகத்தில் / ஈழத்தில் இப்போது போர் இல்லை. என்ன சொல்லி பணம் வசூலிப்பது ? இப்படியே விட்டால் நாம் பார்ம் அவுட் ஆகிவிடுவோம் என்று பயந்து தான், ஈழக்கனவு, அகண்ட தமிழகம், லெமூரியா கண்டம் என்று அவ்வப்போது அடித்துவிட்டுக்கொண்டு பிழைப்பை ஓட்டும் இடைத்தரகர் கும்பல் இது போன்ற மொக்கையான புரட்சியை கட்டவிழ்த்து இருக்கிறார்கள்...

ஈழப்போர் நடந்தபோது ஒபசிட்டியில் இருக்கும் பிள்ளைகளை உடற்பயிற்சி கூடத்துக்கு அனுப்பிவிட்டு இணையத்தில் எதாவது போட்டோஷாப் செய்து கம்பேனி நடத்திய இந்த கும்பல், புலம்பெயர் தேசங்களில் வகை வகையான வாகனங்களில் வலம் வரும் இந்த கும்பல், தங்கள் இடைத்தரகர் ஜாப்பை காத்துக்கொள்ள, பொதுமக்களிடம் இருந்தும், வியாபார நிறுவனங்களிடம் இருந்தும் பணத்தை அறவிட இது போன்ற உண்ர்வை தூண்டும் வகையான வேலைகளில் ஈடுபடுகிறார்கள். இவர்களை பொதுமக்கள் நம்பவேண்டாம்.

இனி பணம் / நிதி கேட்டால் இது வரை கொடுத்த நிதிக்கு கணக்கு கேளுங்கள். துடைப்பகட்டையாலோ முறத்தாலோ அடித்து விரட்டுங்கள். இது போன்ற அடிப்படைவாதிகளை மாவீரர் மாதம் முழுவதும் பட்டினி கிடக்க சொல்லுங்கள், பட்டானாக பறந்துவிடுவார்கள்...மிரட்டல் விடுத்தால் அந்த அந்த நாடுகளில் உள்ள காவல் துறையில் சொல்லி நடவடிக்கை எடுங்கள்...

இளையராஜா அல்ல, எந்த ராஜாவும் எந்த ஊரிலும் தொழில் செய்ய - அது மே மாதமாக இருந்தாலும் சரி, ஜூன் மாதமாக இருந்தாலும் சரி, நவம்பர் மாதமாக இருந்தாலும் சரி, உரிமை உண்டு.

டிஸ்கி : நான் மாவீரகளையும் அவர்களின் அளப்பரிய தியாகங்களையும் மதிப்பவன், இடைத்தரகர்களையும், புலிகள் பெயரால் பணம் வசூலித்து சுகமாக வாழுபவர்களையும் வெறுப்பவன்...!!!

Tuesday, October 16, 2012

ஜீரோ பட்ஜெட் தமிழக விவசாயிகள்...!!!!!

ஜீரோ பட்ஜெட் தமிழக விவசாயிகள்...!!!!!
==============================



தமிழகத்தில் ஜீரோ பட்ஜெட் விவசாயம் செய்யும் விவசாயிகளின் பெயர்களும் தொலை பேசி எண்களும்.

1) சசி குமார் (நெல், தோட்டக்கலை, வனவியல்) தொலைபேசி -04422349769, 9381051483, 34/66, சரக்கு நிழல் சாலை (கூட்ஸ் ஷட் ரோடு), ஆதம்பாக்கம் , சென்னை -88

2) ஆர் கிருஷ்ணன் (Ratoon கரும்பு, நெல்) தொலைபேசி: 04179293679 ,09345770937, கொத்தூர் போஸ்ட், Tq-திருப்பத்தூர், Dt-வேலூர்

3) கே கே சோமசுந்தரம் (வாழை) பண்ணாடி தோட்டம், எம்.ஜி. புதூர் (வடக்கு), ஈரோடு-638502 Mb-09442931794

4) வி ஆனந்த் கிருஷ்ணன் (மா, சப்போட்டா, நெல்லி, மொசும்பி) 29, 3 வது கிராஸ், குறிஞ்சி நகர், புதுச்சேரி -605008 Mb-09842335700

5) கனகராஜன் கௌடர் (மல்பெரி) Mb-09994918190 கணியமூர் post, Tq-கள்ளகுறிச்சி -606207, Dt-விழுப்புரம்

6) கிரிஷ் எம் (நெல்-20 ஏக்கருக்கு பைகள், வாழை + வெங்காயம் + மிளகாய் + முருங்கை + மேரிகோல்டு + பூசணிக்காய்) தொலைபேசி: 04347231149 குண்டு கோட்டை, Tq-தேங்க நஞ்சகோட்ட , Dt-கிருஷ்ணகிரி-635107

7) NH நரசிம்ம ராவ் (மிளகாய், மஞ்சள் ,பட்டாணி, வாழை, மா, நெல்லி , நாவல்) தொலைபேசி: 04347291133, 09443365243, 09361520844 C / o சி நாகேஷ் N / ஆர் Checkpost, தபால்-தேன்கனி கோட்டா, Dt-கிருஷ்ணகிரி

எம் லோகேஷ், தொலைபேசி: 04344200734, 09443983855 No -4 / 765, பெட்டபெடகனஹல்லி , Tq-ஒசூர், Dt-கிருஷ்ணகிரி

9) எஸ் நவீன் குமார், S / o எம் செல்வராஜா (நெல், கரும்பு) At-சி என் பூண்டி, Tq-ஹோப்லி , Dt-ஷோளிகர் தொலைபேசி: 04172216240, 09341821034

10) நாகேஷ் பி (பாக்கு, தேங்காய்) தொலைபேசி: 04994232058, 09895914298 விஜய நிவாஸ், மோக்ரல் புத்தூர் போஸ்ட், Tq Dt-கசர்கோத் – 671128 (கேரளா)

11) என் செந்தில் குமார் (வாழை, மல்பெரி, நெல்லி , சப்போட்டா, மா, பப்பாளி, நெல்) At-அதுமரதுபள்ளி , தபால்-முல்லிபாடி , Dt-திண்டுக்கல்-624005 Mb-09865376317

12) கே விஜயகுமார் (வாழை) 140, அன்னூர் ரோடு, மேட்டுபாளையம் , Dt-கோயம்பதோர் Mb-09842524282

13) ஜகம் ராதாகிருஷ்ணன் (தென்னை, வாழை, தேக்கு) 34, ராமலிங்கனுர் , 1 ஸ்டம்ப் தெரு, திருவண்ணாமலை-606601 தொலைபேசி: 04175220024, 09443810950

14) எஸ் எம் கதிரேசன் (காபி, ஆரஞ்சு) தொலைபேசி: 04542266360, 09486373767 A/p- தண்டிகுடி, Tq-கொடைக்கானல், Dt-திண்டுக்கல்

15) எஸ்.கே. சேதுராமன் (தேங்காய் + சீமை அகத்தி) கஞ்சம்பட்டி , பொள்ளாச்சி, Dt-கோயம்பத்தூர் அருகில் ‘திருவள்ளுவர் பார்ம்ஸ்’, தென்குமரபாலயம் Mb-09842253540

16) பி முத்துச்வாமி (நெல், மக்காச்சோளம், மா, சப்போட்டா, நெல்லி , தென்னை, தேக்கு) At-கனிசோலை, மேட்டுக்கடை , கொடுமடி சாலை, முத்தூர் , Dt-ஈரோடு-638105 தொலைபேசி: 04257255365, 09965929098

17) KP துரைசுவாமி (நெல், புகையிலை, தேங்காய், மஞ்சள், தேக்கு) Mb-09443430335 வள்ளனமை சமமல் , ததரகாடு, தபால்-வாழைத்தோட்டம் , சிவகிரி-638109, Dt-ஈரோடு

18) ஆர் ஸ்ரீ குமரன் (மா, தென்னை, சப்போட்டா, கொய்யா) தொலைபேசி: 04523292013, 09443592425 ப்ளாட் No.8, சக்தி இல்லம், ராஜ்நகர் , 1st சாலை, சாந்தி நகர், மதுரை 625018

19) ஏ ஜி ராஜ் (திராட்சை) 2, மாடசுவாமி பிள்ளை, Tq-போடி நாயக்கனூர் , Dt-தேனி Mb-09944447722

20) ஆர் கிருஷ்ண குமார் (80 விவசாயிகள் குழு) (நெல், கரும்பு) 43, ஈஸ்வரன் கோயில் தெரு, கோபிசெட்டிபாளையம் -638452, Dt-ஈரோடு தொலைபேசி: 04285222397, 09842775059

21) புரவி முத்து (மா, சப்போட்டா, நெல்லி , ஜாமுன் , தேக்கு, மிளகாய், காய்கறிகள்) கனிசோலை , கொடுமுடி ரோடு, மேட்டுக்கடை , முதூர் , ஈரோடு, 638105 தொலைபேசி: 04257313855, 09965929098, 09965796522

22) ஆர் கோவிந்தசாமி (காய்கறிகள்) பழனியப்பா தோட்டம் , வெள்ளலூர் சாலை, சிங்கநல்லூர் , கோயம்புத்தூர் 641 005 செல் எண்: 09976450367, 093457 16598

23) ஆர் மணி சேகர் (நாட்டு மாட்டு வழங்குபவர்) தொலைபேசி: 08026543525, 04282221241, 09449346487 புத்திர கௌண்டர் பாளையம் , Dt-சேலம் 636 119

24) திருமதி ராஜேஸ்வரி செழியன் (நெல், தேங்காய், கரும்பு) 72/58, பங்களா தெரு , நாகரபட்டி , TK-பழனி, Dt-திண்டுக்கல் Mb-09442265057, 09442243380

25) ஏ மீனா (கரும்பு, தென்னை, வாழை, மிளகாய், காய்கறிகள்) 14, சிவன் கோயில் தெற்கு, தேவகோட்டை -630302, Dt-சிவகங்கை Mb-09444150195

26) பெ சோமசுந்தரன் (Awala) செல் எண் 09363102923 3 & 4, தரை தளம், புதிய எண் 55, ராஜூ நாயுடு ரோடு, சிவானந்தா காலனி, கோயம்புத்தூர் 641 012

27) வி கமலநகன் தொலைபேசி: 04175223677, 09894536616 நோர்தேருபூண்டு , Tq & Dt-திருவண்ணாமலை

28) கே.சி. முனிசாமி (தேங்காய், மல்பெரி) (20 விவசாயிகள் குழு) சந்திரன் வெண்ணிலா விவசாயிகள் கிளப், அக்ராவரம் , தபால்-வளையல் கரபட்டி, வழியாக மடனுர் , Dt-வேலூர்-635804 Mb-09787459820

29) ஆர் பாலசந்திரன் (சப்போட்டா, நெல்லி , வாழை) தொலைபேசி: 04132688542, 09442086436 3 / 14, மெயின் ரோடு, P.S. பாளையம், பாண்டிச்சேரி மாநிலம்-605107

30) TS தனோடா பானி (கரும்பு, நெல், காய்கறிகள்) A/P- ராமபக்கம், Dt-விழுப்புரம்-605705 தொலைபேசி: 04132699023, 09786484243

31) பி ஸ்ரீனிவாசன் (நெல், காய்கறிகள்) Mb-09791379855 மெயின் ரோடு, கொங்கம்புட்டு, தபால்-ராமபக்கம் , Tq & Dt-விழுப்புரம் – 605105

32) ஜி கிருஷ்ண மூர்த்தி (கரும்பு, நெல், சோளம், கேழ்வரகு, காய்கறிகள்) At-கொங்கம்பட்டு , தபால்-ராமபக்கம் , Dt-விழுப்புரம் தொலைபேசி: 04132699921

33) பி வெங்கடேஷ பெருமாள் (கரும்பு, காய்கறிகள்) Mb-09486366082. 2 / 105, மெயின் ரோடு, கொங்கம்பட்டு , தபால்-ராமபக்கம் , Dt-விழுப்புரம் – 605105

34) ஆர் ரவிக்குமார் (தேங்காய்) Mb-09943978256 ரவி கணினி, 2, பை பாஸ் ரோடு, உடுமலைபேட்டை, Dt-கோயம்புத்தூர்

35) என் அண்ணாதுரை (நெல்) Mb-09976383567 At-உமையாள்புரம் , தபால்-செவேந்தளிங்கபுரம் , Tq-முசிறி , Dt-திருச்சி-621202

36) பிரபு ராம் (நெல்) மணி நாய்டு தோட்டம் , குனியமுத்தூர் , கோயம்புத்தூர் Mb-09363147111

37) திருமதி அன்னபூர்ணா (பனை) 12, SSD சாலை, திருதம்கோடு , Dt-நாமக்கல் தொலைபேசி: 04288253310, 09842350275

38) முகேஷ், S / o எம் சதாசிவம் (நெல், தென்னை, வாழை) தொலைபேசி-04563288519 2/181-A, வடக்கு தெரு, சேது நாராயணபுரம் , via வற்றப் , Dt-விருதுநகர்

39) ஜி சக்திவேலு , பசுமை சேமிக்க குரல் NGO (நெல், பிளாக் கிராம், பச்சை கிராம்) 4 / 92, யாதவ தெரு, போஸ்ட்-சிக்கில் , Dt-நாகப்பட்டினம் Mb-09994200246

40) YM முத்துக்குமரன் (நெல், கரும்பு, காய்கறிகள்) Mb-09443062264 17, அரசு தோட்டங்கள், மில்லர் சாலை, ஆரணி -1, Dt-திருவண்ணாமலை

41) டி திம்மையா, S / o எம் திரு மேசாமி (தேங்காய், சூரியகாந்தி) A/P- கோனூர் , via கமிவடி , Dt-திண்டுக்கல்-624705 Mb-09360565596

42) விஜயசேகரன் (தேங்காய்) Mb-09842226668 கிராமம் -மதன்காடு அவில்பட்டி , தபால்-ஏ நாகூர் , TK – பொள்ளாச்சி, Dt-கோயம்புத்தூர்

43) ஏ இளங்கோ (நெல், நிலகடலை , பிளாக் கிராம், பச்சை கிராம்) Mb-09442693700 கிராமம் -கச்பகரனை , தபால்-அசொகபுரி, T.K. & Dt-விழுப்புரம் – 605 203

44) ஆர் ராமச்சந்திரன் (முந்திரி & முந்திரி பதப்படுத்தும்) கிராமம் -மனடிகுப்பம், தபால்-வல்லம், TK-பண்ருட்டி , Dt-கடலூர் – 607 805 தொலைபேசி: 04142266366, 09976993536, 09976993411

44) பி ஸ்ரீநிவாசன் (நெல் 20 ஏக்கர்) Mb-09791379855 கிராமம் -கொங்குபெட் , தபால்-ராம்பக்கம், Dt-விழுப்புரம்

45) டி எஸ் தண்டபாணி (கரும்பு) Mb-09786484243 1 / 92, சிவன் கோயில் தெரு, ராம்பக்கம் , Dt-விழுப்புரம்

46) எஸ் பாலமுருகன் (வாழை + வெங்காயம் + பட்டாணி + காய்கறிகள்) (கரும்பு உள்ளூர் பிளாக் வெரைட்டி) தொலைபேசி: 04288254864, 09843007477 எண் 6, C.H.B. காலனி, தெரு எண் 7, வேலூர் சாலை, திருச்செங்கோடு – 637 214, Dt-நாமக்கல்

47) டி கே பி நாகராஜன் (நெல், Osambu, மீன் குளம்) தொலைபேசி: 04374239757, 09944344608 கிழக்கு தெரு, இரும்போதலை , via -சாலியமங்கலம் , Dt-தஞ்சாவூர்

48) என் விவேகாநந்தன் (கரும்பு + வெங்காயம் + மாட்டு EPA + மிளகாய் + தானியங்கள்) Dt-ஈரோடு கிராமம் -சின்னப்பள்ளம் , தபால்-நேவிரிகிபேட்டை, TK-பவானி, Mb-09444294095

49) ஆர் காமராஜ் (கிச்சன் கார்டன்-அனைத்து காய்கறிகள்) Mb-09894227114, 09787488632 எண் 8, ஸ்ரீனிவாச நகர் , நல்லன் பாளையம் , கணபதி போஸ்ட் , கோயம்புத்தூர்

50) கே முத்துக்குமார், S / o எம் கதிரேசன் (காபி, ஆரஞ்சு) கரியாம்மாள் கோவில் தெரு, TK-கொடைகனல் , Dt-திண்டுக்கல் Mb-09486162801, 09486373767

51) ஆர் தேவ தாஸ் (நெல், காய்கறிகள் ) தொலைபேசி: 04622553541, 09443155309 A-4, A-காலனி, ஜவஹர் நகர், திருநெல்வேலி – 627 007

52) எம் லாவண்யா W / O முருகன் (தேங்காய்) Mb-09942665059, 04373-274705 கிராமம் -மருங்கப்பள்ளம் , TK-பெறவுரணி , Dt-தஞ்சாவூர்

53) எம் பெரிய சுவாமி (தேங்காய், Eucaliptus) Mb-09787742192, 04257-250249 Dt-ஈரோடு vi-கந்தசாமி பாளையம், தபால்-மங்கலப்பட்டி, TK-காங்கேயம் ,

54) கே முத்து குமரேசன் (நெல், நிலகடலை , மரவள்ளிக்கிழங்கு, மஞ்சள், குள்ள தேங்காய்) கிராமம் -கூலமேடு , தபால்-கடம்பூர் , TK-ஆத்தூர், Dt-சேலம் 636 105 Mb-09843638825

55) தமிழ் மணி , S / o பாதமுத்து (பருத்தி, தக்காளி) 55-A, பரா சக்தி டெக்ஸ்டைல், வைத்யா லிங்க புரம், TK-ஸ்ரீவில்லிபுத்தூர் , Dt-விருது நகர்

56) எஸ் உடையப்பன் (பருத்தி) கிராமம் -உசிலம்பட்டி , தபால்-கருங்கலகுடி , TK-மேலூர், Dt-மதுரை

57) ஏ கே நேதாஜி (நெல் உள்ளூர்) தொலைபேசி: 044126330217, 09940267627 கிராமம் -அங்காடு, தபால்-புதூர் , TK-பொன்னேரி , Dt-திருவள்ளூர்

58) கே வரதராஜன் (நெல்) Mb-09444554466 ஓரக்கேன் போஸ்ட், TK-பொன்னேரி , Dt-கடலூர்

59) பி ராமகிருஷ்ணன் (மஞ்சள், சேனைக்கிழங்கு, நெல்) 51, M.V.K. நகர், பெரம்பலூர்-621 212 தொலைபேசி: 04328275763, 09443954642

60) சி கரகராஜ் (வாழை + நிலகடலை ) Mb-09843719794 கிராமம் -நக்க சேலம் , TK-குன்னம் , Dt-பெரம்பலூர்

61) ஆர் பாண்டியன் (வாழை + நிலகடலை ) Mb-09344422966 11, இளங்கோ வளாகம், கோர்ட் ரோடு, தஞ்சாவூர்-1

62) ஜி மணிவண்ணன் (தென்னை, மா, நெல்லி ) தொலைபேசி: 04362279726, 09443155075 தஞ்சை சந்தோஷ் பேக்கரி , 85, கோர்ட் ரோடு, தஞ்சாவூர் 613 001

63) SR திருவேங்கடம் (தென்னை, தேக்கு, கிச்சன் கார்டன்) Mb-09486043165 வடக்கு தெரு, வடுவூர் – 614 019, Dt-திருவாரூர்

64) என்.கே. சக்திவேல் (தேங்காய், முருங்கை , சூரியகாந்தி, நிலகடலை , எள், அனைத்து காய்கறிகள்) வில்-மந்தபுரம் , V மேட்டு பாளையம் போஸ்ட் , via வெல்ல கோவில் – 638 111, Dt-ஈரோடு Mb-09865263375

65) வஜியடனே , S / o இருசப்பனே Mb-09786902281 எண் 493, பிள்ளையார் கோவில் தெரு, கட்டியம் பாளையம் , தபால்-பண்றகொட்டை , TK-பண்ருட்டி , Dt-கடலூர்

66) எஸ் பி சுப்பிரமணியன், S / o எஸ் கே பழனி (வாழை) Mb-09443711937 7/146-1, கரத்தன் காடு, செம்போட பாளையம், சதுமுகை அஞ்சல், சத்தியமங்கலம் TK, Dt-635 503 ஈரோடு.


நன்றி: ஜீரோ பட்ஜெட் இணைய தளம் / பேஸ்புக்

தகவல் : 

Saturday, October 13, 2012

மாற்றான் - விமர்சனம்.


கூட்டிக்கிட்டு போறதெல்லாம் ஆங்கிலம், ஹிந்தி. கல்லூரி காலத்தில் தமிழ் படத்தை த்யேட்டரில் பார்த்ததோடு சரி என்று தங்கமணி ஒரு பாட்டம் புலம்பி வைக்க...(ஏற்கனவே இந்த விஜய் ரசிகை துப்பாக்கிக்கு டிட்டெக் புக் செய்துவிடுவார் என்ற சந்தேகங்கள் இருந்தாலும்), சரி டிக்கெட்ட போடு என்றேன்...

பி.வி.ஆர், கடைசி இருக்கைகள் மூன்று (இப்போதெல்லாம் மகளுக்கும் சேர்த்து - 4 வயது ஆகப்போகிறது, மடியில் உட்காருவதில்லை) புக் செய்தாயிற்று.

படத்துக்கு கிளம்பும் முன் கேபிள் சங்கர் மாற்றான் விமர்சனம் என்று கூகிளில் தேடினேன். விமர்சனம் எழுதியிருந்தார். வழக்கம்போல அவரது அரசியலை அதில் புகுத்தியிருந்தாலும் படத்தில் லாஜிக் ஓட்டை அது இது என்று மரண மொக்கை என்று சொல்லாமல் சொல்லியிருந்தார். ஏற்கனவே கேபிள் சங்கர் மொக்கை என்று சொல்லிய படங்கள் சூப்பராகவும், அவர் சூப்பர் என்று சொல்லிய படங்கள் த்ராபையாகவும் இருந்து - அனுபவப்பட்டவன் என்ற முறையில் படத்தை சந்தோஷமாகவே எதிர்கொள்ள தயாராக இருந்தேன்...



நாலு நாற்பது படத்துக்கு 4 மணிக்கு காரை எடுத்தால் வழியில் கடும் ட்ராபிக். 5:10 க்கு தான் படத்துக்குள் நுழைய முடிந்தது. தமிழ் படத்தை பொறுத்தவரை க்ளைமாக்ஸில் உட்கார்ந்தாலும் கதை புரியும் என்ற நியதிப்படி, மூன்றாவது பாப்கார்னை கொறிக்கும்போது கதை புரிய ஆரம்பித்தது. 

என்னை பொறுத்தவரை படத்தின் ப்ளஸ்கள்..

இரண்டு சூர்யாக்கள் - அவர்களை திரையில் கொண்டுவர அவரது கடுமையான உழைப்பு.
காஜல் அகர்வால் - அழகாக இருக்கிறார். இளமையாக இருக்கிறார். சப்பி சீக்ஸ், ரோஸீ லிப்ஸ் என்று ரைம்ஸ் பாடலாம் போலிருக்கிறது..



இசை - ஹாரிஸ் ஜெயராஜின் இசையில் இரண்டு பாடல்கள் ரொம்ப நல்லா இருக்கு. அந்த பாடல்களை உயிர்ப்போடு கொடுக்க சூர்யா(க்கள்), காஜல் அகர்வால், இயக்குனர், உதவி இயக்குனர்கள், பாரின் லொக்கேஷன்கள்..பிண்ணனி இசையும் பரவாயில்லை. (இது என்ன கொரியன் மூவியா பிண்ணனி இசையிலேயே வாழுறதுக்கு ? எல்லாம் இதுக்கு இது போதும் போங்கயா)..



வசனம் : பல இடங்களில் அட போடவைக்கும் வசனம். சுபா நன்றாக எழுதியிருக்கிறார்... (க்ரைம் கதை மன்னன் ராஜேஷ்குமாரையும் கூட்டிவாங்கப்பா)



திரைக்கதை, இயக்கம் : பொதுவாக வேகமான திரைக்கதையை தர முயற்சி பண்ணியிருக்கிறார் கேவி ஆனந்த். அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார்.

குறை : படத்தில் சந்தானம் / வடிவேலு / விவேக் - அட குறைந்த பட்சம் ஒரு சிவ கார்த்திகேயனையாவது போட்டிருக்கலாம். ஆனாலும் அது பெரிய குறையாக தெரியாமல் படம் மின்னல் வேகத்தில் போகிறது. சில இடங்களில் சூர்யாவின் வசனமே காமெடியில் ஸ்கோர் செய்கிறது. (த்யேட்டர் ரெஸ்பான்ஸ்)..

மொத்தத்தில் படம் குடும்பத்தோடு பார்த்து ரசிக்க ஏதுவானது. (எந்த இடத்திலும் ஆபாச காட்சிகளோ, முகம் சுளிக்கவைக்கும் காட்சிகளோ, அருவருப்பான விஷயங்களோ இல்லை. அறுவை சிகிச்சை நடைபெறுவதை அப்படியே காட்டும்போது சில பேர் விரும்பாமல் போகலாம்..). என்னுடைய மார்க் - நூத்துக்கு 80.

டிஸ்கிகள் : சூர்யாவோ, கேவி ஆனந்தோ, காஜல் அகர்வாலோ, அல்லது படத்தை வினியோகிக்கும் தோழர்களோ எனக்கு மாமன் மச்சான் மச்சினி உறவு இல்லை. இந்த விமர்சனத்தின் பின்னால் எந்த அரசியலும் இல்லை. படத்தை காசு கொடுத்து திரை அரங்கில் பார்த்த வெறும் பார்வையாளனாக என்னுடைய சொந்த கருத்தை பதிவு செய்கிறேன்... ஏதோ ஒரு ஆங்கில படம் பார்த்து இயக்குனர் காப்பி அடித்தார் என்றும் பேசிக்கொள்கிறார்கள். அப்படி அந்த தகவல் உண்மையாக இருந்தால் அதை சிறப்பாகவே செய்திருக்கிறார்...வலைப்பதிவுகளில் வரும் விமர்சனங்கள் அந்த வலைப்பதிவர்களின் சொந்த கருத்துக்கள். அதனால் நீங்கள் படத்தை பார்த்து முடிவு செய்யுங்கள். 


Thursday, October 11, 2012

நித்யானந்தா Vs ஆர்த்தி ராவ் -> நீதிபதி கே சந்துரு


Vs


நீண்ட நாட்களுக்கு பிறகு பதிவு எழுதவேண்டிய தேவை இருக்கிறது. என்னுடைய வாசகர்கள் (அப்படி யாராவது இருந்தா) மன்னிக்க. இந்த பதிவு பரபரப்புக்காகவோ / சூடான இடுகையில் வரவேண்டுமென்றோ எழுதப்படுவதல்ல...

இன்றைய நாளேடுகளில் வந்திருக்கும் செய்தி. நித்யானந்தா நீதிமன்றத்தை அணுகியிருக்கிறார். ஆர்த்தி ராவ் மற்றும் லெனின் கருப்பன் ஆகியோர் செய்தி / காட்சி ஊடகங்களுக்கு தன்னைப்பற்றி பேட்டிகள் வழங்கக்கூடாது என்பது அவரது மனுவின் சாராம்சம்.

இதனை விசாரித்த நீதியரசர் சந்துரு (நீதிபதி என்று சொன்னால் போதும் என்று சொல்கிறார் வழக்கறிஞர் பிரபு ராஜதுரை. நீதியரசர் என்பது தனிமனித துதி என்கிறார். அப்ப சினிமாவில் காண்பிப்பதுபோல இப்பல்லாம் மை லார்ட் - யுவர் ஹானர் சொல்வதில்லையா ? ) - மறுபதி விஷயத்துக்கு வருகிறேன். நீதிபதி சந்துரு, இந்த மனுவை நிராகரித்திருக்கிறார்.

நீதிமன்றத்தை அணுகுபவர்கள் சுத்தமான கையோடு இருக்கவேண்டும் (Clean Hands) என்ற பதத்தை பயன்படுத்தியிருக்கிறார்.

நித்யானந்தா பற்றிய வழக்கு பெங்களூர் நீதிமன்றத்தில் இருக்கிறது, இன்னும் தீர்ப்பு வரவில்லை. அப்படி இருக்கையில் நித்யானந்தா Clean Hands இல்லாதவர் என்ற முன் முடிவோடு நித்யானந்தாவின் மனுவை நீதிபதி நிராகரித்திருக்கிறார். இது முறையா ? இதன் மூலம் செய்தி / காட்சி ஊடகங்களில் (அவை அவதூறா அல்லது உண்மையா என்பது வேறு வழக்கு) வந்த செய்திகளால் நீதிபதி இன்ப்ளூயன்ஸ் செய்யப்பட்டுவிட்டாரோ என்ற கேள்வி எழுகிறது என்று ட்விட்டர் குறுந்தகவல் தளத்தில் பதிவிட்டேன்.

நீதிபதி கே சந்துரு அவர்கள் ஒரு வழக்கில் போலீசாருக்கு விதிக்கப்பட்ட அபராத தொகையை (அவர்களது வழக்கு மேல் முறையீட்டில் தள்ளுபடி செய்யப்பட்டபிறகும் திருப்பி தர உத்தரவிடவில்லை - டெக்னிக்கலாக மறுத்துவிட்டார் (அப்பவே ஏன் பணத்தை திருப்பி கேட்டு வழக்கு போடவில்லை என்று சொல்லி)) என்று என் தந்தையார் ஆறு மாதம் முன்பு சொன்னது நியாபகம் வருகிறது...அதுவும் அந்த குறுந்தகவலுக்கு காரணம்..

வழக்கறிஞர் பிரபு ராஜதுரை எனக்கு பதிலாக கொடுத்த விடயங்களை, திரு ரெக்ஸ் அருள் மறுத்திருக்கிறார்...

வழக்கறிஞர் பிரபு ராஜதுரையின் பதில்கள்..

Prabhu Rajadurai ‏:@prabhuadv

clean hand principle will be applied only in cases where one seeks discretionery relief like a writ petition

However the clean hands principle won't apply here Judges sometimes stretch it too far, even to personal character & repute


செந்தழல்_ரவி ‏@senthazalravi
@prabhuadv அதை தான் சார் நான் சொல்கிறேன். நீதியரசர் அதிகப்படியான வார்த்தைகளை உபயோகப்படுத்துகிறார் என்று.


செந்தழல்_ரவி ‏@senthazalravi
@prabhuadv இது போல சிரி சிரி ரவிஷங்கர் மீது அவதூறு செய்பவர்கள் பற்றிய வழக்கு வந்தால் ( அவர் மீது இப்போது எந்த குற்றச்சாட்டும் இல்லை)


Rex Arul ‏@rexarul\

@prabhuadv /:clean hand principle will be applied only in cases where one seeks discretionery relief like a writ petition:/ @senthazalravi

@prabhuadv Prabhu, you are DEAD wrong on this fallacious claim. You're entitled to your opinion, which can be wrong or right

@prabhuadv But, here you are wrong. Supreme Court of India has repeatedly clarified the "clean hands" doctrine. @senthazalravi 3/

@prabhuadv It never said that "clean-hands" doctrine applies only to WRIT & not ORIGINAL or APPELLATE side. That's ur view

@prabhuadv Supreme Court of India has repeatedly clarified that any litigant-writ or otherwise-approaching w/ vexatious @senthazalravi 5/

@prabhuadv claims & unclean hands to mislead by prevarications & outright lies comes under "fraud vitiates all" doctrine @senthazalravi

@prabhuadv Right from "State of Haryana Vs. Karnal Distillery Co Ltd" to "G Jayshree & ors Vs. Bhagwandas S Patel & ors"

@prabhuadv it's simple & clear: do NOT lie to the court. Get that Prabhu? Do NOT lie to the courts. That's heart of it @senthazalravi 8/

@prabhuadv "It is settled law that a person who approaches the Court for grant of relief, equitable or otherwise " @senthazalravi 9/

@prabhuadv " is under a solemn obligation to candidly disclose all the material/important facts " @senthazalravi 10/

@prabhuadv "which have bearing on the adjudication of the issues raised in the case. In other words, " @senthazalravi 11/

@prabhuadv "he owes a duty to the court to bring out all the facts and refrain from concealing/suppressing" @senthazalravi 12/

@prabhuadv "any material fact within his knowledge or which he could have known by exercising diligence expected " @senthazalravi

@prabhuadv "of a person of ordinary prudence.If he is found guilty of concealment of material facts or making an attempt "@senthazalravi

@prabhuadv "to pollute the pure stream of justice, the court not only has the right but a duty to deny relief to such person" @senthazalravi

@prabhuadv Those were Supreme Court of India's words on "unclean hands" doctrine & "fraud vitiates all". @senthazalravi 15/

@prabhuadv You may have your own compulsions to attack "clean hands" doctrine as I can understand.But,pls don't mislead

@prabhuadv What you tweeted is your misunderstanding of law. Jurisprudence & settled-law is different than ur opinion

@prabhuadv To even remotely impute "unclean hands" not applicable 2 other branches of law except Writ as u say is travesty.

@senthazalravi நான் இந்திய உச்ச நீதிமன்ற மேற்கோள்களை காட்டினேன். அமெரிக்காவில் perjury என்னும் கோட்பாட்டுக்கு அருகில் வரும் @prabhuadv

@senthazalravi ஒரு case law evolution தான் இந்திய நீதிமன்றங்களின் "unclean hands" concept. இதன் அடுத்த பரிணாமம் perjuryஐ @prabhuadv

@senthazalravi வேரோடு அறுப்பது தான். இந்திய உச்ச நீதிமன்றம் சென்ற ஆண்டு இது குறித்து வேறு ஒரு landmark தீர்ப்பு வழங்கியது @prabhuadv

திரு ரெக்ஸ் அருள் தான் ஒரு வழக்கறிஞர் அல்ல என்றும், தான் ஒரு பொறியாளர் என்றும் தெரிவித்திருக்கிறார்..சட்ட புத்தகங்களில் இருந்தெல்லாம் உதாரணம் தருகிறார்...கலக்குறீங்க...இது பற்றி உங்கள் இருவரின் முழுமையான கருத்தை ட்விட்டர் குறுந்தளத்தில் (இவர்கள் இருவருக்கும் நேரம் இருக்கும்போது எழுதினார்கள் என்றால் படிக்க அருமையாக இருக்கும்)...

பதிவில் இருக்கும் படங்களை கூகிள் இணையத்தில் இருந்து எடுத்து பயன்படுத்தியிருக்கிறேன். சம்பந்தப்பட்டவர்கள் (நித்யானந்தா அவர்கள் அல்லது ஆர்த்தி ராவ் அவர்கள் கேட்டுக்கொண்டால் நீக்கிவிட தயாராக இருக்கிறேன்..ஸ்ஸ்ஸ்ஸ்ப்பா ரொம்ப சட்ட சிக்கல் பாக்கவேண்டியிருக்கு இப்பல்லாம்..)

கொஞ்சம் சம்பந்தம் இல்லாத அப்டேட்: கூடங்குளம் பிரச்சினையில் ஆக்கப்பூர்வமான கேள்விகளுடன் உச்சநீதிமன்றத்தை அணுகி அதில் மத்திய அரசு / அணுசக்தி கழகம் மூன்று வாரத்துக்குள் பதில் அளிக்கவேண்டும் என்ற வரலாற்று தீர்ப்பை பெற்றுள்ளார்கள் பூவுலகின் நன்பர்கள் (வலைப்பதிவர்கள் அனைவரும் அறிந்த வழக்கறிஞர் சுந்தர்ராஜன்). வாழ்த்துக்கள் !!!! மிக்க மகிழ்ச்சி...


Wednesday, September 26, 2012

சோதனை பதிவு

------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------


இதையும் கடைசி வரைக்கும் ஸ்க்ரோல் பண்ணி பாக்குறீயே தோழா/தோழி நீ அவ்ளோ வெட்டியாவா இருக்க ? 

Wednesday, April 06, 2011

All about Dynamic Views for Readers - Blogger Help

கூகிள் வழங்கும் டைனமிக் வியூஸ். நமது தளத்தினை பல வடிவங்களில் காட்டலாம்...

Wednesday, March 23, 2011

பவர் ஸ்டார் டாக்டர் சீனிவாசன் ரசிகர் மன்றம்

எங்களது முந்தைய தானை தலைவரான ஜே.கே ரித்திஷ் (மத்திய பாராளுமன்ற உறுப்பினர், திராவிட முன்னேற்ற கழகம்) இப்போது எல்லாம் நடிப்பதில் அவ்வளவு அக்கறை காட்டாமல் இருப்பது அனைவரும் அறிந்ததே. அவர் படம் வரும் நாள் பிளாட்டினம் நாள் என்று நாங்கள் காத்திருந்தபோது, எங்கள் தாகத்தை கொஞ்சமாவது தணிக்கும் முயற்சியாக, பவர் ஸ்டார் டாக்டர் சீனிவாசன் சில பல படங்களை கொடுக்கவிருக்கிறார்.

ஏற்கனவே வெளிவந்த லத்திகா என்ற காவியம், கலைஞரின் இளைஞனை விட வேகமாக ஓடுகிறது என்று தகவல்கள் வரும் வேளையில், ஆஹா. வந்தானே எமது பவர் ஸ்டார், வருகிறதே அடுத்தடுத்து படங்கள் என்று நாங்கள் இறுமாந்து, இறும்பூது எய்யும்போது, ஒருவர் யார் இந்த டாக்டர் சீனிவாசன் என்று ஒரு கேள்வியை போகிறபோக்கில் வீசிச்சென்றுவிட்டார்.  நெஞ்சு கொதிக்கிறது. கொஞ்சம் படங்களை போட்டு அவரை அறிமுகம் செய்யும்வாக்கில் இந்த இடுகை.

இந்த இடுகை, பவர் ஸ்டாருக்கு பவர் கொடுக்க அல்ல. அவர் பவரை உங்களுக்கு காட்ட. இந்த இடுகையில் அவர் புகழ் பாடும் நடவடிக்கைக்கு பதில், வந்துள்ள, வரப்போகும் வெள்ளிவிழா படங்களில் இருந்து சில படங்கள் உங்கள் பார்வைக்கு.








வாழ்க பவர் ஸ்டார். வீழ்க அவர் புகழை குலைக்க நினைக்கும் திம்மிகள்.

Monday, December 27, 2010

அண்ணன் உண்மை(த்)தமிழனுக்கு கடிதம்..

அண்ணன் உண்மைத்தமிழன் அவர்களுக்கு..

நான் தங்களின் 'மீண்டும் போலிப்பிரச்சனை ! தாங்கலைடா சாமி. முருகா. ஏன் இந்த சோதனை' என்ற புலம்பல் பதிவு பார்த்தேன். அண்ணே இது உங்களுக்கே ஓவரா தெரியலையா ? தாங்கள் குறிப்பிட்ட உஜிலாதேவி என்ற தளத்தில் எந்தவிதமான ஆபாச மேட்டர்களோ, அட்லீஸ்ட் அனுஷ்கா படங்களோ கூட இல்லாமல் வெறும் வெத்துவேட்டாக உள்ளதே ? இதை போய் எப்படி நீங்கள் போலிப்பதிவு என்று சொல்லலாம் ? அல்லது நார்த் இண்டியன் வாசனை வீசும் இந்த பெயரிலேயே அனைவரும் கிக் ஆகிவிடுவார்கள் என்று நினைக்கிறீர்களா ? தமிழன் அவ்வளவு காய்ந்து போயா கிடக்கிறான் ?

மேலும் உண்மைத்தமிழன் என்ற பெயரை நீங்கள் பேடட்ண்ட் / இண்டலக்சுவல் ப்ராப்பர்ட்டி போல கருதுவது எந்த விதத்தில் நியாயம் ? அல்லது தாங்கள் மட்டும் தான் உண்மைத்தமிழன் மற்ற தமிழன் எல்லாம் பொய்த்தமிழன் என்பது போல கருதுகிறீர்களா ? உங்களுக்காக த் என்ற எழுத்தை கஷ்டப்பட்டு மாற்றி தனித்து தெரியும்படி உண்மை தமிழன் என்று தெளிவாக உள்ளதே ?

அதுவும் அந்த உண்மை தமிழனும் ஆன்மீகம் சோதிடம் ராமாயண ஆய்வு, மகாபாரத ஆய்வு (பெரிய சயிண்டிஸ்டா வருவார் பாருங்க) போன்ற ஆத்திக அயிட்டங்களை தானே பிரித்து மேய்கிறார் ?

தாங்கள் குறிப்பிட்ட ஜாக்கி சேகர் ஜாண்டிவெஜ் அண்டு நாண்டிவெஜ் பதிவில் அவர் என்ன ஆபாச பின்னூட்டமா போட்டிருக்கிறார் ? இன்னும் நூறு நாட்களில் சென்னை சரிசெய்யபடும். பகவானுக்கே வெளிச்சம். என்று எழுதிவிட்டு தன்னுடைய பதிவின் சுட்டி ஒன்றை கொடுத்துவிட்டு போய்விட்டார். அதை இவ்வளவு பெரிதுபடுத்துவது முறையா ? நீதியா ? இது தான் தாங்கள் சூட்டிக்கொண்ட உண்மைத்தமிழன் (234345345345345345) என்ற பெயருக்கு அழகா ?

பல ஸ்க்ரீன் ஷாட்டுகளை எடுத்து நீளமாக (ஏற்கனவே உங்கள் பதிவுகள் புத்தகம் அளவுக்கு இருக்கிறது, உலாவியில் லோட் ஆக அரை மணி நேரம் ஆகிறது என்ற புகார் உள்ளது) பதிவு போட்ட நீங்கள், திரு உஜாலாதேவி அலைஸ் உண்மை(த் மிஸ்ஸிங்)தமிழன் தன்னுடைய அலைபேசி எண்ணையும் வெளியிட்டுள்ளாரே ? ஒரு போன் செய்து கேட்டிருக்கலாமே ?

போகிற போக்கைப்பார்த்தால் கடிதத்தில் தங்கள் உண்மையுள்ள என்று எழுதுபவர்கள் இங்கிதம் தெரியாமல் தங்கள் பெயரின் முதல் வார்த்தையை உபயோகப்படுத்திய போலிகள் என்று சொல்வீர்கள் போலிருக்கிறதே ? ஒரு கற்பனைக்காக வைத்துக்கொள்வோம், இது குறித்து தாங்கள் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து உங்களுக்கு சாதகமான தீர்ப்பை அளித்துவிடுகிறார்கள். உண்மை என்ற வார்த்தையை உபயோகப்படுத்துகிறவர்கள் எல்லாம் போலிகள் என்று. அய்யகோ. நினைத்துபார்க்கவே கொடூரமாக உள்ளதே ! (கர்ணகடூரம் என்று எழுதலாம் என்று தான் நினைத்தேன். கர்ணன் என்பது சிவாஜி படம், மகாபாரத கேரக்டர். யாராவது சண்டைக்கு வந்திடப்போகிறார்கள்)

இம்புட்டு சட்டம் பேசும் நீங்கள் உண்மை(த் இல்லை)தமிழன் அவர்களை போலி என்று எப்படி சொல்லப்போச்சு ? அவர் வருங்காலத்தில் கன்னாபின்னாவென பிரபல பதிவர் ஆகியபிறகு, பழைய போலி மேட்டர் எல்லாம் எடுத்து படித்துவிட்டு, தன்னை போலியோடு ஒப்பிட்டு இவ்வளவு அவமானப்படுத்தியிருக்கிறாரே இந்த உண்மை(த் இருக்கு)தமிழன் என்று வருந்தினால் நீங்கள் எப்படி அவரை ஆற்றுப்படுத்தப்போகிறீர்கள் ?



நீங்கள் இப்போது போட்டுள்ள பதிவு, தேவை-இல்லாத-சுய-இரக்க-மேனியா என்ற வியாதியால் பீடிக்கப்பட்டவர்கள் செய்யும் செயல். அருகாமையில் உள்ள ஆங்கில மருத்துவ கெமிஸ்டிடம் தன்னம்பிக்கை-டானிக்-மிக்ஸிங்லெஸ் கொஞ்சம் வாங்கி ராவாக உள்ளெ விடவும். உங்கள் வயசுக்கு தகுந்தது போல அஞ்சலிதேவியின் கவர்ச்சி படம் ஒன்றை இட்டுள்ளேன். பார்த்து ரசிக்கவும்.

போட்டோவில் புளிமூட்டை போல போஸ் கொடுக்கும் அந்த நபர், பார்ப்பதற்கு பச்சப்புள்ளை போல இருக்கிறார். அவரை போய் நீங்கள் எப்படி போலி என்று சொல்லப்போச்சு ? ஆகவே உங்கள் தவறை நினைத்து அப்பன் முருகனிடமும் உண்மை தமிழனிடமும் மன்னிப்பு கேட்டு பகிரங்க பதிவு வெளியிடுமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.

இவன்,
தங்கள் உண்மை(?) யுள்ள
செந்தழல் ரவி

பிற்சேர்க்கை:

உண்மையான உண்மைத்தமிழன் இளையராஜா பிடிக்கும் அந்த படம் பிடிக்கும் என்று போட்டிருப்பது போல உண்மை தமிழனும் போட்டிருப்பது கூட தவறு என்று சொல்லியிருக்கிறார் அண்ணன். இது என்ன காமெடி ? ரசனை இரண்டு பேருக்கும் ஒன்றாக இருக்கக்கூடாதா ?

மேலும் பரிதாபப்பட்ட அந்த ஜீவன் உண்மையாரின் பதிவில் வந்த அய்யா நான் என் பெயரையே மாற்றிக்கொள்கிறேன் என்று சொல்லிய இந்த பின்னூட்டம் :


உண்மை தமிழன் said...

பாஸ் மன்னிச்சுருங்க உங்கள் பெயர் உண்மை தமிழன் என்று எனக்கு தெரியாது மன்னிச்சுருங்க எனக்கு இந்த பெயர் பிடிச்சிருந்து அதனால் வச்சேன் இப்போதான் ஜாக்கி அண்ணன் ப்ளாக் பார்த்தேன் அதுல உங்க கமெண்ட் இருந்து அதனால் உங்கள் ப்ளாக்பக்கம் வந்தேன் மீண்டும் மன்னிச்சுருங்க உங்களுக்கு பிடிக்க வில்லை என்றால் மாத்தி கொள்கிறேன் பதிலை எதிர் பார்த்திருக்கும் உங்கள் தமிழன்

இதையும் படிச்சி பாருங்க ( ஒரு பதிவின் சுட்டியை கொடுத்துள்ளார். இவரின் கடமை உணர்ச்சிக்கு அளவே இல்லை )

Read more: http://truetamilans.blogspot.com/2010/12/blog-post_1410.html#ixzz19NscPgbo

Thursday, April 22, 2010

அதிர்ச்சி 2035



மே 18, வருடம் இரண்டாயிரத்து முப்பந்தைந்து..முதல்வர் லெனின் தன்னுடைய வேளச்சேரி வீட்டின் ஓய்வறையில்..

ஐந்தாவது முறை முதல்வரானதற்கான பாராட்டு விழா பற்றிய செய்திகளை Dailyகரன் பத்திரிக்கையில் படித்துக்கொண்டிருந்தார். சுருதிஹாசன் மகள் சூர்யாஹாசனின் கெட்ட ஆட்டம் கலர் படங்களாக கண்ணில் விரிந்தது..

உதவியாளர் மேகநாதன் ஒரு இளைஞரை அழைத்துவந்தார்.

சார் இவர் காலையில் இருந்தே உங்களை பார்க்கனும் என்று காத்திருக்கிறார்..

யார் தம்பி நீங்க ? என்ன வேண்டும் ?

என்னை நல்லா உற்றுப்பாருங்க..!! உங்களுக்கே தெரியும்...!!!

கண்களை சுருக்கி கொஞ்ச நேரம் உற்றுப்பார்த்த முதல்வரின் கையில் இருந்த செய்தித்தாள் தானே நழுவியது.

அதிர்ச்சியில் உறைந்த அவரது வார்த்தைகளும் உடைந்து குழறியது..

ந் நீ நீங்க நீங்க !!!

_____%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%_____

நாமல் கூஜபக்சே தன்னுடைய பல் மருத்துவரிடம் கிளம்பிய போது மணி ஆறு. மே மாதம் 18 ஆம் தேதி நியூயார்க் நகரில் நடைபெறும் ஐ.நா பாதுகாப்பு சபை கூட்டத்தில் இந்தியாவுக்கு ஆதரவாக வாக்களிக்க கிளம்பி வந்த இலங்கை ஜனாதிபதி இப்படி தனியே கிளம்பிப்போவது ஒன்றும் புதிதல்ல..

பல் மருத்துவரின் மருத்துவமனை..

சிரித்த முகத்துடன் வரவேற்ற பல் மருத்துவரை எங்கோ பார்த்தது போல இருந்தது...

ஹெல்லோ என்றபடி அறையின் உள்ளே நுழைந்தவரிடம் சில வினாடி தயக்கம்..

என்ன தயங்குகிறீர்கள் ?

நீங்கள் ? ஆட்ரியன் என்பவரின் தானே நான் அப்பாயிண்மெண்ட் வாங்கினேன் ?

நீங்கள் மேலே போகும்வரை ஆட்ரியன் மயக்கத்தில் இருந்து எழமாட்டார் ?

என்ன ?

மருத்துவரிடம் கையில் கச்சிதமாக ஒரு மைக்ரோ துப்பாக்கி அமைதியாக நீண்டது.

நாமலுக்கு இப்போது உடலெல்லாம் உதறத்தொடங்கிவிட்டாலும், எதிரில் இருப்பது யார் என்று தெரிந்துபோனது.

யூ யூ யூ ?

சத்தமில்லாமல் செத்துப்போனார் ஒரு ஜனாதிபதி.

_____%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%_____

மதுரை. மே பதினெட்டு. நாம் தமிழகம் கட்சியின் இருபத்தைந்தாவது ஆண்டு விழா கொண்டாட்டத்துக்கு வந்து பாண்டியன் உறைவிட உணவகத்தில் தங்கியிருந்த இயக்குனர் நீமான்.

அண்ணே ? யாரோ ஒரு தம்பி நேற்று காலையில் இருந்தே காத்திருக்காங்க. ஜெர்மனியில் இருந்து வந்திருக்கார். மாநாட்டுக்கு போறதுக்கு முன்பு ஒரு ரெண்டு நிமிஷம் அந்த தம்பிக்கிட்ட பேசிருங்க.

சரி வரச்சொல்.

உள்ளே நுழைந்தவரின் முகம் எங்கோ பார்த்த ஒரு முகத்தை நியாபகப்படுத்த, கண்களை சுருக்கினார் நீமான்..

அண்ணே. என்னை தெரியலையா ?

யார் என்று புரிந்துபோய், உடல் உதறி, சிலிர்ப்பு அடங்காமல் இருக்கையில் இருந்து எழுந்து பாய்ந்து போய் கட்டியணைத்துக்கொண்டார்.

தம்பி நீங்க ? நீங்க ? அப்படியே இருக்கீங்க !!

அவர் கட்டியணைத்தது தமிழ் ஈழத்துக்காய் போராடிய மாவீரன் பிரபாகரன்.

_____%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%_____

அதே வினாடியில் இலங்கை NDTV செய்தி சேனலில் ஸ்க்ரோல் நியூஸ் ஓட ஆரம்பித்தது.

இலங்கை முன்னாள் அமைச்சர் பருணா தனது அறையில் தூக்கில் தொங்கினார். அவர் யாரையோ பார்த்து பயந்து இந்த காரியத்தை செய்ததாக அவரது பணியாளர் சாட்சியம்.

முன்னாள் ஜனாதிபதி கோத்தாபய ராசபக்சே மாடிப்படியில் தடுக்கி விழுந்து சாவு.

இலங்கை பலாலி விமானதளத்தில் இருந்த போர் விமானங்கள் ஐந்தை காலையில் இருந்து காணவில்லை.


_____%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%_____

தேவையற்ற பழைய செய்திகள்: தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் தாயார், இந்தியாவில் சிகிச்சை எடுத்துக்கொள்ள சென்னை உயர்நீதிமன்றம் மே 18 2010 அன்று அனுமதி அளித்தது

2010 ஆம் ஆண்டு ஐஸ்லாந்தில் வெடித்த எரிமலைகள் காரணமாக ஸ்காண்டிநேவியா மூன்று வாரங்களுக்கு முடங்கியது.

2012 ஆம் ஆண்டு தென் இந்தியாவில் ஏற்பட்ட கடும் பூகம்பத்தில் மூன்று லட்சம் பேர் பலியானார்கள்.

2015 ஆம் ஆண்டு உயிர்கொல்லி நோய் எயிட்சுக்கு நியூசிலாந்தில் மருந்து கண்டுபிடிக்கப்பட்டது.

2017 ஆம் ஆண்டு அரபு நாடுகளில் விபச்சாரம் சட்டப்பூர்வமாக்கப்பட்டது.

2019 ஆம் ஆண்டு மாலத்தீவு முழுமையாக கடலில் மூழ்கியது. எவாக்குவேட் செய்யப்பட்ட மக்கள் ஆஸ்திலேயியா டாஸ்மேனியாவில் குடியமர்த்தப்பட்டார்கள்.


க்ளோனிங் 2021 ஆம் ஆண்டு சட்டப்பூர்வமானது. இது ஏற்கனவே க்ளோனிங் முயற்சியில் இருப்பவர்களுக்கும் பொருந்தும் என்று வரையறுக்கப்பட்டது.

_____%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%_____

Wednesday, April 21, 2010

டோண்டு.....கிசு கிசு !!!



முரளிமனோஹர்* விஷயத்துக்கு பிறகு இருபது பதிவுகள் டோண்டு சாரை திட்டி கச்சை கட்டின. அவரை தமிழ்மணத்தில் இருந்து நீக்கவேண்டும், ஆட்டத்திலேயே சேர்க்கக்கூடாது என்று எல்லாம். அசரலையே மனுஷன்.

முரளி மனோஹர் என்று பின்னூட்டியதில் எதாவது ஆபாசம் இருக்கிறதா, இல்லையே ? கல்கி கூட புனை பெயரில் எழுதினாரே என்று எல்லார் வாயையும் அடைத்தார்.

முரளி மனோஹர் என்று புனைப்பெயரில் எழுதுவது ஓக்கே. ஆனால் அந்த பெயரில் ஒளிந்துகொண்டு பெரியார் ஒரு கன்னடன், அவன் ஒரு சிறியார் என்றெல்லாம் வசைமாரி பொழிந்ததை பற்றி யாரும் சமீபத்தில்** நீங்கள் இப்படி சொன்னீர்களே என்று கேட்கவில்லை.

இப்போது குறைந்தபட்ச மனிதாபிமானம் கூட இல்லாமல் அன்னை பார்வதி அம்மாவை பற்றி இப்படி வன்மத்துடன் கூடிய யூக பதிவு ஒன்றை எழுதியிருக்கிறாரே என்று பல பதிவர்கள் உணர்வோடு பொங்குகிறார்கள். அதில் விழும் வாக்குகளும் அமோகம்..பலே பலே. மஸோக்கிஸ்டு*** என்பவர்கள் தன்னை துன்புறுத்துவதில் சுகம் காண்பார்களாமே ?

இந்த பதிவில் சில கிசு கிசு மேட்டர்கள். யார் என்ன என்று நீங்களே ஊகித்துக்கொள்ளுங்கள். கண்டுபிடித்தவர்கள் பின்னூட்டத்தில் சொல்லவேண்டாம்.

1. கையில் ரெண்டு ரூபாய் ஐம்பது காசோடு திருச்சியில் இருந்து தொலைபேசியில் அழைத்த நன்பரிடம், அப்படியே ஒரு பதிவு போட்டிருக்கேன். ஒரு பின்னூட்டம் போட்டுருங்க என்று கேட்டு அந்த முருக பக்தரையே கொலைவெறியாக்கியவர். சத்தியமான உண்மை.

2. ஜெர்மன் ப்ரெஞ்சு கல்வி பற்றி தொலைபேசியில் அழைத்த வலைப்பதிவர் ஒருவரின் மனைவியின் குலம் கோத்திரம் பற்றி சப்ஜாடாக தொலைபேசியில் கேட்டு அறிந்தவர், அந்த நேரத்தில் அவரது எதிரியாக இருந்த போலிடோண்டுவிடம் இதை தெரிவித்துவிட, அன்று இரவு 12 மணியளவில் அந்த பதிவரின் மனைவியின் சாதியை சொல்லி திட்டி பின்னூட்டம் பெற்றவர் அக்கினி சூரியன் பதிவர்.

3. சென்னை தி.நகரில் ஒரு ஹோட்டலில் சிக்கன் பிரியானியும் பியரும் சாப்பிட்டபின், சிகரெட்டுக்காக கையை நீட்டியது மேற்ச்சொன்ன அக்கினி சூரியனிடம். அப்போது அங்கே இருந்த ஒரே சிகரெட்டை கைப்பற்றி இவர் பத்தவைத்துவிட்டதால் அங்கே அரைமப்பில் இருந்த படக்கலையான் இதை சொல்லிக்காட்டி பதிவு எழுத, அதனால் படு உஷ்ணமாக நான் அந்த பதினாலு ரூ ஐம்பது பைசாவை தந்துவிடுகிறேன் என்று அக்கினிச்சூரியனுக்கு தொலைபேசினார். கடைசிவரையில் காசு வந்தபாடில்லை.

4. தன்னுடைய ஜெயா டிவி பேட்டியை எடுத்துவந்து கொடுத்த பையனுக்கு உதவிக்கு நன்றி என்றெல்லாம் பதிவிட்டார். பிறகு சமயம் கிடைத்ததும், அந்த பையனை ஒரே வாறாக வாறினார். அவனே துஷ்டன் என்று பதிவிட்டார். அவன் துஷ்டனோ அதிஷ்டனோ. என் பார்வையின் அவன் என் நன்பன்.

5. தனக்கு இளைஞர் பட்டாளமும் உதவுவதாக போலிடோண்டுவிடம் கூறி அதற்கு ரெபரன்ஸாக அவர் கொடுத்த பெயர் ஒரு திருச்சிக்காரன். அவனோ அப்பாவி. போலி டோண்டுவின் கடுந்தாக்குதலுக்கு உள்ளாகி மன உளைச்சலுக்கு ஆளான அவனிடம் கை காட்டப்பட்டவர் மேலே உள்ள அதிஷ்டர். அவரும் இவரும் முட்ட, நடுவில் கை தட்டியது சாட்சாத் யாரு ? அதை நீயே உணர்ந்து பாரு..

6. தொடர்ந்து தனது பதிவுகளில் பின்னூட்ட ஆதரவு கொடுத்த இந்துத்துவ கோஷ்டிகள், இவர் தமது பிரச்சாரத்துக்கு உதவுவார் என்று போலிடோண்டுவின் ஆபாச தாக்குதலையும் தாண்டி இவருக்கு உதவ, இவர் திடீரென எழுதிய சில முட்டாள்தனமாக கருத்துக்களாலும், இவரே மதத்தை தாக்குவதாலும், அலறி துடித்து ஓடினர். குமரி மைந்தன் கருநீல கண்ணுடைய, வட்டத்தில் பாதி ஆரம், ஆரத்தில் பாதி மீதி என்பது அந்த பதிவர் பெயர்.

என்னமோப்பா. ஏதோ என்னால முடிஞ்சது..!!

ஆனால் இந்த மனிதாபிமான பிரச்சினையை வைத்து திரட்டிகள் இவரை நீக்கனும், கூகிள் இவர் ஐடியை முடக்கனும் என்றெல்லாம் எழுதி உங்கள் எனர்ஜியை வீணடிக்கவேண்டாம். போடா ஜாட்டான் என்று சொல்லிவிடும் இந்த கோட்டான். இவன் அசர மாட்டான். (எதுகை மோனைக்காக எழுதிட்டேன் டோண்டு சார்)

தனக்கு எல்லாம் வல்ல தகர நெடுங்குழைகாதன் அணுக்கிரகம் இருப்பதாக நம்புவன் எப்படியும் உடைய மாட்டான். இன்னும் சுப்ரமணிய சாமியும் சோவும் வாழும் தமிழ்நாட்டில் இவருக்கு என்ன குறைச்சல் ? ஆனால் இப்படி பெருவாரியான வாக்குகளும் எதிர்பதிவுகளும் நாமும் குறைந்தபட்ச மனிதாபிமானம் உள்ள நாட்டில்தான் வாழ்கிறோம் என்று காட்டுவது நிறைவு.

ஏன் பார்ப்பணீயம் என்ற சொல்லை பயன்படுத்துகிறீர்கள், உயர் சாதீயம் என்ற சொல்லை பயன்படுத்துங்கள் என்று ஜாதிப்பாசத்தோடு சொல்பவர். எந்த ஒரு பொருளும் அல்லது கண்டுபிடிப்பும் அதனை கண்டுபிடித்தவர் பெயரை வைத்து சொல்வது இயல்புதானே ? உதா (ராமன் விளைவு, டாப்ளர் எபெக்ட்). இந்த கேள்வியை கேட்டால் மழுப்புவார்.

ஆனால் இந்த பிரச்சினையை வைத்து பதிவு போட்டவர்கள் நாளைக்கு ஒரு மொழிபெயர்ப்பு வேலை என்று போங்கள். கறாறாக பேசி தொகையை வாங்கிக்கொண்டு வேலைக்கு எந்த குறையும் வைக்காமல் சிறப்பாக செய்து கொடுப்பார். அது தான் டோண்டு !!!

பி.கு :

இவருக்கு வழங்கப்பட்ட பல பட்டங்களில் சில காண்டு கஜேந்திரன், போண்டா மாதவன்****.

..
..
..
* முரளிமனோஹர் என்ற புனைபெயரில் வன்மமான தாக்குதலை பதிவர்கள் சந்திக்க நேர்ந்தது.
** சமீபத்தில் - சமீபத்தில் என்பது டோண்டு ராகவன் அடிக்கடி உபயோகப்படுத்தும் வார்த்தை. உ.தா : சமீபத்தில் 1976 ல்
*** மசோகிஸ்டு - தன்னை துன்புறுத்தி அதில் இன்பம் காண்பவர்
**** ரத்னா கபே சந்திப்புகளில் போண்டாவை ஆர்டர் செய்து தின்றதால். (பில் சம அளவில் பிரிக்கப்படும்.)
....
....

Tuesday, April 20, 2010

பார்வதியம்மா. எனது எண்ணங்கள்.

02vaiko.jpg (336×450)

எனக்கு மட்டும் தான் தெரியும் வள். நான் மட்டும் தான் உரிமை கொண்டாடுவேன் வள். வள் வள் வள் லொள் வள் வள் அவ்வ்வூவூவூ

nedumaran06.jpg (350×327)

ரகசியமா வெச்சிருந்தேன் ளொள் ளொள். குடுத்த காசுக்கு அவ்ளோதான் கூவமுடியும் வள்...ஹவ் ஹவ் லொள் வொள்ள்ள்ள்...அகீகீ வள்ள்.

thiruma.jpg (300×399)

எதுவுமே முடியல..முடியல முடியல. என்னதான் செய்யறது வள். என்னால ஆனமட்டும் பார்த்துட்டேன் வள். என்னைய ஆட்டத்துலே சேக்கமாட்டேங்குறானுங்க வள்..கொக்கரக்கோ. வள் லொள் லொள் லொள் லொள். கோகோக்க்க்கோக்க்க்கொக்க்கொக்க லொள் லொள்



ஹைய்யா ஜாலி ஜாலி. கெழவிக்கு கஷ்டம். எப்படி பழிவாங்குனோம் பார்த்தியா வள் வள்...அவ்வ்வு வூவூவூ வள்.

ki.veeramani.jpg (311×278)

அந்தம்மா தான் காரணம்..கொக்காரக்கோ. வள் வள் வள்..அவதான் அவதான் காரணம் வள்..

ramadoss_36709e.jpg (318×477)

என்னைய கூப்பிடவே இல்லை தெரியுமா...லொள் வொள் கண்டுக்கவே மாட்டேங்குறானுங்க..வொள் வொள் அவ்வூ வள் வள் வள்

karunanidhi-23109313.jpg (313×234)

இந்தா பாரு அறிக்கை. இந்தா பாரு அந்த அம்மா மத்திய அரசுக்கு எழுதுன நோட். எனக்கு சத்தியமா பண்ணண்டு மணிக்கு தான் தெரியும். இல்லை காலையில நூஸு பேப்பர் பார்த்து தெரிஞ்சுக்கிடேன். இல்லை இல்லை. நான் போன் பண்ணலாம்னு பார்த்தேன்...சத்தியமா..மொபைல்ல க்ரடிட் இல்ல. எப்படி அர்த்த ராத்திரியில ரீபில் பண்றது ? எங்க மாறன் பேமிலி என்ன மொபைல் கம்பெனியா நடத்துது ?? நம்புங்க ப்ளீஸ்..இப்பத்தான் ஸ்டாலினை வெளிய அனுப்பி கார்டு கவர் வாங்கியார சொல்லியிருக்கேன். இந்தா ப்ரைம் மினிஸ்டருக்கு லட்டர் எழுதுறேன். டோண்ட் ஒர்ரி. பீ ஹேப்பி...ஹேய்...பை த வே...வாட்ச் மானாட மயிலாட யா ...

எப்புடி மேட்டரை முடிச்சேன் பார்த்தியா !!!

..
..
...

Wednesday, March 10, 2010

ஏய் ? எங்கடா புடிச்சீங்க இவனை ?

எதுவும் விமர்சனம் செய்துவிடவேண்டாம். அதனால் அவனுக்குத்தான் வீண் விளம்பரம்.

பெரியாரிஸ்டாமே ? ஜூவிக்காரங்க எப்படி கண்டுபிடிச்சாங்கப்பா ?

இந்த வீணாபோனவனை வெச்சு குமுதம் ரிப்போர்ட்டர் கல்லாக்கட்ட ஆரம்பிச்சுட்டாங்களே ?

மொத்தல்ல நாலாயிரம்னு சொன்னான். அப்புறம் இருவத்தஞ்சாயிரம். இப்ப இவம் பொண்டாட்டி ஒரு லட்சம் ரூபாய் கொடுத்தாளாமே ?

ஆட்டோவுக்கே காசில்லாதவன் எப்படி மீட்டிங்குக்கு இருவத்தாஞ்சாயிரம் கொடுத்தான் ?

இவனை சொல்லக்கூடாது. இவனை கடவுள்னு லெட்டர் போடுறவங்களை சொல்லனும்...

ஜூனியர் விகடன் பேட்டியில தான் ஒரு வுமனைஸர்னு சொல்லிட்டு, முண்ட கலப்பை இப்ப தனக்கு உமனைஸர்னாலே என்னன்னு தெரியாதுங்குது. ஸ்காட்சுன்னா என்னான்னு தெரியுமா ? ஜட்டி ரெண்டாயிரம்னு கதை உட தெரியுமா ? எனக்கு தெரிஞ்சு ஜாக்கி ஜட்டிய விட காஸ்ட்லி எதுவும் இல்லீங்ணா...

இவனுக்கு ஸ்டார் ஓட்டல்ல சரக்கு ஊத்தி விட்டவங்களை என்ன செய்யறது ?

மூனு வயசு குழந்தை எப்படிடா மொபைல் வெச்சிருக்கும் ? சுத்தமா மறை கழண்டுபோச்சு...

ஆங்கில் பட இயக்குனரோட நன்பர் போன் போட்டாராமே ? ஜேம்ஸ் கேமரூன் ப்ரண்டு பாம்ஸ் ஆரஞ்சூஸ் ஆக இருக்குமே ?

இவனோட புத்தகத்தை எந்த யுனிவர்ஸிட்டியில வெக்கப்போறாங்க ? ஒருவேளை டாய்லெட்ல பேப்பர் தீந்துட்டா வெப்பாங்க. இல்லை முன் அட்டையையும் பின் அட்டையையும் கிழிச்சுட்டு வெப்பாங்க.

கெடக்கறது கெடக்கட்டும் கெழவிய தூக்கி மனையில வெய் கணக்கா பக்கம் பக்கமா எழுத ஆரம்பிச்சுட்டானே ? லஜ்ஜையில்லாம ?

ஏய் இவனுக்கு உண்மையிலேயே ஒன்னும் தெரியாதா இல்லை நடிக்கிறானா ?

மலையாளத்துல இவன் எழுத்தை மொழிபெயர்க்கறவன் கெடச்சான், காதை கடிச்சு துப்பிடுவேன்...

நாலு இட்டாலியன் ரைட்டர்ஸ், மூனு யூரோப்பிய டைரக்டர்ஸ் பேரை தெரிஞ்சு வச்சுக்கிட்டு இப்படியும் அப்படியும் அடிச்சு விட்டே முப்பது வருசத்தை ஓட்டிட்டான்யா..

கூபாவுல போய் விட்டு இவனை செயில்ல போட்டு முட்டிக்கு முட்டி தட்டனும்...!!

அந்த முண்ட கலப்பை படத்தை நெட்ல தேடினா இது தான் வருது.




முப்பது வருசமா கட்டி மேய்ச்சுக்கிட்டிருந்த எளுத்தாளர், இண்டலக்சுவல் பட்டத்தை குப்பைத்தொட்டியில் தான் தேடனும். உத்தமம் இல்லாத தமிளு எளுத்தாளரே...!!!.
.
.
.

Tuesday, March 02, 2010

நித்யானந்தர் நடிகை சன் நியூஸ் விடியோ.





http://www.youtube.com/watch?v=zRk_IGNnzNw&feature=player_embedded

http://imvj.info/2010/03/swamy-nithyananda-scandal-video-affair.html

நோ.கமெண்ட்ஸ்.

சமீபத்தில் சாரு ஆன்லைனில் நித்யானந்தர் அலகாபாத் டூர் போயிருக்கிறதாக செய்தி படித்தேன். நார்த் இண்டியாவில் A என்ற நடிகையுடன் உல்லாசமாக இருந்தார் என்று எண்டிடிவி வீடியோ வெளியிடாமல் இருந்தால் சரி.

முதலில் கொடுக்கப்பட்ட சுட்டியை வேகவேகமாக நீக்கியுள்ளார்கள். ஆனால் டவுன்லோட் செய்து என்னுடைய சொந்த இடத்தில் அப்லோடு செய்துள்ளேன். இப்ப இன்னா பண்ணுவே ?


ஆர் என்ற எழுத்தில் ஆரம்பிக்கு நடிகை யார் என்று தீ'யாக தேடவேண்டாம்.

சாமீயார் நல்ல எ.சி.டி திரை தொலைக்காட்சிப்பெட்டி வைத்திருக்கிறார். முதல் காட்சியில் ஏதோ சிவாஜி படம் ஓடுகிறது. அடுத்த காட்சியில் ஆங்கில படம் போல தெரிகிறது. சாமியார் அறையில் உள்ள ப்ளாஸ்கு வெளிநாட்டு ப்ளாஸ்கு.

நடிகையிடம் வாங்கி போட்டுக்கொள்ளும் மாத்திரை வயாக்கராவா அல்லது பி.பி மாத்திரையா ? காலையில் எழுந்தவுடன் துள்ளி எழுந்து வயாக்கராவா போடுவார் துறவி ? கதவை திற நடிகை வரட்டும்.

Friday, November 20, 2009

18+. மிஸ். ட்ரினிடாட் டொபாக்கோ கூகிளில் இப்படி தேடவேண்டாம்.





நீங்கள் படத்தில் பார்ப்பது மிஸ் ட்ரினிடாட் அண்டு டொபாக்கோ (Miss Trinidad & Tobago 2008 Anya Ayoung-Chee )






இந்த படத்தில் என்ன இருக்கிறது அப்படீங்கறீங்களா ?

அம்மணியும் அவரது காதலரும் மற்றும் மிஸ் ஜப்பான் என்று கருதப்படும் இளம்பெண்ணும் ஜில்பான்ஸாக இருந்த வீடியோ இண்டர்நெட்டை கலக்குகிறது.



Miss Trinidad & Tobago 2008 S (ஒரு எழுத்து மிஸ்ஸிங்) X என்று போட்டு தேடி தொலையவேண்டாம்.




ஊதுற சங்கை ஊதிவிடத்தானே வேண்டும் ???

Thursday, October 29, 2009

சர்வேசன் நச் கதைப்போட்டியில் செந்தழல் ரவி

சர்வேசன் வைக்கும் நச் கதைப்போட்டியில் களத்தில் குதித்துவிட்டேன். 20 டாலராமே ? சொக்கா சொக்கா ங்கொக்கா மக்கா, எனக்கே பரிசு எனக்கே பரிசு என்று துள்ளிக்கொண்டிருக்கேன்.

இந்த ராமச்சந்திரன் உஷா, பினாத்தல் சுரேஷ், ஷைலஜா, முகிலன், பாப்பு, குகன், நிலா ரசிகன், நானானி, விதூஷ், நந்தா, அரவிந்தன், டி வி ஆர், கிஷோர், சதங்கா, கோபி, ராமலஷ்மி இவங்க எல்லாம் போட்டி போடலைன்னா நான் தான் ஜெயிச்சிருப்பேன். என்ன செய்ய, அவங்களும் போட்டி போட்டுட்டாங்க. சரி. லெட்ஸ் கவுண்ட் மை டேய்ஸ்.

மக்கள்ஸின் கதைகளை நான் விமர்சனம் செய்தபோது டென்ஷனானவர்கள் அடியேனின் கதையை இங்கே வாசித்து கடுப்பாகவும், டென்ஷனாகவும், திட்டவும்.

இதுவரை வந்த 'நச்' கதைகள்:

1. நெல்லி மரம் - சதங்கா (Sathanga)
2. அசைன்மென்ட் - கிஷோர்
3. ராஸ்கல்ல் - ராம்குமார் அமுதன்
4. உதவி - ஷைலஜா
5. உயிரின் உயிரே - R. Gopi
6. தொழில் - ராமலக்ஷ்மி
7. recession ஐயா recession - ramachandranusha(உஷா)
8. வைதேகி காத்திருப்பாள் - T.V.Radhakrishnan
9. நெஞ்சு பொறுக்குதில்லையே - ஷைலஜா
10. திருப்பம் - சின்ன அம்மிணி
11. வல்லவனுக்கு வல்லவன் - பெயர் சொல்ல விருப்பமில்லை
12. அப்பா சொன்ன நரிக்கதை - நிலா ரசிகன்
13. ஆவணி பௌர்ணமி - நானானி
14. நொடிப் பொழுதில் - Pappu
15. ஆல்ப்ஸ் கொ(ம)லைக் காற்று வந்து - முகிலன்
16. ஜில்லுனு ஒரு காதல் - Vidhoosh
17. சதிராடும் மேகங்கள் - அரவிந்தன்
18. ஆதவன் - நான் ஆதவன்
19. இக்கணம் இக்கதை - Nundhaa
20. யாரோ ஒருத்தி - குகன்
21. செவப்புத் தோல் - ஈ.ரா
22. படுக்கை - பினாத்தல் சுரேஷ்

கலந்துகொண்டவர்கள் எல்லாருக்கும் வாழ்த்துக்கள், இனி கலக்கப்போறவங்களுக்கும்.

NHM புத்தகங்கள் விமர்சனத்துக்கு இலவசமாக!

இந்தப் புத்தகங்கள் உங்களுக்கு வேண்டுமா?

1. 1857 சிப்பாய் புரட்சி, உமா சம்பத்
2. ஏ.ஆர். ரஹ்மான், என்.சொக்கன்
3. சரியாக முடிவெடுக்க சக்ஸஸ் பார்முலா, ராபர்ட் குந்தர்
4. வேலையில் முன்னேற சக்ஸஸ் பார்முலா, டாக்டர் கேரன் ஒடாஸோ
5. நம்பர் 1 சேல்ஸ்மேன், சோம. வள்ளியப்பன்
6. மாயாவதி, சி.என்.எஸ்
7. இண்டர்வியூ டிப்ஸ், எஸ்.எல்.வி. மூர்த்தி
8. அத்வானி, ஆர்.முத்துக்குமார்
9. ஒரு மோதிரம் இரு கொலைகள், ஷெர்லாக் ஹோம்ஸ்
10. சீனா - விலகும் திரை, பல்லவி அய்யர்
11. பிரபாகரன் வாழ்வும் மரணமும், பா.ராகவன்
12. விஜய்காந்த், யுவ கிருஷ்ணா
13. பன்றிக்காய்ச்சல், டாக்டர் புரூனோ மஸ்கரனாஸ்
14. வைரஸ் நோய்கள், டாக்டர் முத்து செல்லக் குமார்
15. நோய் தீர்க்கும் சித்த மருந்துகள், டாக்டர் கே.எஸ்.சுப்பையா
16. மு.க. ஸ்டாலின், ஜி.ஆர்.சுவாமி
17. விடுதலைச் சிறுத்தைகள், ஜோதி நரசிம்மன்
18. மெட்ராஸ் - சென்னை, நந்திதா கிருஷ்ணா
19. தும்பிக்கை வந்தது எப்படி?, ருட்யார்ட் கிப்ளிங்
20. ஜங்கிள் புக், ருட்யார்ட் கிப்ளிங்


கீழ்க்கண்ட நிபந்தனைகளுக்கு உட்பட்டால் போதும்!

1. உங்களிடம் ஒரு வலைப்பதிவோ, வலைத்தளமோ (தமிழோ, ஆங்கிலமோ) இருக்கவேண்டும்.
2. மேலே உள்ள புத்தகங்களில் எது உங்களுக்கு வேண்டும் என்று குறிப்பிடுங்கள்.
3. ஒவ்வொரு புத்தகத்திலும் குறிப்பிட்ட எண்ணிக்கையுள்ள பிரதிகளையே வழங்க உள்ளோம். அதனால் முதலில் தொடர்புகொள்கிறவர்களுக்கே முன்னுரிமை வழங்கப்படும்.
4. உங்களது அஞ்சல் முகவரியையும் செல்பேசி எண்ணையும் எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள். இந்தியாவுக்குள் என்றால் எங்கள் செலவில் அஞ்சலில் அனுப்பிவைப்போம். அல்லது நீங்களே எங்களது அலுவலகத்துக்கு நேரில் வந்து பெற்றுக்கொள்ளலாம்.
5. ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட இரண்டு விமர்சனத் திட்டங்களும் நிறைவு பெற்றுவிட்டன. மேலே உள்ள புத்தகங்களில் இருந்து மட்டுமே புத்தகங்களைத் தேர்வு செய்யவேண்டும்.
6. பெற்றுக்கொண்ட புத்தகத்தைப் படித்துவிட்டு, உங்களது வலைப்பதிவில் அதைப்பற்றி 500 வார்த்தைகளுக்குக் குறையாமல் (தமிழிலோ, ஆங்கிலத்திலோ) விமர்சனம் எழுதவேண்டும்.
7. விமர்சனம் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். புத்தகம் நன்றாக இல்லை, பிடிக்கவில்லை என்றால் அதை உள்ளது உள்ளபடியே குறிப்பிடலாம். ஆனால் கட்டாயமாக விமர்சனம் எழுதியாகவேண்டும். 500 வார்த்தைகளுக்குக் குறையாமல்.
8. புத்தக விமர்சனப் பதிவின்கீழ், அந்தக் குறிப்பிட்ட புத்தகத்தின் இணைய வணிகத் தள முகவரி (URL) இருக்கவேண்டும். அந்த முகவரியை உங்களுக்கு நாங்கள் மின்னஞ்சலில் அனுப்பிவிடுவோம்.
9. விமர்சனம் எழுதிமுடித்தவுடன் அந்தப் பதிவின் முகவரியை எங்களுக்கு அனுப்பிவைக்கவேண்டும். அதனை நாங்கள் எங்களது தளத்தில் சேர்த்துக்கொள்வோம்.
10. ஒருவர் ஒரு நேரத்தில் ஒரு புத்தகத்தை மட்டுமே பெறமுடியும். ஒன்றுக்கு மேற்பட்ட புத்தகங்களை ஒரே நேரத்தில் பெறமுடியாது. ஆனால், புத்தகங்களைக் கேட்கும்போது, 2 அல்லது 3 விருப்பங்களை வரிசைப்படுத்திக் கேட்கவும். உங்களது முதல் விருப்பம் முற்றுப்பெற்றுவிட்டால், அடுத்த விருப்பத்தைக் கொடுக்க முயற்சி செய்வோம்.
11. ஒரு புத்தகத்தைப் படித்து, விமர்சனம் எழுதிய பின்னரே, நீங்கள் அடுத்த புத்தகத்தைக் கேட்டுப் பெறலாம்.
12. இந்தத் திட்டத்தில் எப்போது வேண்டுமானாலும் மாற்றங்கள் கொண்டுவருவதற்கு நிறுவனத்துக்கு எல்லாவித உரிமையும் உள்ளது. சில காரணங்களுக்காக ஒரு சிலருக்குப் புத்தகங்களை வழங்காமல் இருக்கவும், காரணத்தைப் பொதுவில் சொல்லாமல் இருப்பதற்கும் நிறுவனத்துக்கு உரிமை உள்ளது.
13. இத்திட்டம் தொடர்பாக மின்னஞ்சலில் மட்டுமே தொடர்புகொள்ள வேண்டும்.
14. புத்தகம் அனுப்பப்பட்ட நாளிலிருந்து ஒரு மாதத்துக்குள் விமர்சனம் எழுதவேண்டும்.
15. ஏற்கெனவே விமர்சனத்துக்கென புத்தகங்களை வாங்கியவர்கள், அதற்கான விமர்சனத்தை எழுதி, எங்களுக்கு அனுப்பியிருந்தால் மட்டுமே, அடுத்த புத்தகத்தைப் பெறமுடியும். ஏற்கெனவே புத்தகத்தை வாங்கி, விமர்சனம் எழுதியவர்கள், இந்த முறை புத்தகம் கேட்கும்போது, முன்னர் எந்தப் புத்தகத்தை வாங்கினீர்கள், நீங்கள் விமர்சனம் எழுதிய சுட்டி ஆகியவற்றை மின்ஞ்சலில் குறிப்பிடவும்.
16. ஏற்கெனவே உங்களின் முகவரி, தொலைபேசி எண் எங்களிடம் இருந்தாலும், புத்தகம் கேட்டு எழுதும்போது மறக்காமல் உங்கள் முகவரியையும் மொபைல் எண்ணையும் மீண்டும் குறிப்பிடவும்.

மின்னஞ்சல் அனுப்பவேண்டிய முகவரி: bookreviews@nhm.in

ஹரன்பிரசன்னா வலைப்பதிவில் கண்டேன், இங்கும் பதிந்தேன். சுட்டி http://www.nizhalkal.blogspot.com/

Friday, October 02, 2009

2016 ஒலிம்பிக்ஸ் எங்கே ??

கோப்பன்ஹேகனில் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெறும் ஒலிம்பிக் கமிட்டி கூட்டத்தில் 2016 ஒலிம்பிக் எங்கே நடக்கப்போகிறது என்று முடிவுசெய்யப்படும்.

இந்த வாய்ப்பை பெற களத்தில் குதித்து கடுமையாக போராடிக்கொண்டிருக்கும் நகரங்களை பற்றி கொஞ்சம் பார்க்கலாமா ?

சிக்காகோ:

பேரை கேட்டவுடன் பாண்டியராஜனின் அரை பேண்ட் சிக்காக்கோ ஜீன்ஸ் நியாபகம் வருதா ? அமெரிக்க இல்லினாஸ் மாகானத்திலேயே மிகப்பெரிய அழகிய நகரம். 2.8 மில்லியன் மக்கள், அமெரிக்காவிலேயே மிகப்பெரும் நகரங்களின் மூன்றாவது.



1833 இல் இருந்து ஒரு நகரமாக அங்கீகரிக்கப்பட்ட, நார்த் அமெரிக்காவின் மாபெரும் வர்த்தக மற்றும் தொலைதொடர்பு நகரம் இது. விண்டி சிட்டி என்று செல்லமாக அழைக்கப்படும் இந்த சிட்டியில் வளைய வந்த ஒபாமா, இப்போது அமெரிக்க அதிபர். அவரையும் துணைக்கு அழைத்துக்கொண்டு போராடுகிறது சிக்காகோ.

டோக்கியோ:



ஈஸ்டும் வெஸ்டும் கலந்த பாரம்பரிய டோக்கியோ. கமலகாசனில் இருந்து கவுண்டமணி வரை தயாரிப்பாளர் காசில் சுற்றிப்பார்த்த நகரம். பிரம்மாண்ட ஒலிம்பிக் ஸ்டேடியம் எல்லாம் ஏற்கனவே கட்டிவிட்டு, வாய்ப்பை மட்டும் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். டோக்கியோ என்றால் நன்னீர் கடலில் கலக்கும் இடம் என்று பொருளாம். ஒரு சிறிய மீன்பிடி கிராமமாக 500 ஆண்டுகளுக்கு முன்னால் இருந்த நகரத்தின் அழகை கூகிளாண்டவரிடம் தேடி பாருங்க. இன்று முழுக்க ரசிக்கலாம்.

நீள அகலத்தில் 90 க்கு 25 கிலோமீட்டர் பகுதி இந்த டோக்கியோ, மொத்த மக்கள் தொகை 12.9 மில்லியனாம். பகல் வேலை நேரத்தில் மட்டும் 25 லட்சம் மக்கள் வேலைக்காகவும் கல்விக்காகவும் டோக்கியா வருகிறார்களாம். அற்புதமாக க்ளைமேட், அழகாக நகரம். நான் சப்போட் செய்வது இவர்களுக்கே.

ரியோ டி ஜெனிரோ:

ரியோ டி ஜெனிரோ அப்படீன்னா ஜனவரியின் ஆறுன்னு அர்த்தம். ப்ரெசிலின் இரண்டாவது பெரிய நகரம். உலக பொருளாதாரத்தின் வளரும் நாடுகள் வரிசையில் இந்தியாவுடன் சேர்த்து பார்க்கப்படும் ப்ரேசில் பொருளாதார வல்லரசாக மாறிக்கொண்டு வருகிறது. கிட்டத்தட்ட இரண்டு நூற்றாண்டுகளுக்கு ப்ரேசிலின் தலைநகராக இருந்த ரியோ, 11 இல் இருந்து 13 மில்லியன் பாப்புலேஷன் கொண்டது.



கிளுகிளுப்புக்கு பெயர் போன ரியோவின் கார்னிவல்களும் சம்பா நடனமும் ரொம்ப பேமஸ். இந்த சின்ன ஹிண்ட்டோடு நிறுத்திக்கறேன். மேற்கொண்டு கூகிளாண்டவரிடம் தேடி கிளுகிளுத்துகொள்பவர்கள் செய்யலாம். அந்த படங்களை எல்லாம் இங்கன போட முடியாது ஓய். சாம்பிள் ஒன்று மட்டும்..



பீச்சுகளும்,பல்வேறு வகை மக்களும் வாழும் ரியோ, மொத்தமே 14 லட்சம் மக்கள்தொகை கொண்டது.



இது கண்டிப்பாக இளைஞர் பட்டாளத்தின் சாய்ஸ் என்பதி எந்த சந்தேகமும் இல்லை. பெரிசா ஒரு பெருமூச்சோடு அடுத்த இடம் பார்த்துவிடுவோம்.

மாட்ரிட்:



ஸ்பெயின் தலைநகரம். அய்ரோப்பாவின் மூன்றாவது பெரிய நகரம். 3.2 மில்லியன் மக்களுடன், 234 சதுர கிலோமீட்டர் பரப்பளவுள்ள ஸ்பெயினின் மாபெரும் நகரம். கரடிகளின் நகரம் என்று முன்பொரு காலத்தில் வழங்கப்பட்டதாம். வரலாற்றில் ரோமானியர்களாலும் ஆளப்பட்ட நகரம்.

உள்நாட்டு போரால் 1930 களில் பாதிக்கப்பட்ட மாட்ரிட், அதன் பின் 1960 களில் ப்ரான்ஸிஸ்கோ ப்ராங்கோ காலத்தில் மாபெரும் தொழில் வளர்ச்சிகண்டது.



கலையுணர்ச்சியும் வீரமும் அதிகம் கொண்ட ஸ்பானியர்களின் ரசிகன் நான்.

2020 ஒலிம்பிக்ஸ் டெல்லியில் நடக்கவேண்டும் என்று உள்ளூர ஆசையுடன் எழுதப்பட்ட பதிவு. பிடிச்சிருந்தா ஓட்டு குத்துங்க.

Thursday, October 01, 2009

வெண்ணை போல் ஒருவன்



நேரம் : காலை 9 மணி
இடம் : போலீஸ் கமிஷனர் அலுவலகம்.

கமிஷனர் ஏ.பீ.சீ.போறார் மொபைல் ஒலிக்கிறது.

போறார் : ஹலோ. கமிஷனர் போறார் ஹியர். ஹூ ஈஸ் திஸ் ?

மிடில் மேன் : ஹெல்லோ. நான் மிடில் மேன் பேசறேன். சி.எம் கிட்ட பேசனும். என்னோட நெகோஷியேட் பண்ணப்போறது யாரு ?

போறார் : முண்டம். சி.எம் கிட்ட பேசனும்னா சி.எம் வீட்டுக்கு போன் போடவேண்டியது தானே ? ஏண்டா எனக்கு போன் பண்றே ?

மிடில் மேன் : சென்னையில இன்னும் ஒரு மணி நேரத்துல வெடிக்கறமாதிரி குண்டு இருக்கு. அதே மாதிரி சிட்டி முழுக்க நாலு குண்டு வெச்சிருக்கேன்.அதனால தான் உங்களை கூப்பிட்டேன்.

போறார் : யோவ்...ரியல்லி ? நீ குண்டு வெச்சது உண்மையா ? ஆர் யூ சீரியஸ் ?

மிடில் மேன் : ஆமா இவர் மிர்ச்சி சுச்சி பாரு. போன் போட்டு காமெடி பண்ண ? யோவ் உண்மையிலேயே குண்டு வெச்சிருக்கேன். உடனே பாம் ஸ்க்வாடை அனுப்பி தேடு. மஞ்ச ஒயர விட்டுட்டு பச்ச ஒயர வெட்டு.

போறார் : எந்த ஒயரை வெட்டனும்னு பாம் ஸ்க்வாடுக்கு தெரியும். நீ குண்டு வெச்ச இடத்தை பத்தி சொல்லு.

மிடில் மேன் : ஐ ஐ. கஷ்டப்பட்டு குண்டு வெச்சது நானு, இடத்தை சொன்னா நீ நோவாம நோம்பி திங்கலாம்னு பாக்குறியா ? தேடி எடுய்யா நீயே ?

போறார் : மிடில் மேன். ப்ளீஸ் ப்ளீஸ். எங்க இருக்குனு ஒரு க்ளூவாவது குடேன் ப்ளீஸ்..

மிடில் மேன் : சரி ரொம்ப கெஞ்சற. இந்த மேட்டர் முடிஞ்சதும் ரெண்டு பாக்கெட் நேந்திரம் சிப்ஸ் தரேன்னு சொல்லு. க்ளூ தரேன்.

போறார் : (அல்ப்ப பாண்டி பயபுள்ள). சத்தியமா ஏற்பாடு பண்றேன். க்ளூ குடுத்து தொலை.

மிடில் மேன் : அண்ணா நகர் போலீஸ் ஸ்டேஷன்ல தண்ணி வராத எடம் எதுன்னு பார்த்து அங்க தேடச்சொல்லு.

போறார் : பாத்ரூமா ?

மிடில் மேன் : அதே. அதே. வேற பால்கனியிலயா தண்ணி வராது ? என்ன கமிஷனரோ ? அஞ்சு நிமிசத்துல போன் பண்றேன். அப்புறம், வீட்ல எல்லாரும் சவுக்கியமா ? இந்த புட்டுல வாழைப்பழத்தை பிணைஞ்சு சாப்பிட்டா தொண்டையில அடைக்குதே அதுக்கு என்ன செய்வீங்க கேரளாவுல ?

போறார் : (போனை அக்குளில் மறைத்துக்கொண்டு) மிஸ்டர் வெல்லாரியா, சொல்ல மறந்துட்டேன். இந்த காலை ட்ரேஸ் பண்ணுங்க.

மிடில் மேன் : எனக்கும் கேட்டுது. காலை ட்ரேஸ் பண்றதை மெதுவா சொல்லக்கூட தெரியலை. நீ எல்லாம் என்ன கமிஷனர் ?

...........பீப் பீப் பீப்.........

வெல்லாரியா : சார். ரொம்ப ஷார்ட் கால். ட்ரேஸ் பண்ண முடியல.

போறார் : யோவ் மணிக்கணக்கா பேசிக்கிட்டிருந்தேனே ?

வெல்லாரியா : சார், நீங்க உங்க வீட்டம்மாக்கிட்ட பேசுறீங்கன்னு நினைச்சேன்.

போறார் : சரி அடுத்த காலையாவது ஒழுங்கா ட்ரேஸ் பண்ணித்தொலை...

%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%

(பாம் ஸ்க்வாட் பாமை கண்டுபிடித்து மஞ்சள் ஒயரை விட்டுவிட்டு பச்சை ஒயரை வெட்ட பாம் செயலிழக்கிறது. கமிஷனர் போறார், வார் ரூமுக்கு போறார். எல்லோரும் அங்கே அசம்பிளாகி நிற்கிறார்கள்)

போறார் : யாருக்காவது மூச்சா போகனும்னா பாத்ரூம் போய்ட்டு வாங்க.

எல்லோரும் கோரஸாக : நோ சார். ஏற்கனவே நாங்க போயிட்டோம்.

போறார் : இனிமே இந்த ரூம்ல நடக்கறது இந்த நாலு செவுத்துக்குள்ள தான் இருக்கனும்.

முந்திரி : சார், மேல ஒன்னு கீழ ஒன்னுன்னு ரெண்டு செவுரு இருக்கே, அது வழியா போலாமா ?

போறார் : இவனை தூக்கி போட்டு மிதிங்கடா. (முந்திரியை எல்லோரும் கும்முகிறார்கள்). எல்லோரும் அலர்ட்டா இருங்க. அவன் போன் பண்ணுவான். வெல்லாரியா ட்ரேஸ் பண்ணுவான். போலீஸ் போய் அவனை புடிச்சுடனும்..சி.எம், பி.எம், சீப் செக்கரட்டரி எல்லாருக்கும் போன் போட்டு சொல்லுங்க. ஆயிரம் போலீஸை சென்னை சிட்டியை சுத்தி சுத்தி வரச்சொல்லுங்க...

..ரிங் ரிங்..

போறார் : வேற நம்பர்..ஆனால் அவன் தான். ஆல் டீம் அலர்ட்...

பெண் குரல் : சார், ஐசிஐசிஐ பர்சனல் லோன் டிப்பார்ட்மெண்ட் சார். பத்து பர்சண்ட் இண்ட்ரஸ்ட். உங்களுக்கு இண்ட்ரஸ்ட் இருக்குனா சொல்லுங்க சார். பார்க், பீச் எங்கியாவது மீட் பண்ணலாம்..

போறார் : ஷிட். போனை வைம்மா. படற லோல் பத்தாதுன்னு லோன் குடுக்க வந்துட்டா. எந்த லோனும் வேண்டாம்...

வெல்லாரியா : சார். காலை ட்ரேஸ் பண்ணியாச்சு. பக்கத்து தெருவுல இருந்து வருது சார்.

போறார் : டேய்...என்ன கொலகாரனாக்காத..எரிச்சலாகிறார்.

...ரிங் ரிங்...

போறார் : இது கண்டிப்பா அவன் தான். எவ்ரிபடி அலர்ட்...

மிடில் மேன் : ஹாய். டைம் பாம் குண்டை எடுத்துட்டீங்களா ? அதுல இருந்த டைம் பீஸ் சரியா அடிக்காது. அதை யூஸ் பண்ணனும்னு நினைக்கவேண்டாம். ஒருமுறை காலை 5 மணி ட்ரெயினுக்கு அலாரம் வெச்சா, சாயங்காலம் 5 மணிக்கு அடிச்சுது.

போறார் : யோவ்..என் கிட்டயே டைம் பீஸ் இருக்கு. நீ வேற எங்க குண்டு வெச்சிருக்க அதை சொல்லு...

...பீப் பீப் பீப்....

போறார் : வெல்லாரியா...ட்ரேஸ் பண்ணியா ? கால் திடீர்னு கட்டாயிருச்சு...

வெல்லாரியா : சார். அவன் ஒரே நம்பர்ல இருந்து தான் போன் பண்ணுறான். திரும்ப அவனுக்கு ஒரு மிஸ்ஸுடு கால் கொடுங்க. ஒர்க் ஆவுதா பார்ப்போம்...

போறார் : முண்ட கலப்பை. ஏன் போனே பண்ணலாமே ? கவர்மண்டு காசு தானே ?

வெல்லாரியா : க்ரேட் ஐடியா சார்.

..கமிஷனர் போறார் திரும்ப அதே எண்ணுக்கு அழைக்கிறார்...

போறார் : ரிங் போவுது. ரிங் போவுது. ஆல் டீம் அலர்ட். எல்லோரும் அலர்ட்.

பியூன் ஆறுமுகம் : ஹல்லோ ?

போறார் : மிடில் மேன், என்ன குரலை மாத்தி பேசுற ?

பியூன் ஆறுமுகம் : யோவ். நான் எதுக்கு குரலை மாத்தி பேசனும் ? நீ யார் அதை சொல்லு..

போறார் : நான் சென்னை போலீஸ் கமிஷனர் ஏ.பீ.சீ.போறார் பேசறேன். யாருய்யா நீ ?

பியூன் ஆறுமுகம் : சாசாசார்...நான் கீழ்ப்பாக்கம் பைத்தியக்கார ஆஸ்பத்திரி ஸ்டாப் ஆறுமுகம் பேசறேன் சார். டாக்டர் ரூம்ல மறதியா வெச்சுட்டு போன செல்போனை ஒரு பைத்தியம் எடுத்துக்கிச்சு சார். இப்பத்தான் சார் கஷ்டப்பட்டு புடுங்கினோம்.

போறார் : தேங்கியூ வெரிமச். டேக் கேர் ஆறுமுகம்...

%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%

முன்னாள் கமிஷனர் ஏ.பீ.சீ போறார், பீச்சில் டாபர் மேன் நாயுடன் தனியாக பேசிக்கொண்டிருக்கிறார்.

போறார் : யார் அந்த மிடில் மேன். காத்து மாதிரி வந்தான். லூசு மாதிரி பேசினான். பைத்தியத்தோட போனுக்கு சி.எம் வரைக்கும் தொந்தரவு பண்ணதால என்னோட வேலைக்கும் வேட்டு வெச்சான். பச்சை ஒயரை செவுத்துல இருந்து கட் பண்ண பாம் ஸ்க்வாட் எந்த பள்ளிக்கூடத்துல படிச்சானுங்களோ ? எனிவே..ஐ லைக் டு பீ எ மிடில் மேன். ஐ யம் எ ஜெண்டில் மேன். ஆவேனே சூப்பர் மேன். லா லா லா...
%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%