Friday, October 12, 2007

பெங்களூர் தமிழச்சியின் காமெடி பதிவு...!!!!

பெங்களூர் தமிழச்சியின் இந்த பதிவை படித்துவிட்டு அடக்க மாட்டாமல் சிரித்து வயிறை புண்ணாக்கி கொண்டேன்...ஸ்பெல்லிங் மிஸ்டேக் பதிவான அந்த பதிவு, "சட்டியில் இருந்தாத்தானே அகப்பையில வரும்" என்று நன்றாக உணர்த்துகிறது...

பெங்களூர் தமிழ்ச்சங்கம், பெங்களூரின் தமிழர் எண்ணிக்கை, எத்தனை ஆண்டுகாலமாக தமிழர்கள் பெங்களூரில் வசிக்கிறார்கள், தமிழர்கள் பெங்களூரில் செய்யும் தொழில்கள் என்ன என்பது குறித்து கிஞ்சித்தும் தெரியாமல், ஏதோ ஐ.டி கம்பெனிகள் வந்தவுடன் எம்.சி.யே படித்தவர்கள் வந்துதான் பெங்களூரில் குடியேறினார்கள் என்ற ரீதியில் அரைவேக்காட்டு பதிவொன்றை இட்டுள்ளார்...

தனித்தமிழ் சேனை என்று ரெண்டு மூனு இடத்தில் எழுதி இருக்காம்...அம்மாடி அது தமிழ்ல தான எழுதி இருக்கு ? அதை படிச்சுட்டு கன்னடாக்காரன் தமிழனை உதைப்பான் என்றால் அதைவிட அரைவேக்காட்டுத்தனம் என்ன இருக்கு ?

கன்னடமெல்லாம் தமிழில் இருந்து தான் வந்தது என்று கூறிக்கொண்டு அலைபவர்கள் உண்மையைத்தான் சொல்கிறார்கள் என்று நினைக்கிறேன்...அப்படி கூறியவரின் தமிழ் பற்றுக்கு தலைவணங்குகிறேன்...அதை கிண்டல் செய்யும் உங்களை பெங்களூரில் இருந்து ஹைதராபாத்துக்கு நாடு கடத்தலாம் என்று உள்ளேன்...

ஏதாவது ஹோட்டலுக்கு போனா சென்னையில் உள்ள சாப்பாடு மாதிரி வராது என்று கூறிக்கொண்டே சாப்பிடுவாங்களாம்...சரவணபவனில் சாப்பிடுவதற்கு சென்னை வரை போகும் எவ்ளோ பேர் இருக்காங்க தாயி...

இ-கலப்பையை வைத்து உழுது எழுதியிருப்பார் என்று நினைக்கிறேன்...அந்த இ-கலப்பையை தமிழ் உலகுக்கு அளித்த முகுந்த் பெங்களூரில் இருக்கிறார்...தமிழின் முதல் மடலாடற்குழுக்களில் பங்குபெற்று - பாலாபிள்ளை போன்றவர்களுடன் பழகி - பெங்களுர் தமிழ்ச்சங்கத்தில் உள்ள அத்துனைபேரையும் அறிந்த அரவிந்தன் பெங்களூரில் இருக்கிறார்...அதெல்லாம் விட, அற்புதமான சிறுகதைகள் எழுதும், எழுத்தாளர் சுஜாதாவின் நன்பர் தேசிகன் பெங்களூரில் தான் இருக்கிறார்...

அவ்வளவு ஏன், வ.வா.சங்கத்தின் முக்கிய கைப்புவான இராம், விவசாயி இளா, ஜி.ரா, இம்சை அரசி போன்றவர்களும் பெங்களூரில் தான் இருக்கிறார்கள்...இவர்களுக்கு ஹிஸ்டரி, ஜியாகிரபி பற்றி தெரியுமான்னு தெரியல...சும்மா ஒரு பில்டப்புக்கு இந்த பேரா..

மியாவ் கண்ணை மூடிக்கொண்டால் வேர்ல்டு இருட்டிக்கும் என்பது போல இருக்கு இந்த அரைவேக்காட்டு ஸ்பெல்லிங் மிஸ்டேக் பதிவு...ஆனால் மேட்டரை விளங்கிக்கொண்டு பதிவு எழுதுமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்...

14 comments:

ரவி said...

இதுவும் வெளங்கிரும்...

-/பெயரிலி. said...

தலைப்பை மாற்றுங்கள். இல்லாவிட்டால், தொப்பியை யாராவது மாற்றி மாட்டி, தகராறு வேறெங்காவது சீரியஸ் பதிவாக வரும். 100%

ரவி said...

///தலைப்பை மாற்றுங்கள். இல்லாவிட்டால், தொப்பியை யாராவது மாற்றி மாட்டி, தகராறு வேறெங்காவது சீரியஸ் பதிவாக வரும். 100%///

அப்படியெல்லாம் விடுவமா...

அங்கனயே ஒரு தனிமடலை தட்டி விட்டு தோழரிடம் சமாதானமா போயிறமாட்டோம்...

தமிழச்சியின் தமிழ் வாத்தியாரோட திட்டுக்களை எப்படி வாங்குறது...

இராம்/Raam said...

அட்டகாசமான எதிர்வினை பதிவு ரெட்பயர்.... :)

ரவி said...

கருத்துக்கு நன்றி ராம்...!!! அந்த அக்காவை நீங்கள் லோக்கல் போன் போட்டே கலாய்க்கவும்..,

கோவி.கண்ணன் said...

//மியாவ் கண்ணை மூடிக்கொண்டால் வேர்ல்டு இருட்டிக்கும் என்பது போல இருக்கு இந்த அரைவேக்காட்டு ஸ்பெல்லிங் மிஸ்டேக் பதிவு...//

ரவி,

கவுண்டமணி, மணிவண்ணன் ஸ்டைலில் பாதி ஆங்கிலம் பாதி தமிழ்.

:))

கானா பிரபா said...

பத்தவச்சிட்டீங்களே பரட்டை ;))

பெங்களூருக்கு அடிக்கடி வந்த என்னைக் குறிப்பிடாதாது குறித்துக் கண்டிக்கிறேன் ;))

Pot"tea" kadai said...

பெங்களூரில் நானும் இரண்டுவருடம் சரக்கு ஊற்றீயிருக்கிறேன்...பர்ப்புள் ஹேஸ்சில்

வி.சபேசன் said...

காமெடி செய்தாலே அது தமிழச்சியாகத்தான் இருக்க வேண்டும் என்று கருதுகிறீர்களா? கவனம், இதற்கும் ஒரு தீர்மானம் போடப் போகிறார்கள்!

லக்கிலுக் said...

///பெங்களூரில் நானும் இரண்டுவருடம் சரக்கு ஊற்றீயிருக்கிறேன்...பர்ப்புள் ஹேஸ்சில்///

உங்கள் அனுபவங்களையெல்லாம் வெட்டி ஒட்டி பார்த்தால் உங்களுக்கு ஐம்பது வயசுக்கு மேல இருக்கணுமே பொட்டீ?

Pot"tea" kadai said...

//உங்கள் அனுபவங்களையெல்லாம் வெட்டி ஒட்டி பார்த்தால் உங்களுக்கு ஐம்பது வயசுக்கு மேல இருக்கணுமே பொட்டீ?//

நீங்கள் வேலைக்கு செல்கிறீர்கள் காலையில்...மாலை திரும்பும் வரை எவ்வளவோ அனுபவங்கள் ஏற்படுகிறதல்லவா...

அய்யோ டோண்டு சார்வாள் மாதிரியே பேசறேனே...இனிமே அங்க கும்மி அடிக்க வரமாட்டேன்...

ஆனால் சந்தடிசாக்கில் எனக்கு ஐம்பது வயது என்று சொல்லி என்னுடைய இளமையை ஹைஜாக் செய்ய முடியாது லக்கி அவர்களே.

மங்களூர் சிவா said...

:-)))

Anonymous said...

பெங்களூர் தமிழர்கள் தமிழ்நாட்டு தமிழர்கள் போல ஈனப்பயல்கள் கிடையாது. சினிமா நடிகனுக்கு பாலாபிஷேகம், தொப்புள் நடிகைகளுக்கு கோவில்கள், அரைவேக்காடு அரசியல், ஓசி சோறு, ஓசி துணிமணி, ஓட்டு போட பணம், பெயர் ராசி, நியுமெராலஜி, ராசிக்கல், மானாட மயிலாட, அரட்டை அரங்கம், இழவு வீட்டில் ஜாதிக்கலவரம் போன்ற அசிங்கம் பிடித்த பயல்கள் தாம் தமிழக தமிழர்கள். உண்மையில் தமிழ் பெங்களூரில் தாம் வாழ்கிறது. அவர்கள் தாம் தமிழர்கள். தற்போது ஒரு கோடியை தாண்டி விட்ட கருநாடக தமிழர் மக்கட்தொகை நாளை தனக்கென்று ஒரு வழியை தேடிக்கொள்ளும். தமிழக தமிழர்கள் நக்குவாரிகள். நண்பர்களே வருத்தத்துடன் ஒரு தமிழக தமிழன்.

அருண்சங்கர் said...

நானும் பெங்களூரில் சுமார் 25 வருடங்களாக இருக்கிறேன். அங்கே HAL, BEL, ISRO, BEML, NAL போன்ற மத்திய அரசு நிறுவனங்களும், MICO போன்ற தனியார் நிறுவனங்களும் அன்றைய காலகட்டத்தில் இருந்தன. தமிழர்களும் ஒரு அளவுக்கு இருந்தார்கள். ஆனால் தமிழச்சியின் கூற்றுப்படி IT துறை வந்தபிறகுதான் பெங்களூரில் திரும்பிய பக்கமெல்லாம் தமிழர்கள். திரும்பிய பக்கமெல்லாம், "பிரியா அக்கா இன்போசிஸ்ல இருக்குதுங்க, செந்திலு விப்ரோல இருக்குதுங்..." என்னும்படியான குரல்களை கேட்க முடிகிறது. முன்பு பெங்களூரில் வாழ்ந்த தமிழர்கள் அல்சூர் மற்றும் சில இடங்களில் மட்டுமே இருந்தனர். அவர்களும் பெங்களூரின் கலாச்சாரத்தோடு ஒட்டி வாழ்ந்தனர். இன்று பெங்களூரே தமிழ்நாடு போல் ஆகிவிட்டது. கன்னடர்களைதான் அங்கே காணோம். எனவே தமிழச்சி எழுதியது 70 சதவீதம் சரியே.