Thursday, April 19, 2007

இராம் பெயரில் போலிப்பதிவு தயாரித்தவருக்கு

அன்புள்ள போலியே...போளி மாதிரி சுவையான நட்பைத்தரும் தம்பி இராம் பெயரில் போலிப்பதிவு கிரியேட் செய்த நீர் மிகவும் நல்லவர்...

ஆனா விஷயம் அது இல்ல...காலையில ஆபீஸ் வந்தவுடனே உனக்குத்தான் பரிசு என்று ஒரு பின்னூட்டத்தை பார்த்து குன்ஸாகி ஆகா கெலிச்சிட்டேன்...கெலிச்சிட்டேன்...என்றுகூவி...

எல்லாரும் விஷயம் என்னான்னு கேக்க...நான் ஆயிரம் பொற்காசு ஜெயிச்சிட்டேன்னு நான் சொல்ல....அப்ப ட்ரீட் வைய்யுன்னு எல்லோரும் கேட்க...இன்னைக்கு மத்தியானமே வையு என்று ஒரு கொடுக்கு சொல்ல...

ஆச்சு..பெங்களூர் கோரமங்களா ஏரியா டேமரிண்ட் (the Tamerind) ஹோட்டல்ல பில்லு 1117 ரூபா ( VAT டேக்ஸ் உட்பட...)

ஆப்புறம்தான் தெரிஞ்சது...பரிசு எனக்கு இல்ல..எனக்கு இல்ல...வாயில வாஸ்து மட்டும் தான் எனக்கு சரி இல்லன்னு...

ஆனா ஒன்னு...நீ அடிச்சது பயில்வான இல்ல...ஒரு பிள்ளப்பூச்சிய...உனக்கு கிடையாது கப்பு...
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்........

சீரியஸா ஒரு மேட்டர் : பொறந்த நாளும் அதுவுமா புள்ளய இப்படியா கலாய்க்கிறது...உடனே மன்னிப்பு கேட்டு போஸ்ட் போடு...

21 comments:

Anonymous said...

டெஸ்ட் மெஸேஜ் (789374394)

Anonymous said...

நல்லா கலாச்சுட்டீங்க ரவி

கிருஷ்ணன்,.

Anonymous said...

அருமை செந்தழல். இதுபோன்ற பதிவுக்காகத்தான் நான் ஸ்வீடனில் இருந்து வருகிறேன்.

முகமது யூனுஸ்

Anonymous said...

அருமையான போஸ்ட்.

தங்கம்மா

Anonymous said...

கலக்கலான பதிவு...

Anonymous said...

இந்தப் பதிவுக்காக நான் என்னுடைய டிரான்ஸ்லேஷனை ஒதிக்கிவைத்துவிட்டு ஜெயராமனை மறந்துவிட்டு வந்துள்ளேன். நன்ற்.

Anonymous said...

இங்கே பின்னூட்ட கயமை நடைபெறவில்லை என்று ISO 9002 சான்றிதழ் அளிக்கிறேன்.

CBI ஆப்பீசர்,
சிலுக்குவார்பட்டி கூட்ரோடு,
சுங்குவார்சத்திரம்.

Anonymous said...

அன்புள்ள செந்தழல் ரவி அய்யா

எப்படி இருக்காங்க உங்க ஆயா ? இந்த பதிவு ஒரு வரலாற்று சிறப்புமிக்க பதிவு.

பாலா.

Anonymous said...

எக்ஸிகுஸ் மீ

நான் தான் ஒருசினல் பாலா. மேலே உள்ள பாலா எங்கோ இருந்து வந்த போலி பாலா. வேண்டுமானால் என்னுடைய ப்ரொபைல் பெயரில் 9002 என்ற தரச்சான்றிதழ் மீது உங்கள் பூனைக்குட்டியை வைத்து பார்க்கவும்

பாலா (ஒரிஜினல் தென்னமரக்குடி எண்ணை)

Anonymous said...

நான் தான் உண்மையான ரவி! ஐயகோ அதுக்குள்ள எம்பேரிலும் போளீயா சாரி போலியா!? (ராயலு ஓக்கேவானு பாத்துச் சொல்லு)

உங்கள் நண்பன்(சரா) said...

யோவ் ரவி மட்டுறுத்தல் பண்ணவில்லையா? தகிரியமான ஆள்தான் ஓய் நீரு( இப்போ கண்டுபோட்டுருப்பியே கடந்த பின்னூட்டம் என்னோடதுதான்னு)

Anonymous said...

சரா மடியில் கனமில்ல வழியில பயமில்ல ஹி ஹி

பின்னூட்டம் இட்ட செர்வாண்டஸ் முகமது யூனுஸ் தங்கம்பா எல்லோரும் என்ன வழி மாறி வந்துட்டீங்களா ? பைதிவே வாழ்த்துக்கள்...!!

உங்கள் நண்பன்(சரா) said...

//சரா மடியில் கனமில்ல வழியில பயமில்ல ஹி ஹி
//
இப்போது கனமில்லை என்றால் ஒன்றும் பிரச்சனையில்லை! சந்திப்பிற்க்கு வரும்போது "கனம்"மில்லாமல் வந்துவிடவேண்டாம், சரியா "8pm" க்கு ஜோதில கலக்கிடலாம்!

Anonymous said...

போச்சா போச்சா 1117 போச்சா

Anonymous said...

ஈட்டிக்கி இங்கிலீஸ்ல என்னங்க ?

Anonymous said...

//OXFORD டிக்ஸனரி said...
ஈட்டிக்கி இங்கிலீஸ்ல என்னங்க ? //

ஜாவெலின்(Javelin) றா மரமண்டை.

Anonymous said...

இந்த பதிவுல என்ன தான் எழுதியிருக்க்க...பதினஞ்சு பேரு புண்ணூட்டம் போட்டுருக்கானுவ

Anonymous said...

ராமுக்கு ஒரு செய்தி..

போலிப்பதிவு போட்ட இராம் இப்போது அவர் போட்ட போலி பின்னூட்டங்களை எல்லாம் நீக்கிவிட்டார். புரிந்துணர்வுக்கு நன்றி போலி இராம்.

இராம்/Raam said...

பதிவை படிச்சி சிரிச்சிட்டேன் ரவி....

இந்த கமெண்ட் நாந்தான் போட்டேன்கிறதுக்காக என்னோட பதிவிலயும் போய் போட்டுக்காவா???

ஹி ஹி

இராம்/Raam said...

/ராமுக்கு ஒரு செய்தி..

போலிப்பதிவு போட்ட இராம் இப்போது அவர் போட்ட போலி பின்னூட்டங்களை எல்லாம் நீக்கிவிட்டார். புரிந்துணர்வுக்கு நன்றி போலி இராம்.//

பயப்புள்ளயே எனக்கு மெயில் அனுப்ப சொன்னேன்..... மெயில் அனுப்பலைன்னா அவரோட விபரங்களை சீக்கிரமே பதிவா போட்டுற வேண்டியதா வரும் :)

வெண்பா said...

என்ன ரவி, புதுசா ராகச ஆரம்பிச்சாச்சா?