Monday, April 23, 2007

ஒரு வயதுவந்தோர்க்கான பதிவு : முத்தத்தின் வகைகள் (அ)

ஒரு வயது வந்தோர்க்கான பதிவு ஒன்றை எழுதும்போது சற்றே நெளிந்து தான் எழுதவேண்டும்...(சேர் சரியில்லைங்க...) இருந்தாலும் எழுதி விடுகிறேன்...இது முத்தத்தின் வகைகள் பற்றியதானது ஆகும்...மேலும் இது கொடுக்கப்படும் முத்தங்களை பற்றி பதிவு அல்ல...இது வாங்கப்படும் முத்தங்கள் பற்றியதானது...

ல்ல்ல்ல்ல்லூ லூ....புஜ்ஜிக்குட்டிங்களா...மீ மீ மீ மீ...பப்பாபபபா....நாப்கின்ல உச்சா போயிட்டியாடா செல்லம்...உங்க தாத்தா கோவனமா போட்டிருத்த தான் செல்லம் இப்போ நாப்கின்னு அப்படீன்னு நீ போடறே...மம்மு சாப்பிடறியாடா குட்டீ.....சமத்தா இருக்கனும்...எங்க அ ஆ சொல்லு...பூ பூ பூ....சாப்பிடலனா பாலபாரதி அங்கிள்ட புடிச்சு குத்துருவேன்...மீ மீ மீ..

என்னங்க வெளங்கலையா ?

விஷயம் இதுதான்...நான் தான் மொதல்லே சொல்லிட்டனே...இது (ஒரு) - 1 - One வயது வந்தவர்களுகான பதிவுன்னு.....அடிக்க வராதீங்க...விஷயத்தை சொல்லிடுறேன்...

குழந்தைகளுக்கான இந்த பதிவை அபி அப்பா - மை பிரண்ட் மற்றும் பாஸ்டன் பாலா / இலவச கொத்தனார்கள் (ஒரு வயது) குழந்தைகளுக்கு படிச்சு காமிச்சு அவங்க என்னா சொல்றாங்க என்பதை கமெண்டாக போடவும்.....(ஆமா கொழந்த என்ன சொல்லப்போவுது...யீ யீ யீ வ்வ்வ்வ்வ்வ்வா....(வாயில இருந்து கொஞ்சம் ஜொள்ளு) ஆஆஆஆ...மீ மீ மீ.....

குழந்தைக்கு பிடிக்காத ஒரு விஷயம் என்னான்னா பாக்குறவங்க எல்லாம் தூக்கி, அட கொழந்த எவ்ளோ அழகா சிரிக்குது என்று குழந்தையின் விருப்பத்துக்கு மாறாக அதன் கன்னத்தில் ஒரு 'இச்' பதிப்பது...

ஏன்யா, கொழந்த உங்கிட்ட கிஸ் கேட்டுதா ? பிறகு ஏன் டார்ச்சன் பன்ற என்பது போல் பக்கத்து வீட்டு குழந்தை என்னை பார்த்த போது எல்லா குழந்தைகளின் மன நிலையும் எனக்கு புரிந்து, குழந்தைகளுக்கு ஆதரவான இந்த பதிவும் போடவைத்துவிட்டது...

குழந்தைகள் விருப்பத்துக்கு மாறாக கிடைக்கும் கொடுமையான முத்தங்களின் வகைகளை கீழே பாருங்கள்...

* பனியன் போட்ட சனியனின் பகட்டான முத்தம்...

* ஈட்டி வாயனின் இடியாட்டிக் முத்தம்...

* பான் பராக் வாயனின் கொடுமையான முத்தம்...

* பிஸ்கட் கூட வாங்கித்தராதவனின் பிக்காரி முத்தம்...

* நாற வாயனின் நாஸ்டி முத்தம்..

இது போன்ற முத்தங்களின் போது பெரும்பாலான வாய்கள் பல்லு விளக்கிய வாய்கள் (குறைந்த பட்சம் 3 நாட்கள்) இல்லை....இது குழந்தைக்கு எவ்வளவு பெரிய பாதிப்பை ஏற்ப்படுத்தும்...

குழந்தைகளுக்கான ஐடியாக்கள்:

எக்ஸ்கியூஸ் மீ குயந்தைகளே...இது போன்ற நேரங்களில் உங்கள் பால் பல்லை வைத்து நறுக்குனு கடித்துவிட வேண்டும்...இல்லையென்றால் முத்தம் அளிக்கும் அங்கிளின் மூஞ்சியை நோக்கி "உச்சா" அடித்துவிடவேண்டும்.....(வீட்டுக்கு யாராவது தெரியாத அங்கிள் வந்தால் வருகின்ற உச்சாவை அடக்கி வைத்து, இது போன்ற சந்தர்ப்பத்துக்கு காத்திருக்க வேண்டும்)....

இந்த செந்தழல் அங்கிள் மீது மட்டும் சற்று கருணை காட்டவேண்டும்...சரியா..உங்களுக்காக பதிவெல்லாம் போடுறேனே...

பாபா...பீ..பூ....ட்விங்கிள் டிவிங்கிள் லிட்டில் ஸ்டார்...சிம்பு இல்ல சூப்பர் ஸ்டார்...சரியா ச்ச்சாப்புடல அவுஸ்திரேலியா பொட்டிக்கடை பூச்சாண்டிக்கிட்ட புடிச்சு குத்துருவேன்...மீ மீ மீ....அங்கிள் வர்ட்டா...

சீ யூ...ப்ப்ப்ப்ப்பூ....ப்ப்ப்ப்பூ.....வ்வ்விஷ் விஷ்....

17 comments:

Anonymous said...

டிஸ்கி : குழந்தைகளே, உங்க அனுமதி இல்லாம பதிவ போட்டதுக்கு மன்னிக்கவும்

Anonymous said...

குழந்தை பதிவு பிடிக்காமே போய் 1 பாத்ரூம் அடித்தா அதை இந்த பின்னூட்ட பெட்டியில் போட்டுடலாமா

கதிர் said...

:)

Premkumar said...

நீர் இப்பதான் இப்படியா இல்லே சின்னவயசிலேர்ந்தே இப்படியா?

Baby Pavan said...

Thanks uncle for all your ideas. Baby Pavan

சென்ஷி said...

நீ ஒரு பச்சப்புள்ளன்னு தல சொன்னப்ப நம்பல..

இப்ப நம்ம்ம்பிட்டேன் :)

Pot"tea" kadai said...

ராசா,

உன்னோட கொழந்தைக்கு மொத முத்தம் நான் தான்...
இந்த நாள்ள்ள்ள்ள்ள்...எழுதி வெச்சிக்கோ...

செவ்வாய்க்கிழமை (பாரு கிழமையிலேயே செவ்வாய்னு வருது பாரு)
மாலை 5:35
நார்த் குயின்சுலாந்து
திகதி - 24 04/07

பாரதி தம்பி said...

:::)))

Hari said...
This comment has been removed by the author.
சினேகிதி said...

\\எக்ஸ்கியூஸ் மீ குயந்தைகளே...இது போன்ற நேரங்களில் உங்கள் பால் பல்லை வைத்து நறுக்குனு கடித்துவிட வேண்டும்...இல்லையென்றால் முத்தம் அளிக்கும் அங்கிளின் மூஞ்சியை நோக்கி "உச்சா" அடித்துவிடவேண்டும்\\

:-)))))) engada veeda ipidi nadanthiruke:-)))

மிதக்கும்வெளி said...

iwakarநீங்கள் குழந்தைகள் என்று சொல்வது என்னைப் போன்ற குழந்தைகளையா?

மிதக்கும்வெளி said...
This comment has been removed by the author.
மிதக்கும்வெளி said...

நான் கேள்விப்பட்டது உண்மைதானா?

மங்கை said...

அங்கிள்..அங்கிள்

எங்க பேர ச்ச்சொல்லி இப்ப்பி யல்லா கிறுக்கினா..அப்புயம் கட்ச்சி வச்டுவம்..


:-))).. நல்லா இருக்கு ரவி..ரசிச்சோம்

உங்கள் நண்பன்(சரா) said...

ஏனுங்க ரவி! நீங்கள்ளாம் சந்திப்பிற்கு அதுவும் "8PM" வருவதாக வாக்களித்தீர்கள்! சரி அப்படியே உங்களையும் பார்த்து குஜிலிகளை கரெக்ட் பண்ணுவது எப்படினு( வலைப்பதிவர்களில் எனக்குத்தெரிந்து அதிக பெண்நண்பிகள் உள்ள பதிவர்) தெரிஞிக்கலாம்னு பாத்தா நீங்க வராம ஏமாத்திட்டீங்களே!:((((

அன்புடன்...
சரவணன்.

ulagam sutrum valibi said...

ravi thambi,neega thamasha soinaalum unmai eruku skin discease varum.

ulagam sutrum valibi said...

first thata paathen appuram "oru" paathu purijuten.