Tuesday, October 07, 2008

இரண்டு டவுசர் பாண்டிகளின் டிஜிட்டல் படம் !!!

எங்கள் இருவருக்கும் ஆரம்பத்தில் பதினேழாம் பொருத்தம்...அப்புறம் தான் தெரிந்தது, பல விடயங்களில் நாங்கள் இருவரும் ஒரே திசையில் பயணிக்கிறோம் என்பது...!!!!

எங்கள் இருவருக்கும் உள்ள ஒற்றுமைகளை பட்டியலிட்டால்...

1. சாமி கும்பிடுவதில்லை
2. டோமர் மாதிரி பதிவு எழுதுவது
3. காதல் திருமணம்
4. அவுஸ்திரேலியா
5. பாஸ்டர்ஸ் பியர்
6. ஹாலி டேவிஸன் பைக் மீது காதல் ( அவரிடம் உள்ளது, என்னிடம் அதன் படம் மட்டும்)
7. மேட்டருக்கு / மீட்டருக்கு அலைவது
8. பின்னூட்டத்தில் மொள்ளமாறித்தனம் செய்வது
9. டவுஸர்
10. புகை பழக்கத்தை விட்டுவிட்டது

வேற்றுமைகளை சொன்னால் இந்த பதிவு தாங்காது...யாரடா அந்த டாபர்கள் என்று பார்க்கிறீர்களா ?

சமீபத்தில் என்னுடைய புறாக்கூண்டு வீட்டுக்கு (பெங்களூரு) வருகை தந்த பொட்டீக்கடையார் தான் அவர்...அவர் போட்டிருந்த டவுஸரை பார்க்கும்போது இவர் பொட்டீக்கடையா அல்லது ஜட்டீக்கடையா என்று தெரியவில்லை...(லக்கி, தமிழச்சி கவனிக்க)...



படம் ஒரு தலைப்பட்சமாக எடுக்கப்பட்டுள்ளது. அதனால் கழுத்தை சாய்த்து பார்க்கவும். கழுத்து சுளுக்கு மற்றும் அய்யோடெக்ஸ் செலவுக்கு நான் பொறுப்பல்ல...!!!

படத்தை பார்த்துவிட்டு, இதை சூடான இடுகையாக தமிழ்மணத்திலும், அதிக ஓட்டுகள் குத்தி தமிழிஷிலும் முதலில் கொண்டுவரவும்...

இது போன்ற டவுசர் பாண்டிகள் உங்கள் நன்பர்கள் இருந்தால் அவர்கள் படத்தையும் போட்டு ஒற்றுமை வேற்றுமைகளை பிரித்தாளுகை செய்க...!!!

வாழ்க பின்னூட்ட மொள்ளமாறித்தனம்..
வாழ்க பின்னூட்ட முடிச்சவுக்கித்தனம்..
வாழ்க பின்னுட்ட டுபுரித்தனம்..(நன்றி அதிஷா / பரிசல்)
வாழ்க தனம்..

லேபிள்: மொள்ளமாறிகள், முடிச்சவுக்கிகள் ( நன்றி தீவு)

Tuesday, September 30, 2008

அடிப்படை அறிவு கூட இல்லாத எளுத்தாளர் வளர்மதி

அரைகுறை சிற்றிலக்கிய எளுத்தாளர் வளர்மதியின் சமீபத்திய பதிவில் மிதக்கும் வெளி சுகுணா திவாகரை பற்றி தரக்குறைவாக எழுதி இருந்ததை கண்டித்து பின்னூட்டம் போட்டிருந்தேன்...

அதில் வேறு ஒரு தோழர் எழுதிய பின்னூட்டத்துக்கு

///குடும்பத்தாரின் பெயரையும் நான் இழுக்கவில்லை.////

என்று பதில் தந்திருக்கிறார், இண்டலக்சுவல்(என்று சொல்லிக்கொள்ளும்) அரைகுறை அடிப்படை அறிவு கூட இல்லாத சிற்றிலக்கிய மேதை எளுத்தாளர் வளர்மதி...

இழிபிறவி என்றும் ஈனப்பிறவி என்றும் அதே பதிவில் தோழர் சுகுணா திவாகரை தரமற்று பேசிவிட்டு, இப்படி ஒரு பதில்...

நான் அங்கே இட்ட பின்னூட்டம் வெளிவரவில்லை, அதனால் இந்த தனிப்பதிவு...

ஒருவரை இழி பிறவி என்று சொல்லுதல் அவரின் பெற்றோரின் தனிமனித ஒழுக்கத்தை சாடும் செயலாகும்...

இந்த அடிப்படை அறிவு கூட இல்லாமல் என்ன எளுத்தாளர் நீ ?

என்ற அடிப்படையான கேள்வியை எழுப்பி இருந்தேன்...அதற்கு பதில் சொல்லாமலும், அந்த பின்னூட்டத்தை வெளியிடாமலும் இருக்கிறார் அந்த எளுத்தாளர்.

ஒருவரை தரமில்லாமல் பொதுவெளியில் அவதூறாக பேசுவது தவறு. புத்தகம் எல்லாம் எளுதியிருக்கும் வளர்மதி அவர்களுக்கு இந்த அடிப்படை அறிவு கூட இல்லாதது பெரும் சோகம்...!!!

தமிழ்ஷ் : ப்ளாகர் பதிவுகளுக்கான ஓட்டளிப்பு பட்டை

தமிழ்ஷ் திரட்டி, ப்ளாகர் பதிவுகளுக்கான ஓட்டளிப்பு பட்டையை தந்துள்ளது. இதன் மூலம் நமது பதிவில் இருந்தே பதிவின் வாசகர்கள் ஓட்டளிக்க முடியும்...

http://blog.tamilish.com/pakkam/7

லக்கியாரின் பதிவில் தமிழ்ஷ் பட்டையை பார்த்துவிட்டு இது எப்படா என்று தமிழ்ஷ் ஓப்பன் செய்தபோது இதை கண்டுகொண்டேன். என்னுடைய பதிவிலும் அளித்துள்ளேன்...

என்னுடைய புதிய பதிவான ஒரு வாசகியின் பார்வையில் பதிவில் இந்த கருவிப்பட்டை பொருத்தப்பட்டுள்ளது...

தமிழ்ஷில் வாசகியின் பார்வை முன்னேற ஓட்டளிக்கவும்...!!! நன்றி !!!

ஒரு வாசகியின் பார்வையில் !!!

வணக்கம் சகோதரி...முதல் முறையாக ஒரு வாசகி, தமிழ் வலைப்பதிவு உலகத்துக்கு அளிக்கும் செவ்வி இது..(பேட்டி / சரியான தமிழ் வார்த்தை செவ்விதான்)...

உங்களை பற்றி சொல்லுங்க, எப்படி தமிழ் வலைப்பதிவுகள் படிக்க ஆரம்பிச்சீங்க ?

பெங்களூரில் தகவல் தொழில்நுட்ப துறையில் பணியாற்றுகிறேன்...அலுவலகம் முடிந்து வீட்டு சென்றபின் கணவர் வரும் வரையில் தினமலர் போன்ற தளங்களை மேய்வது வழக்கம்...அதன் மூலமாக தமிழ்ஷ் பழக்கமானது...கடந்த மூன்று மாதங்களாக தமிழ்ஷ் மூலம் வலைப்பதிவுகளை படித்து வருகிறேன்...

எப்படிப்பட்ட பதிவுகள் படிக்கிறீங்க ? பிடித்த பதிவு எது ? எந்த எந்த பதிவுகளை எப்படி படிக்கிறீங்க ?

பொதுவாக சீரியசாக எழுதும் வலைப்பதிவுகளை கண்டால் தூர விலகி ஓடுவேன்...உங்களுடைய வீராசாமீ பதிவு பி.டி.எப் கோப்பாக வந்தபோது அட தமிழில் இப்படி கூட எழுதறாங்களா என்று ரசித்தேன்...அப்போது அது ஒரு வலைப்பதிவு என்று தெரியாது...ப்ராக்லி ஸ்பீக்கிங், நான் ரெகுலராக படிப்பது குசும்பன் வலைப்பதிவு தான்..ஆம்லேட் மூலமாக வயதை கண்டுபிடிப்பது எப்படி என்று அவர் ஒரு குசும்பு பதிவு போட்டிருந்தார்...அதில் இருந்து ரெகுலராக அந்த பதிவுகளை வாசிப்பேன்...

நான் தமிழ்ஷ் மூலமாக, தலைப்புகள் ஈர்க்கும்படி இருந்தால் கண்டிப்பாக போய் படிப்பேன்...சில சமயம் தலைப்புகள் ஈர்க்கும்படி வைத்துவிட்டு உள்ளே மொக்கையாக இருக்கும்...தமிழ்ஷ் இல் அதிக ஓட்டுகள் வாங்கிய பதிவுகள் படிப்பேன்...

<இடைமறித்து> எப்படி பதிவுகளுக்கு போறீங்க ?

தமிழ்ஷ் மூலமாக பொதுவாக போவேன், ஆனால் குசும்பன், ஜ்யோராம் சுந்தர், பரிசல்காரன் போன்றவர்கள் பதிவுக்கு நேரடியாக URL டைப் செய்து இண்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் மூலமாக போவேன்...

தமிழ்மணம் பற்றி தெரியுமா ?

ஆங், அங்கங்கே லிங்க் பார்த்திருக்கேன் ஆனால் இன்னும் சென்றதில்லை, தினமும் தமிழ்ஷ் மூலமாக பதிவுகள் படிக்கிறேன்...

உங்களுக்கு பிடித்த பதிவர்கள் யார்?

குசும்பன், ஜ்யோராம் சுந்தர், வெண்பூ, பரிசல்காரன், அதிஷா போன்றவர்களின் பதிவுகளை தொடர்ந்து படிக்கிறேன்...உங்கள் பதிவும் படிக்கிறேன்...

எப்போதில் இருந்து படிக்கும் பழக்கம் ? பிடித்த எழுத்தாளர்கள் ?

சின்ன வயதில் இருந்து படித்துக்கொண்டிருக்கிறேன்...வீட்டில் அம்மா மளிகை கடை பொட்டலம் வாங்கி வந்தாலும் அதை கொட்டிவிட்டு அசுரத்தனமாக அதில் என்ன இருக்கிறது, அது எந்த புத்தகத்தின் பகுதி என்று கொலைவெறியோடு படித்திருக்கிறேன்...

சுஜாதா பிடிக்கும்...தேவிபாலா படுவேகமாக எழுதுவார்...படு விறு விறுப்போடு படிப்பேன்...

சாரு நிவேதிதா பற்றி ஏதோ சொல்லவேண்டும் என்றீர்களே ?

தனிமனித ஒழுக்கத்தோடு எழுதுங்கள் என்கிறார். இவர் ரொம்ப ஒழுங்கு. அவ்ளோதான்...

வலைபதிவுகள் படிப்பதால் என்ன நன்மை தீமை ?

பொதுவாக வலைப்பதிவுகள் ஒரு ஸ்ரெஸ் ரிலீப் என்று சொல்லவேண்டும்...வலைப்பதிவுகள் படிக்கும்போது மன அழுத்தங்கள் குறைந்து மனது லேசாகிறது...

பல்வேறு தகவல்களின் களஞ்சியம் என்றும் சொல்லலாம்...பொதுவாக செய்தி ஊடகங்களில் வெளிவராத தகவல்கள் கூட உடனுக்குடன் வெளியாகிது மிகவும் சிறப்பு...

எப்படிப்பட்ட பதிவுகள் வரவேண்டும் ?

நகைச்சுவை பதிவுகள் அதிகம் வரவேண்டும்...நகைச்சுவை என்ற பெயரில் மொக்கை போடுவது குறைய வேண்டும்...

தலைப்பு கவர்ச்சியாக வைப்பார்கள்...இங்கே க்ளிக் என்பார்கள்...உள்ளே சென்று க்ளிக் செய்தால் ஒரு மண்ணும் இருக்காது...இதுக்கு ஒரு பதிவு எதுக்கு ? டைம் வேஸ்ட் !!! போடும் மொக்கையை நல்ல மாதிரி, நகைச்சுவையா போடவேண்டும்...

வலையுலகின் எதிர்காலம் என்ன ?

இது ஒரு தொடர்பு ஊடகமாக, சோஷியல் நெர்வொர்க் ஆக, பிஸினஸ் நெர்வொர்க் ஆக உருவாக வாய்ப்பு உண்டு...மற்றபடி, பணிச்சுமை அழுத்தும்போது, மன அழுத்தம் குறைய வலைப்பூக்களை, நல்ல நகைச்சுவை வலைப்பூக்களை உபயோகிக்கலாம்...

உங்கள் குடும்பத்தினர் பற்றி / நீங்கள் வலைப்பூக்களை வாசிப்பதை அவர்கள் எப்படி எடுத்துக்கொள்கிறார்கள் ?

தகவல் தொழிநுட்ப துறையில் பணிபுரிகிறார் என்னுடைய கணவர், "அப்படி என்னதான் படிக்கிற அதுல" என்று ஆச்சர்யப்படுகிறார்..."அதெல்லாம் உங்களுக்கு தெரியாது" என்பேன்....

மொக்கை, கும்மி, பின்னூட்டம் என்பதெல்லாம் அவருக்கு புரியாத தமிழ் வார்த்தைகளாக உள்ளன...

வலைப்பூ ஆரம்பிக்கும் எண்ணம் உண்டா ?

கண்டிப்பாக...ஒரு அம்பது பதிவை எழுதி வைத்துவிட்டு, அதற்கு அப்புறமாக வலைப்பூவை ஆரம்பித்து ஒவ்வொன்றாக பதிவிடவேண்டும் என்பது என்னுடைய ஆசை...இன்னும் ரெண்டு மாசம் போகட்டும், இன்னும் ஒரு அதிரடி பதிவரை சந்திக்கபோகிறது இந்த வலையுலகம்...

************************************************************************

வாழ்த்துக்கள்...கண்மணி அக்கா சகோதரி ராப் போல காமெடியில் கலக்க வாழ்த்துக்கள்...!!!!

வளர்மதிக்கு எனது கண்டனங்கள் !!!!

வளர்மதி என்ற சிற்றிலக்கிய எளுத்தாளர் ப்ளாக் எழுதுகிறார்...அதில் ஒரு பதிவில் என்னுடைய நன்பர் சுகுணா திவாகர் (மிதக்கும் வெளி) தரமற்ற வார்த்தைகளை பயன்படுத்தி சாடியுள்ளார்.

அவருக்கு எனது கடுமையான கண்டனங்களை இங்கே பதிவு செய்கிறேன்...(உங்கள் தனிப்பட்ட பிரச்சினைகளை - சுகுணா திவாகரின் பணத்தினை திருடியது உட்பட) தனிப்பட்ட வகையில் வைத்துக்கொள்ளுங்கள்...

உங்களுக்கு அரிப்பு என்றால் உங்கள் வீட்டு பாத்ரூமில் கிறுக்கிக்கொள்ளுங்கள்...பொதுவெளியில் என்னுடைய நன்பரை சாடவேண்டாம்...

வளர்மதிக்கு எனது கண்டனங்கள்...!!!

வளர்மதி என்ற சிற்றிலக்கிய எளுத்தாளர் ப்ளாக் எழுதுகிறார்...அதில் ஒரு பதிவில் என்னுடைய நன்பர் சுகுணா திவாகர் (மிதக்கும் வெளி) தரமற்ற வார்த்தைகளை பயன்படுத்தி சாடியுள்ளார்.

அவருக்கு எனது கடுமையான கண்டனங்களை இங்கே பதிவு செய்கிறேன்...(உங்கள் தனிப்பட்ட பிரச்சினைகளை - சுகுணா திவாகரின் பணத்தினை திருடியது உட்பட) தனிப்பட்ட வகையில் வைத்துக்கொள்ளுங்கள்...

உங்களுக்கு அரிப்பு என்றால் உங்கள் வீட்டு பாத்ரூமில் கிறுக்கிக்கொள்ளுங்கள்...பொதுவெளியில் என்னுடைய நன்பரை சாடவேண்டாம்...

Wednesday, August 27, 2008

இலைக்காரனை கண்டறிந்தேன்...!!!

பல சமயம் காமெடியாகவும், சில சமயம் உண்மையிலேயே எரிச்சலை மூட்டும் வகையிலும் எழுதும் இலைக்காரன் யார் என்று நீண்ட நாட்களாக தேடிவந்தேன்...

கையில் வெண்னையை வைத்துக்கொண்டு நெய்க்கு அலைந்தமாதிரி...

தி.மு.கவையும் அதன் தலைவரையும் கடுமையாக விமர்சித்தும், பா.ம.க விலகினால் வரவேற்றும், மீண்டும் திரும்பி தி.மு.க கூட்டனிக்கு வந்தால் மறுபடி திட்டியும், ஜெ எப்படா ஆட்சிக்கு வருவார் என்று உண்மையான ஆற்றாமையில் எழுதும்...

நன்பர் நல்ல தந்தி தான் அவர்...

அவரது பதிவுகளை வாசிக்க இங்கே செல்லவும்...!!!

Tuesday, August 26, 2008

தமிழ்மணம் பூங்கா வருமா வராதா ?

மாதக்கணக்கில் தமிழ்மணத்தில் பதிவை இணைக்கும்போது பூங்காவில் அதனை இணைக்குமாறு க்ளிக்கி வருகிறேன்...ஆனால் பூங்காவைத்தான் இன்னும் வரக்கானோம்...

பூங்கா வராது என்றால் ஏன் அதை கேட்டுக்கொண்டிருக்கவேண்டும் ? அந்த வரிகளை நீக்கிவிடலாமே ?

டெஸ்டிங் துறையில் இருக்கும் என்னைப்போன்றவர்கள் ஒரு குறையை எவ்வளவு நாள் பார்த்துக்கொண்டிருப்பது :))))

Wednesday, August 20, 2008

மதன் அவர்கள் செய்துள்ள காமெடி !!!!

எஸ்.கோபாலன், நங்கநல்லூர்.
அரிசிக்கு ஏன் அரிசி என்று பெயர் வந்தது?


பல சர்வதேச மொழிகளில் அரிசிக்கு ஒரே மாதிரி ஒலிக்கும் பெயர்தான். பிரெஞ்சு மொழியில் ரைஸ் (Riz), இத்தாலியில் ரைஸோ, ஜெர்மனியில் ரெய்ஸ், ரஷ்யாவில் ரைஸ் (Ris). ஆங்கிலத்தில் Rice. தமிழிலும் அதே ஒலியோடு அரிசி! எல்லாவற்றுக்கும் மூலம் சம்ஸ்கிருதம். அதில் - ரையி!

மதன் சொல்கிறார், எல்லாவற்றும் மூலம் "செத்த" மொழியான சம்ஸ்க்ருதம் என்று !!! இவருக்கு எப்படி தெரிந்தது எல்லாவற்றுக்கும் மூலம் சம்ஸ்கிருதம் என்று ? கால இயந்திரம் உருவாக்கி பயணித்து பார்த்துவிட்டு வந்தாரா ? ஒருவேளை "இந்த உண்மையை" ஆப்ரிக்காவில் ஏதாவது பழங்குடியினர் இவருக்கு "சம்ஸ்கிருதத்திலேயே" லெட்டர் போட்டு தெரிவித்திருப்பார்களோ ?

எதால் சிரிப்பது என்று தெரியாமல் புத்தகத்தை மூடிவிட்டேன் !!!!

Friday, July 11, 2008

சோதிடத்தை நம்பும் அம்பிகளே, மாமிகளே !!!


*************************** ********** ************** *************** ************* * ************** ************* * **************** *********** *************** ******************** *********** ************** ******************** *********************** *****************

தமிழ்மணம் ஹேக் செய்யப்பட்டது !!!!!!1

இன்று காலை தமிழ்மணம் ஹேக் செய்யப்பட்டது...!!! அதிர்ச்சியான இந்த தகவலை நான் அறிந்துகொண்டது ஒரு காமெடி பதிவை தமிழ்மணம் நிர்வாக குழுவின் வலைப்பதிவில் இருந்து போடப்பட்டபோதுதான்...

இந்த காமெடி பதிவை படியுங்கள் !!!

யார் அந்த ஹேக்கர் ? நமது அன்புக்குரிய திரட்டியான தமிழ்மணத்தின் நிர்வாகி ஒருவரின் மூன்றுவயது குழந்தைதான் அது :)))

ஹி ஹி !!!!

காமம் என்ற தலைப்பிட்டு கதை எழுதிய சுந்தரின் பதிவை "***" கொடுத்து எடிட் செய்து, எடிட்டர் வெற்றிலைப்பாக்கு ஆனந்தவிகடன் அய்யங்கார் மாமா போல் நடந்துகொண்டது சரி !!! ஆனால் பதிவருக்கு எந்தவித விளக்கமும் கொடுக்காமல் இந்த செயலை செய்தபோதுதான், இவ்வளவு நாட்களாக சிறப்பாக இயங்கிவரும் நிர்வாகத்தினர் கணினி ஹேக் ஆகிவிட்டதோ என்று சந்தேகம் ஏற்பட்டது...

"காமத்துப்பால்" பற்றி தலைப்பிட்டு திருக்குறள் விளக்கம் எழுதினால் அதைகூட மட்டுறுத்தல் செய்வார்களா என்ன ? திருவள்ளுவரே, உமக்கேன் இந்த கதி ?

///அப்படியான சொற்களை மட்டுமே தமிழ்மணம் மட்டுறுத்தி உள்ளது. அவற்றினைக் கொண்ட இடுகைகளை தமிழ்மணம் நீக்கவில்லை என்பதையும் தெரிவித்து கொள்கிறோம்////

இப்படி சொன்னால் என்ன அர்த்தம் ? அதே எடிட்டர் மனோபாவம் தானே ?

//இடுகைகளின் தலைப்புகள் இத்தகைய சிறப்பு பகுதியில் இடம் பிடிக்கவும், வாசகர்களை தொடர்ந்து இழுக்கவுமே வைக்கப்படுவதாக தமிழ்மணம் நம்புவதால்//

இந்த நம்பிக்கை சரியா - தவறா என்று கொஞ்சம் யோசித்திருக்கவேண்டும்...ஜ்யோராம் சுந்தர் அப்படி செய்யவில்லை என்பது என்னுடைய கருத்து...!!!

நிர்வாகத்தின் தரப்பிலிருந்து பதிவர்கள் கருத்துக்கேட்டிருக்கவேண்டும்...ஒரு சர்வே வைத்திருக்கவேண்டும்...அப்படி வெளிப்படையாக - ட்ரான்ஸ்பரண்ட்டாக இந்த செயலை செய்திருந்தால் - யாரும் கேள்விகேட்டிருக்கப்போவதில்லை...

அமெரிக்காவில் இருந்து திரட்டியை நடத்துவதால் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை போய்விட்டதா என்ன ? அனைத்து வாசகர்கள் கருத்தை வெளிப்படையாக கேட்கும் பழக்கமே கிடையாது என்பது தான் என்னுடைய குற்றச்சாட்டு...குறைந்த அளவு பதிவர்களின் கருத்தை கேட்டு(பதிவர்கள் - தமிழ்மணம் நிர்வாகிகள் சந்திப்பு போன்ற) அதன் அடிப்படையில் முடிவெடுப்பது சரியில்லை...

///தமிழ் வலைப்பதிவு சூழல் குறித்து ஒன்றுமே தெரியாத நிலையில் புதியதாக தமிழ்மணத்திற்கு வரும் ஒரு வாசகர் வரிசையாக “காமக் கதைகள்” என்ற தலைப்புகளை பார்த்தால் தமிழ்மணம் குறித்து என்ன நினைப்பார் என்று எண்ணிப் பாருங்கள். அதனை எண்ணியே இப்படியான நடவடிக்கையினை மேற்கொண்டோம். ///

குப்பையான குமுதம் நடுப்பக்க வாசகர்களை விட, பதிவை படிப்பதை விட அதன் உள்ளடக்கத்தை உணரும் தரமான வாசகர்கள் தமிழ்மணத்துக்கு வருதல் நலம்...(இந்த இண்டலக்சுவல் லிஸ்ட்ல நான் இல்லை, ஹி ஹி, நான் சினிமா நிருபர் - வாழ்க..கோஷ்டி :) )

இணையத்துல குப்பைகள் இல்லையா என்ன ? குப்பையை பார்க்கவேண்டும் என்று நினைப்பவர், தமிழ்மணத்தில் உள்ள காமக்கதைகளை பார்த்துத்தான் குப்பையாவார் என்றில்லை...குப்பை என்றும் குப்பைதான்...!!!!

தமிழ்மணத்தை கூகிள் விளம்பரம் செய்து அதன் வாசகர் தளத்தை விரிவாக்குதல் நலமே !!! இன்னும் இரண்டு வருடங்களுக்கு பிறகு "காசி" என்பவர் யார் என்றுகூட தெரியாமல் போகும் வாய்ப்பு உள்ளது...அதுபற்றி எனக்கு கவலை இல்லை...(அவருக்கும் இல்லை, கேட்டால் சொல்வார்..)..

தமிழ்மணம் நிர்வாகம் அடிக்கடி சொல்வது போல தமிழ்மணம் என்பது முழுக்க முழுக்க வாசகர்கள் எழுதும் பதிவுகளால் செயல்படுவது...இதில் வெத்தலைப்பெட்டி எடிட்டர் மாமா இல்லை...ஆனால் சர்வாதிகார போக்கின் மூலம், மீண்டும் வெத்தலைப்பெட்டி மாமாவின் நிலைக்கு கொண்டுசென்றுவிடாதீர்கள்...

இந்த பதிவின் மூலம் நான் சொல்லவருவது

ட்ரான்ஸ்பரன்ஸி தேவை...
பதிவர்களின் கருத்தை கேட்கவேண்டும்...

பி.கு: ஆனா எனக்கு ஒரு ஆசை சுகுணா திவாகர், ஜ்யோராம் சுந்தர், அய்யனார், பைத்தியக்காரன், ஆடுமாடு, வளர்மதி...இந்த பின்னவீனத்துவ குழுவினரை ஒரு ரூம்ல பத்து புல் வோட்கா, டாஸ் காப்பிடல்ஸ், ஒரு பண்டல் சிகரெட் பாக்கெட் கொடுத்து அடைச்சுடனும் :))

Monday, July 07, 2008

கோவை வாத்தியார் சுப்பைய்யாவுக்கு ஒரு கேள்வி

சோதிடம் - கிரகங்கள் என்றெல்லாம் சொல்கிறீர்கள் அல்லவா...அது சம்பந்தமான ஒரு கேள்வி..

சோதிடம் ஒன்பது கிரகங்களால் ஆனதுங்கறீங்க...பழைய காலக்கணக்கு அது...

ஆனா இப்போ நூற்றுக்கும் மேற்பட்ட கிரகங்கள், ஆண்ட்ரமீடா, பால்வெளி மண்டலம், ஹப்பிள், கரும் புள்ளி என்று வான் வெளி ஆராய்ச்சியில் உச்சத்துக்கு சென்றுவிட்டோம்...(ஒரு தமிழ் வலைப்பதிவர் நாசாவுல பணியாற்றுகிறார், டவுட் இருந்தால் அவரை கேட்டுக்கொள்ளலாம்...)

இன்னும் கிரகம், ராசி, லக்கினம் என்று உப்புப்பெறாத விடயங்களை வைத்து வகுப்பறை நடத்துக்கிறீர்களே ? இவற்றில் எல்லாம் மருந்துக்கு கூட பகுத்தறிவு என்பதே இல்லையே ? யோசிக்கமாட்டீங்களா வாத்யாரே ?

பொண்ணுக்கு கல்யாணம் பண்ணிவைக்க முடியாத பிக்காரிங்க, செவ்வாய் தோஷம்னு கல்யாணத்தை தள்ளிப்போட்டு, பெண்களை முதிர்கண்ணியாக்கும் கொடுமை இன்னும் வேண்டுமா ?

வாஸ்து என்ற பெயரில் ஒழுங்கா இருக்க வீட்டை சனிமூலை, சூரிய மூலைன்னு பணக்காரனுங்க மாத்தினா பரவாயில்லை...நடுத்தரவர்க்கத்துக்காரனும் கையில் இருக்கும் காசை வாஸ்து மேஸ்திரியிடம் கொடுத்து வீணாகிறார்களே ? அந்த பணத்தை பிள்ளைங்க படிப்பு செலவுக்கு பயன்படுத்தலாம் என்று பகுத்தறிவோடு ஆலோசனை சொல்வீரா, அல்லது வாஸ்து ஈஸ் த பெஸ்ட், சைனீஸ் வாஸ்துவையும் முயற்சி செய்யுங்க என்று ஆலோசனை சொல்வீரா ?

கிளிசோசியம் பார்த்தால் வாழ்க்கை மாறிவிடும் என்றால், அந்த கிளி சோசியக்காரன் ஏன் ஐந்து ரூபாய்க்கு லோ - low என்று வெய்யிலில் அலைகிறான் - கிராக்கி பிடிக்க ?

ராசியான திசை தெற்கு என்றால், இண்டர்வீயூ நடக்கும் அலுவலகம் அதற்கு ஆப்போசிட் திசையில் இருந்தால் - எப்படி - பூமியை சுற்றி அந்த அலுவலகத்துக்கு போவனுமா ?

சாமியை நம்புறீங்க, அதனால பேயையும் நம்புறீங்க, ராவுல பிஸ்ஸடிக்க போகும்போது கூட "அய்யோ அங்கன பேய் இருக்கும்" என்று அலறும் சிறுவன் - பிரச்சினை எங்கே இருக்கிறது ? சாமியிலா, பேயிலா ?

பகுத்தறிவு, பகுத்தறிவு என்று கரடியாக கத்திக்கினு இருந்தாரே - ஒருத்தர் - மிஸ்டர் பெரியார்...அவரை பற்றி உங்கள் கருத்து என்ன ?

Sunday, July 06, 2008

சென்னையில் என்னுடைய முப்பத்தி ஐந்தாவது வீக் எண்ட்

இன்றைக்கு வழக்கம்போது காலையில் எழுந்தேன்...ரூம் மேட்ஸ் இரண்டு பேரும் பாத்ரூமில் ஒருவரும், பால்கணியில் ஒருவருமாக ஆக்குபை செய்ய...

நால் பால்வாங்கிவர புறப்பட்டேன்...

பால் ரூ பத்து.

பாக்கெட்டில் இருந்ததோ பதிநான்கு.

ஏன் பதினான்கு தெரியுமா ? நாலுரூப்பியாவுக்கு ஒரு கிங்ஸ் வாங்கி நாற்றமில்லாமல் அடிக்கத்தான்...

அடுத்தது தனியாக சினிமா பார்க்க போகவேண்டியது தான்...ஏன் தனியாக என்று கேட்கிறீகளா ? பரங்கிமலை ஜோதிக்கு தனியாகத்தான் போகவேண்டும்...தாத்தாவுமா கூட வருவார் ?

நான் லிஸ்ட் எடுத்தபடி தனியாக நான் போகும் இடங்கள்...

1. பாத்ரூம்
2. பரங்கிமலை ஜோதி.
3. பால் வாங்க.
4. பக்கத்து வீட்டு ஆண்டியிடம் மோர் மொளகா கடன் வாங்க.

நீங்களும் இதையே ட்ரைபண்ணுங்க. நான் என்னுடைய முப்பத்து ஒம்போதாம் வீக் எண்ட் அன்று மீண்டும் முழுமையான லிஸ்ட் போடுகிறேன்..

பை பை டாமீஸ்...

கமா கதைகள்...(23455)...(1)...



ஒரு புள்ளியும் ஒரு கமாவும் சந்தித்துக்கொண்டபோது...புள்ளி சொன்னது...உணர்வை விட உற்சாகம் முக்கியம்...காதலை விட காற்று முக்கியம்...சரி அதனால்

என்ன என்றுகேட்டது கமா..கமாவை கமாவாக பார்க்காமல், எதனோ ஒரு வடிவத்தின் நீட்சியாக பார்க்கலாம் என்றது புள்ளி...நீட்சியென்றால்...மீட்சியா என்றது கமா...மீட்சியோ, மிரட்சியோ அது எனக்கு தெரியாது...ஆனால் அது ஆதிக்கத்தில் ஆரம்பித்து, பாதிப்பில்

முடிவடையும் என்றது புள்ளி..புள்ளியுடன் இனைந்து உறவுகொள்ள கமாவுக்கு காதல் தேவையாக இருக்கவில்லை..காற்றுக்கென்ன வடிவமா இருக்கிறது...காதலுக்கும் தான் இல்லை...புள்ளிக்கு தேவை ஒரு புள்ளி. ஆனால் கமாவுக்கோ தேவை சற்று நீளமான

கோடு. கோட்டை புள்ளியோடு இணைத்தால் அது கமா. இணைவது காமன் செயல். அதாவது பொதுச்செயல். பொதுவில் வைப்பதால் அது பொதுவானதா ? இல்லை அந்தரங்கமானதா ? அந்தரத்தை உயரத்தில் தான் வைக்கவேண்டுமா ?

அடியிலும் வைக்கலாம்...!!!!!!

பின்குறிப்பு: எதிர்பார்த்தது கிடைக்கவில்லை என்றால் கிடைத்ததை எதிர்பார்ப்பதே சரியானது : ஜப்பானிய அறிஞர் கொயமோட்டோ டொமோட்டோ...

Saturday, June 21, 2008

அசோகமித்திரன் : மிஸ்டர் "மாமீஸ்" ரைட்டர்

லக்கியும், பாலபாரதியும் வாங்கி அனுப்பிய புத்தகங்கள் வாசித்துக்கொண்டிருக்கிறேன்..

அசோகமித்திரன் சிறுகதைகளை "முத்துக்கள் பத்து" என திலகவதி தொகுத்திருக்கிறார்...படித்து முடிக்குமுன் சன்னல் வழியாக வீசியெறிந்துவிட்டேன்...

உண்மைத்தமிழனாவது மொக்கையான புத்தகங்களை எடைக்கு போடும்வரை பொறுமை காத்திருக்கிறார்...



என்னால் முடியவில்லை...

அம்பது வருடங்களாக எழுதினாராமே ? எனக்கு என்னமோ எல்லாம் குப்பை என்று தோன்றுகிறது...

இண்டலக்சுவலுகளுக்காகவும், மாமிகளுக்காகவும் கதை எழுதும் இதுபோன்றவர்கள் ...ச்ச்சே !!!

ஆனந்த விகடன் வாசிக்கும் மாமிகளை "தனது" எளுத்தால் கட்டிப்போட்ட அசோகமித்திரனுக்கு இந்த பதிவு சமர்ப்பணம்...

Wednesday, June 18, 2008

ஜே.ஜே. சில குறிப்புகளில் இருந்து...!!!!

சுந்தர ராமசாமியின் ஜே.ஜே சில குறிப்புகளை மேயுங்கால் கிடைத்த சில முத்துக்கள்...

பிரம்மச்சரியம்:

இயற்கை ஆணுக்கு அளித்த மிகப்பெரிய கொடையை உபயோகப்படுத்தாமல் வெறும்பயலாக இருப்பது...

மொளனம்:

கையில் இருக்கும் ஒரே ஆயுதம்...மொளனம் கலையும்போது அந்த ஆயுதம் பயன்படுத்தப்படுகிறது...

அற்புதமான புத்தகம்...படிச்சு கிடிச்சு தொலைச்சுறாதீங்க...டவுசர் கிழிந்து தாவு தீரும்...

Tuesday, June 17, 2008

அய்யா, என்னுடைய வலைப்பூவை பார்த்து ஆலோசனை வழங்குங்கள் - விஜய் (கோவை)

முக்காவாசி பதிவுல இது தான் இருக்கு...

தயவுசெய்து யாராவது ஆலோசனை வழங்குங்கள்...



ஆலோசனைக்கு ஆலோசனை வழங்கும் குழு,
அடுக்குமாடிஆலோசகர் தெரு,
அய்யப்பந்தாங்கல்...

Sunday, March 30, 2008

தமிழச்சியின் இடுகையை மீண்டும் தமிழ்மணம் சேர்க்கவேண்டும்

பெரிய கோரிக்கை எல்லாம் இல்லை...தமிழச்சி அவர்களின் வலைத்தளத்தை மீண்டும் தமிழ் மணத்தில் சேர்க்கவேண்டும்...

பெண்ணீய கலகக்குரல் - அது கண்டிப்பாக வேண்டும் இந்த காலகட்டத்தில்..

வார்த்தைகளில் தவறுகள் இருப்பதாக நீங்கள் நினைக்கலாம், அப்படி நீங்கள் கட்டாயமாக நம்பும் இடுகைகளை மட்டும் நீக்கலாமே, முழு பதிவையும் ஏன் தூக்கவேண்டும் ?

அப்படி சேர்க்கும்போது அது மலேசியா ஐ.பியில் இருந்து சேர்க்கப்படுகிறதா, சேர்ப்பவரின் மின்னஞ்சல் தமிழச்சியின் மின்னஞ்சலை ஒத்திருக்கிறதா என்று கண்டு அதன் பிறகே சேர்க்கவேண்டும்...

களவாடப்பட்ட தமிழச்சியின் தளம் தவறாக உபயோகப்படுத்தப்படலாம்...அதனால் தமிழ்மண நிர்வாகிகள் எச்சரிக்கையாகவும் பொறுப்புடனும் நடந்துகொண்டு, தமிழச்சியின் தளத்தை சேர்ப்பதோடு, அதன் ஆத்தண்டிக்கேஷனையும் பார்க்க வேண்டும்...

Saturday, March 29, 2008

வசந்தம் ரவிதான் போலி டோண்டு மலேசியா மூர்த்தியா ?

வசந்தம் ரவி எதையோ எழுதினார் என்பதற்காக பதிவர்கள் NMH எடிட்டர், முகுந்தின் இ-கலப்பை உட்பட மென்பொருட்களை நீக்கிவிட்டு மொக்கையாகிறார்கள் என்று ஆனபிறகு உண்மையை சொல்லிவிடலாம்...

"தமிழ் தட்டச்சு" மென்பொருட்கள் என்று குன்ஸாக பெயர் வைத்து அவர் எந்த மென்பொருளை டார்கெட் செய்கிறாரோ அது புரியவில்லை, ஆனால் கூகுள் டூல்பார், மைக்ரோ சாப்ட் வேர்டு உட்பட எந்த மென்பொருளும் இணையத்துடன் தொடர்புகொண்டு தகவல்களை அனுப்ப முடியும்...

இட்லிவடையின் இ-மெயில் ஹேக்கிங் படம் எப்படி கிடைத்தது இவனுக்கு ? ஹேக் செய்ததே இவன் தானோ ?

தமிழ் இணையத்தில் ரெண்டு வருடம் குப்பை கொட்டிவிட்டால் போதும், எது மலேசியா மூர்த்தியின் பதிவு என்று குழந்தை கூட சொல்லிவிடும்...

இப்போதெல்லாம் மின்னஞ்சலில் உயர் பாதுகாப்பு தகவல்கள், வங்கி கணக்குகள் போன்ற விவரம் இருப்பதால் உங்கள் மின்னஞ்சலை பாதுகாத்துக்கொள்வது நல்லது தான், ஆனால் மின்னஞ்சலை பாதுகாக்கிறேன் என்று வசந்தம் ரவி அலைஸ் போலி டோண்டு அலைஸ் மலேசியா மூர்த்தி அலைஸ் விடாது கருப்பு பேச்சை கேட்டீங்கன்னா,

முதலுக்கே மோசமாகும். வேலியில் போற ஓனானை காதில் விட்டுக்கொண்டது போல ஆகும்...

பதிவர்களை ஒரு மென்பொருளை டவுன்லோடு செய்ய சொல்லுகிறானே, அந்த மென்பொருள் கூட ஒரு திருட்டு மென்பொருளாக இருக்கும்...

பதிவர்களே - இந்த "தெய்வமகன்" வசந்தம் ரவி அலைஸ் விடாது கருப்பிடம் இருந்து (மூர்த்தி) தப்பித்துகொள்ளுங்கள்....

Wednesday, March 26, 2008

தமிழ்மண பிரச்சினை

கடந்த சில நாட்களாகவே இந்த பிரச்சினை தமிழ்மணத்தில் இருந்துகொண்டிருக்கிறது. சொல்லலாம் என்றால் யாரிடம் சொல்வது என்று தெரியவில்லை...

கிசு கிசுவாக எழுத இரவுக்கழுகாரும் இல்லை...என்ன செய்ய, இப்படி பதிவு போட்டுத்தொலைக்கவேண்டியிருக்கிறது...



தமிழ்மணத்தை ஒப்பன் செய்தாலே - இந்த மாதிரி மைக்ரோசாப்புட்டு வார்னிங் வருகிறது. இது என்னுடைய கணினி கோளாறா - அல்லது தமிழ்மண கோளாறா தெரியவில்லை...

இந்த பதிவை நீக்கிவிடவேண்டாம் என்று தமிழ்மண நிர்வாகத்தினரை கேட்டுக்கொண்டு, (மொக்கைதான்), இதனை காமெடியாக எடுத்து கட்டாயம் சிரித்தேயாகவேண்டும் என்று கொழுவி அவர்களை கேட்டுக்கொண்டு, இப்போதைக்கு இடத்தை காலிசெய்கிறேன்...

தமிழ்மணத்துக்கு என்னுடைய புல் சப்போட்டு உண்டு ( தமிழச்சி பதிவை மீண்டும் சேர்த்துக்கோங்கப்பா )

Tuesday, February 26, 2008

தமிழச்சியின் பதிவை நீக்க கூடாது...

தமிழச்சி பதிவை நீக்க பாரி.அரசு, உண்மைத்தமிழன் ஆகியோர் பதிவிட்டுள்ளார்கள்...தமிழ் பித்தன் கூட தன்னுடைய பழைய பகையை தீர்த்துக்கொள்ள தமிழச்சியை கலாய்க்க முயல்கிறார்...(இவர் பதிவு நாறிய போது நான் நீக்க கோரிக்கை விடுத்திருக்கனும், ராஸ்கல் வந்துட்டான் நாதாரி)

பாரி அரசுவின் பதிவில் நான் போட்ட பின்னூட்டத்தை சார் வெளியிடவில்லை...நான் அப்படி ஒன்றும் எழுதவில்லை...தமிழச்சி எழுதவேண்டும் என்று தான் லைட்டாக எழுதினேன்...ஹும்...பழகும் இடம் சரியில்ல என்ன செய்வது ?

அப்படி பார்த்தால் பக்கம் பக்கமாக எழுதும் உண்மைத்தமிழன் பதிவை நீக்கவேண்டும்...

ஸ்பெல்லிங் மிஸ்டேக்கோடு எழுதும் தமிழ் பித்தனின் பதிவையும் நீக்கவேண்டும்...

புரியாமல் கவிதை எழுதும் அய்யனாரை நீக்கவேண்டும்..

எப்போதும் மொக்கை போடும் அபி அப்பாவை நீக்கவேண்டும்...

குசும்பை தொழிலாக கொண்ட குசும்பனை நீக்கவேண்டும்...

எல்லாரையும் நீக்கிடுங்க...யாருமே இல்லாத கடையில யாருக்கு டீ ஆத்தப்போறீங்க ?

தமிழச்சி பதிவை படிக்க விரும்பவில்லை என்றால் மூடிவிட்டு போங்கள்..யாரும் இங்க அழல அதுக்காக...பெண்ணீயத்துக்கு எதிராக உங்கள் முகத்திரை இதன் மூலம் கிழியுது....

Tuesday, February 12, 2008

Wishes !!!! கருத்து கந்தசாமி !!!!



உங்கள் கருத்துடனே நானும் ஒரு பிட்டைப் போட்டுக் கொள்கிறேன். !!!!!

Wishes : ILA...



Wishes ILA...!!!!!!!

Monday, February 11, 2008

கிழக்கு தைமூர் மேட்டர்.....



வழக்கமாக அவுஸ்திரேலிய பயணங்களின்போது நான் மிகவும் ரசிக்கும் தீவு தைமூர்...இரண்டு பக்கமும் சேர்ந்தால் கூட மொத்தமே 10 கி.மி அகலம் இருக்கும் என்று நினைக்கிறேன்...ஆனால் உயர உயர மரங்களுடன் ரொம்பவே ரசிக்கும்படி இருக்கும்...

விமானத்தில் உள்ள மேப்பில் திமோர் கடல் என்று பெரிய கடல்பரப்பு இருக்கும்...மனசுக்குள் அப்பாடா...அரைக்கிணறு தாண்டிட்டோம்...அடுத்து டார்வின்...அடுத்து சிட்னி...என்று கணக்கு போட்டுக்கொண்டே போவதும் இந்த கிழக்கு தைமூரை பார்த்துக்கொண்டுதான்...

போர்ச்சுக்கீசிய ஆதிக்கத்தில் இருந்து 1977ல் விடுபட்டதுன்னு நினைக்கிறேன்...அதிலிருந்து தைமூரில் இந்தோனேசிய ஆதிக்கம்...1999ல இந்தோனேசியா - போங்கடான்னு விட்டுட்டானுங்க...அட 2002ல தாங்க உருப்புடியான ஜனநாயகம் மலர்ந்தது...



அதை வாங்கிக்கொடுத்த ஜோஸ் ரமோஸ் கோர்த்தாவுக்கு நோபல் பரிசு ( அமைத்திக்கான) கிடைச்சது...அதே சமயம் அவர் கிழக்கு தைமூரின் அதிபராகவும் பொறுப்பேற்றாருங்க...

2006 ல முன்னாள் காவல்துறை தலைவரான அல்பர்டோ ரோனிடோவுக்கு நாட்டை ஆளனும்னு ஆசைவந்து கலவரம் - காம்ப்ரமைஸ் எல்லாம் ஆச்சுங்க...(அந்தாளுக்கிட்ட மொத்தமே 600 சோல்ஜர்ஸாம்)...( அதுலேயே எனக்கு டவுட்டு...)

பாவிப்பய...ரெண்டு ஜீப்ல வந்து அதிபரை அதிகாலையில 4.30 மணிக்கு போட்டுட்டான்...குண்டு காயத்தோட, ஆஸ்திரேலிய படையினர் அவரை டார்வினுக்கு (ஆஸ்திரேலியாவில் உள்ளது) தூக்கிட்டு போயிருக்காங்களாம்...ஆள் கோமா ஸ்டேஜ்ல இருக்காராம்...

அதிபர் மாளிகை செக்கியூரிட்டிகளோட நடந்த சண்டையில ரோனிடொவும் செத்துட்டானாம்...உலக நாடுகளோட அதிபர்கள் எல்லாம் கவலை தெரிவிச்சிருக்காங்க...

நம்ம இந்திய பிரதமர் அலுவகத்துல இருந்துகூட இரங்கல் அறிக்கையும், தைமுரில் ஜனநாயகத்தை நிலைநாட்டனும், அப்பாவி மக்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படாமல் காக்கனும்னு சிங்ஜி அறிக்கை உட்டிருக்கார்...

எங்கியோ இருக்க தைமூர் தீவுக்கு குரல்கொடுக்கும் இந்திய பிரதமர் அலுவலகம், இங்கே இருக்க இலங்கைத்தீவில் இருக்கும் தீவிரவாதியான ராஜபக்சேவிடம் ஜனநாயகத்தை நிலைநாட்டவும், பொதுமக்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கவும், மனித உரிமைகள் காக்கவும் அறிக்கை விடாமல் வாய்மூடி மவுனியாக உள்ளது ஏனோ ? மத்திய அரசில் அங்கம் வகிக்கும் தி.மு.க, பாட்டாளி மக்கள் கட்சி எல்லாம் என்னைக்கு வாய திறக்குமோ ?

Sunday, January 13, 2008

தமிழ்ப்புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்



தமிழ்ப்புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் !!!!

கர்நாடக சட்டசபைத்தேர்தல் : பா.ஜ.க வெற்றி முகம்

நடந்துமுடிந்த கர்நாடக சட்டசபைத்தேர்தலில் பாரதீய ஜனதா கட்சி அதிகபட்ச தொகுதிகளில் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறது...அந்த கட்சியின் எடியூரப்பா (ஆங்கிலத்தில் நேமாலஜிப்படி எட்டியூரப்பா ( yettiyurappa) ) முதல்-அமைச்சராக பொறுப்பேற்றார்..தேர்தலுக்கு முன்னால் கட்சியில் சேர்ந்த எம்.பி பிரகார் போலீஸ் மந்திரியாக மீண்டும் பதவியேற்றார்.....

ஏஏஏஏஏஏஏஏ நிறுத்துப்பா...இன்னும் எலக்சனே நடக்கல...அதுக்குள்ள நீரு ரிசல்ட்ட சொல்றீரா...அப்படீங்கறீங்களா...அட டருஜாவாதீங்க...அதுதான் நடக்கப்போவுது இங்கன...

அனுதாப அலை அலை அப்படீம்பாங்களே...அது அடிங்குதுங்க இப்ப பி.ஜே.பிக்கு...மதச்சார்பற்ற ஜனதா தளத்தால் தாங்கள் ஏமாற்றப்பட்டதாக தெருவுக்கு தெரு பிரச்சாரம் செய்துவருகின்றனர் பாரதீய ஜனதா கட்சியினர்...

அதுவும் இல்லாமல் ஜெயிக்குற குதிரையில் பந்தயம் கட்டும் அரசியல் வியாதிக்கூட்டம், கொத்துக்கொத்தாக கல்லா கட்டிக்கொண்டிருந்த கட்சியை விட்டு, பாரதீய ஜனதாவின் பக்கம் தாவிக்கொண்டிருக்கின்றனர்...

நான் இருக்கும் அல்சூர் லேக் ஏரியா கவுன்சிலர் - தமிழர், இதுநாள் வரை காங்கிரஸில் இருந்தார்...ஸ்போர்ட்ஸ் பைக் விவகாரங்களில் அவருக்கும் எனக்கு கொடுக்கல் வாங்கல் உண்டு...நேற்று தடாலடியாக காங்கிரஸில் இருந்து பி.ஜே.பிக்கு ஜம்ப் அடித்தார்...

அய்யா ஏன் அய்யா இந்த மங்கி ஜம்ப் என்றதற்கு, அடப்போ ரவி, எம்.எல்.ஏவே ஜம்பிட்டார்...நான் என்ன பிஸ்கோத்து என்கிறார்...

மேலும் குஜராத் மற்றும் இமாசல பிரதேச தேர்தல்களில் வெற்றியை ருசி பார்த்துள்ள பாரதீய ஜனதாவினர், சில பல பெட்டிகளை இறக்கிவிட்டுள்ளதாக தெரிகிறது...

நம்ம ஏரியா கவுன்சிலருக்கு வந்த அமவுண்டில் ஒரு ட்ரிப்பிள் பெட்ரூம் ப்ளாட் ஹாட் கேக் சர்ஜாப்பூர் ஏரியாவில் ஹாட் கேஷுக்கு வாங்கப்போறாராம்...(அமவுண்ட் எல்லாம் நான் சொல்லமாட்டேன் ஆமாம்...)

காங்கிரஸ் செய்வதறியாமல் விழித்து நிற்கிறது...ஏற்கனவே உள்ள கோஷ்டிகள் தனியே கிடக்க, கவர்னராக போன எஸ்.எம்.கிருஷ்னா, நானும் வருவேன் ஆட்டத்தை கலைப்பேன் ரீதியில் பேசி வருகிறார்...சோனியா சொன்னால் களத்தில் இறங்குவேன்...மன்மோகன் சிங் சொன்னால் மீண்டும் குதிப்பேன்...வீட்டம்மா சொன்னால் காருக்கு பெட்ரோல் போடுவேன் என்று தினம் ஒரு அறிக்கை கொடுத்துவருகிறார்...

மதசார்பற்ற ஜனதா - கவுடா கோஷ்டிகள் நொந்து நூடுல்ஸ் ஆகிவிட்டன...பேசாம கவர்மெண்ட பாரதீய ஜனதாவுக்கே கொடுத்து இன்னும் இருவது மாசம் கல்லா கட்டியிருக்கலாம் என்ற நிலைக்கு வந்துவிட்டார் தேவே.கவுடா...குமாரசாமி கடும் டெண்ஷனில் இருக்கிறார் தந்தை மீது...முத்தாய்ப்பாக, தேவ கவுடா, தன்னுடைய அரசியல் வாழ்க்கை வரலாற்றை எழுதப்போகிறேன் என்று சொல்வது, கிட்டத்தட்ட ஜனதா தளம் அஸ்தமணம் ரேஞ்சுக்கு வந்துவிட்டது தெரிகிறது...குமாரசாமி நல்லவர்...இந்த அலைக்கு எதிர்த்து பத்து பதினைஞ்சு எம்.எல்.ஏ தேத்துவது கஷ்டம் என்று அவருக்கு தெரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்...

கட்டங்கடைசியாக காங்கிரஸ் எடுத்துள்ள அஸ்திரம், வாக்காளர் சேர்ப்பில் குளறுபடி என்று நெற்றியில் நீண்ட நாமம் போட்ட (கிச்சா ?? )தேர்தல் கமிஷனரை வைத்து ஆங்கிலத்தில் பேட்டி கொடுக்க வைத்தது தான்...மேலும் உங்கள் பெயரில் போலி வாக்காளர் இருந்தால் அதற்கு பொறுப்பாளி நீங்கள் தான், உங்களுக்கு தான் ஜெயில் தண்டணை என்றெல்லாம் பயமுறுத்திக்கொண்டிருக்கிறார்கள்...

எனக்கென்னமோ பார'தீ'ய ஜனதா சுனாமிபோல் சுழன்று வந்துகொண்டிருக்கிறது...அதில் தாக்குப்பிடிக்க கவுடாவின் / மல்லிகார்ஜுன கார்கேயின் / தரம்சிங்கின் / குமாரசாமியின் / குமார பங்காரப்பாவின் / சீத்தாரம்மையாவின் அரசியல்கள் எடுபடாது என்று தான் தோன்றுகிறது...

சென்னையில் இருந்து பெங்களூர் வாரீங்களா ?

சென்னையில் இருந்து பெங்களூர் வாரீங்களா ?

மக்கள்ஸ்...நீங்க பெங்களூர்வாசியா ? பொங்கலுக்கு சென்னைப்பக்கம் திரியறீங்களா ? அப்படீன்னா கொஞ்சமேனும் ஒரு ஹெல்ப் வேனும்...அப்பிடி ஆராச்சும் இருந்தா ஒரு போன் போடுங்கப்போவ்...

99160 84054 ( பெங்களூர் நம்பர்)

அன்புடன்
செந்தழல் ரவி