Wednesday, July 18, 2007

பாஸ்டன் பாலா செந்தழலுக்கு செய்த சிவப்பு துரோகம்

இந்த கொடுமைய நான் எங்க போய் சொல்லுவேன்...இது மாதிரி அநியாயம் நடந்தது உண்டா...என்ன கொடுமை இது...

அய்யா ஊரெல்லாம் புகைப்பட போட்டின்னு சூடு பறந்துக்கிட்டிருக்கு...பதினேழு வருஷத்துக்கு முந்தின படம், குஜராத்ல காக்கா கக்கா போன படம் ( கைப்புள்ள), பூவோட வண்டு சண்டைபோடும் படம், வீட்டுலேயே வளத்த சாமந்தி படம், வீட்டுக்கு வெளிய இருக்குற மரம் படம்னு எல்லாரும் இயற்கையை எடுத்து மொக்கை போட்டுக்கிட்டு இருக்காங்க...

நான் என்ன ஆசைப்பட்டேன்...போட்டியில கலந்துக்கிட்டு பரிசு வாங்கனும்னுதானே...ஆனா இவரு, என்னுடைய படத்தை தன்னுடைய ஸ்னாப்ஜட்ல கொசுறு வகையில வெளியிட்டு இருக்கார்...

நானும் சும்மாத்தான் கேட்குறேன்...கொசுறுன்னா இன்னா ? ஒரு கிலோ கத்திரிக்காய் வாங்கினா, கொசுறுன்னு துக்ளியூண்டு காய் ஏதாவது இருந்தா போடுவான் கடைக்காரன்...அதிலயும் அழுவுனது, ஓஞ்சது, காய்ஞ்சது இந்தமாதிரி தான் போடுவான்...இதுல வேற இன்னொரு கேவலம் என்னான்னா, ஒரு கிலோ தக்காளிக்கு ஒரு கத்திரிக்கா கூட கொசுறா போடுவான்...

இந்த பாபா என்னன்னா, என்னுடைய இந்த படத்தை கொசுறுல போட்டிருக்கார்...நீங்களே போய் நியாயம் கேளுங்க..


தலைப்பு: மாலையை மயக்கும் மதிவதனி...!!! (இயற்கை வந்துட்டுதா உள்ளாற ?)



இந்த போட்டோவுக்காக காலையில இருந்து சாயங்காலம் வரை வெயிட் பண்ணி, ட்ரெஸ் எல்லாம் சேஞ்ச் செய்ய வெச்சு, சும்மா இருந்த லேடியை மாடலிங் எல்லாம் செய்ய வெச்சு...ஹும்...எவ்ளோ உழைப்பு இருக்கு இதுக்கு பின்னால ? எந்த தைரியத்துல பாபா இப்படி செய்தார்...!!! நீங்களே நியாயம் கேளுங்க...இல்லைன்னா கண்ணகி மதுரையை குடும்ப பிரச்சினைக்காக எரிச்சமாதிரி ( இதுக்கு அழகிரிக்கும் சம்பந்தம் இல்லை) நானும் கொரியாவில ஏதாவது செய்வேன்...!!!

15 comments:

சுந்தர் / Sundar said...

பாபா பணுணது சிவப்பு துரோகம் இல்ல ...

அது பல வண்ண துரோகம் .

பிருந்தன் said...

அது சரி இந்த படம் இயற்கையா? செயற்கையா? பொண்ணு பார்க்க மெழுகு பொம்மை போல இருக்கு அதுதாப்பா கேட்டேன்.

ரவி said...

//அது சரி இந்த படம் இயற்கையா? செயற்கையா? பொண்ணு பார்க்க மெழுகு பொம்மை போல இருக்கு அதுதாப்பா கேட்டேன்.

//

பிருந்தன் அண்ணை இது நிஜமான பொண்ணு... தொலைபேசி எண் தருகிறேன் பேசுறீங்களா

ரவி said...

.////அது பல வண்ண துரோகம் . ///

அது...!!!

வெட்டிப்பயல் said...

//செந்தழல் ரவி said...

//அது சரி இந்த படம் இயற்கையா? செயற்கையா? பொண்ணு பார்க்க மெழுகு பொம்மை போல இருக்கு அதுதாப்பா கேட்டேன்.

//

பிருந்தன் அண்ணை இது நிஜமான பொண்ணு... தொலைபேசி எண் தருகிறேன் பேசுறீங்களா //

கண்டிப்பா...

Anonymous said...

ஒருக்கா பார்த்தாலே ஒடம்பை உசுப்பேத்தியிட்டுது. சும்மா சண்டை வேண்டாம் சார்!நம்ம பக்கம் தள்ளிவிடுங்க, வயது போன காலத்தில கொஞ்சம் ஜாலி இருக்கலாம்.

புள்ளிராஜா

Boston Bala said...

உங்க படம் போட்டிக்கு வந்தால், மற்றதெல்லாம் அம்பேல் என்பதால், பயந்து போய் கொசுறு என்று கொசுவாக நினைத்து அடித்ததை வெளிச்சமிட்டதற்கு கண்டனம் கலந்த நன்றி :))

Boston Bala said...

---கொரியாவில ஏதாவது செய்வேன்.---

அமைதிப் பூங்காவான கொரியாவில், வடக்கிற்கும் தெற்கிற்கும் சண்டை மூட்டும் சக்தியைக் கண்டுகொள்ளுங்கள் என்று புஷ்ஷுக்கு கோள் மூட்டணும்... இருங்க

ரவி said...

//பிருந்தன் அண்ணை இது நிஜமான பொண்ணு... தொலைபேசி எண் தருகிறேன் பேசுறீங்களா //

கண்டிப்பா...///

வெட்டி, உம்மை மாதிரி இளைஞர்களுக்கு தருவதில்லை என்ற கொள்கையே வைத்துள்ளேன்...நடுத்தர வயதினர் மற்றும் பல்லுபோனவங்களுக்கு தந்தா நாம் கொஞ்சம் சேப் சைட்ல இருக்கலாம் பாருங்க..

ரவி said...

///ஒருக்கா பார்த்தாலே ஒடம்பை உசுப்பேத்தியிட்டுது. சும்மா சண்டை வேண்டாம் சார்!நம்ம பக்கம் தள்ளிவிடுங்க, வயது போன காலத்தில கொஞ்சம் ஜாலி இருக்கலாம்.

புள்ளிராஜா

Thursday, 19 July, 2007
///

இப்படி ஒரு பெயரை வெச்சிருக்கீங்க...எப்படி இந்த மாதிரி நல்ல பொண்ணுங்க போன் நம்பர்லாம் தரமுடியும்...

ரவி said...

///அமைதிப் பூங்காவான கொரியாவில், வடக்கிற்கும் தெற்கிற்கும் சண்டை மூட்டும் சக்தியைக் கண்டுகொள்ளுங்கள் என்று புஷ்ஷுக்கு கோள் மூட்டணும்... இருங்க

Thursday, 19 July, 2007
///

அப்படி ஒரு ஐடியா இருக்கு...தனிப்பதிவா போடறேன்...

Osai Chella said...

லெஎழ் ஜி காமிழாவிழ புழிச்சதா தழழ்? #$%^*((

✪சிந்தாநதி said...

சிவப்பு அழகா இருக்கு.

ஆனா முழுக்க இயற்கைதானா? கொஞ்சம் மென்பொருள் சிவப்பு போலவும் இருக்கு?

அரவிந்தன் said...

ரவி,

நாமெல்லாம் ஓரே ஊர்....அதனாலே அந்த போன் நெம்பர் எனக்கு மட்டும் எக்ஸ்குஸீவ் முறையில் கொடுத்தா ரொம்ப நல்லா இருக்கும்..ஹிஹிஹி...

அன்புடன்
அரவிந்தன்
பெங்களுர்

சிநேகிதன்.. said...

நாரயணா கொசு தொல்ல தாங்க முடியலடா!!