Thursday, July 19, 2007

சர்வேசன் மற்றும் சீ.வி.ஆர் செய்த வரலாற்று பிழை

என்ன கொடுமை சரவணன்...ஜூலை மாத புகைப்பட போட்டியில் என்னுடைய படம் ஆட்டத்துக்கே செலக்ட் ஆவல....இது வரலாற்று பிழை....இந்த பிழைக்காக நடுவர்கள் ஆகஸ்ட் மாதம் வரை வருந்த வேண்டியிருக்கும்...

கானா பிரபா லொட்டையா ஒரு சொறிநாயை எடுத்து வெச்சிருக்கார்...அதை ஆட்டத்துல சேர்த்திருக்காங்க...யாரோ ஒருத்தர் ஒரு கிழவன் கிழவியை எழுத்திருக்காங்க...அதையும் ஆட்டத்துல சேர்த்திருக்காங்க...மொபைல் கேமாராவில் எடுக்கப்பட்ட சிறுவன் ஆட்டத்தில் இருக்கான்...இதை எல்லாம் சேர்த்த நடுவர்கள் எவ்வளவு போராட்டங்களுக்கு பிறகு எடுத்த இந்த படங்களை ஆட்டத்திலேயே சேர்க்காமல் விட்டது எந்த விதத்தில் நியாயம் ? இது அடுக்குமா ? இது நீதியா ?

நீதி கேட்டு நெடும் பயணம் புறப்படலாமா என்று யோசித்துக்கொண்டிருக்கும் இவ்வேளையில் பொடிநடையா நார்த் கொரியாவுக்கு போயிட்டேன்னா ? அங்க ஏற்கனவே நான் வேற முயற்சியில் இருக்கேன், அதனால உண்ணாவிரதம் இருக்கலாம் என்று முடிவுசெய்துள்ளேன்...

சியோல் - கஸாந்தாங் எல்.ஜி ஹுவேஸா அருகில் உள்ள யாச்சே காகே ( ஆபீஸுக்கு அருகில் உள்ள வெஜிட்டபுள் ஷாப்) அருகில் சனிக்கிழமை காலை பதினோரு மணியில் இருந்து பணிரண்டு மணிவரை உண்ணா நோன்பு இருக்க முடிவு செய்துள்ளேன்...நா.கண்ணன் போன்ற கொரிய பதிவர்கள் ஆபீசுக்கு லீவு போட்டுவிட்டு வந்து கலந்துகொள்ள வேண்டுமாய் வேண்டுகோளும் விடுக்கிறேன்...

என் புகைப்படத்தை சேர்க்கவில்லை என்றால் அதற்கு தக்க காரணத்தை நடுவர்கள் சொல்லியாக வேண்டும்...இல்லை என்றால் சர்வேசன் ஓட்டெடுப்பு நடத்தி என் பதிவை சேர்க்கலாமா இல்லையா என்று கேட்கவேண்டும்...ஏன்யா கிழவன், கிழவி, நாய், பூனை எல்லாம் ஆட்டத்தில் சேர்ப்பீங்க, நல்லதொரு பிகர் இருந்தால் சேர்க்க மாட்டீங்களா ? என்ன வயித்தெரிச்சல்பா ?

இது குறித்து - ஏற்கனவே ஸ்னாப்ஜட்ஜ் எனக்கு செய்த சிவப்பு துரோகம் குறித்து ( அதாவது என்னுடைய படத்தில் சிகப்பு கண்ணாடியில் இருந்து வரும் ஒளி முகத்தில் விழுமாறு செய்து எடுத்ததால் அது சிகப்பு துரோகம்) பதிவிட்டுள்ளேன்...கில்லியாவது பல்லிவிழாமல் வெளியிடவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்...

சமீபத்தில் கிடைத்த மாபெரும் விருது கூட எனக்கு அவ்வளவு பொருட்டல்ல, காரணம் இந்த விருதை பலமுறை பதிவர்களை கையால் பெற்றுவிட்டேன்...இருந்தாலும், இந்த போட்டோ மேட்டரில் மிகவும் சீரியஸாக உள்ளேன்...சர்வேசன், சி.வி.ஆர் போன்றவர்கள் எந்த பிகரையாவது இதுவரை போட்டோ எடுத்திருப்பார்களா என்று எனக்கு தெரியவில்லை...அதனால் அவர்களுக்கு அந்த உழைப்பு புரியவில்லை என்று நினைக்கிறேன்...இதன் மூலம் நடுவர்களின் நடுநிலைமை கேள்விக்குறி, ஆச்சர்யக்குறி, பிராக்கெட் என்று எல்லாமும் ஆகிறது...

உடனே என்னுடைய படத்தை ஆட்டத்தில் சேர்க்கவேண்டும்...இல்லை என்றால் உண்ணா நோன்புதான்...என்று நடுவர்களை கடுமையாக எச்சரிக்கிறேன்...அதை இங்கே உச்சரிக்கிறேன்...

8 comments:

வெற்றி said...

ரவி,
அமைதி...அமைதி :-)
உங்களின் போராட்டம் வெற்றியடைந்து விட்டது. சர்வேசன் உங்கள் படங்களையும் இணைத்துள்ளார். :-))

ரவி said...

இந்த பதிவுக்கு அ.மு.க வினர் ஆயிரக்கணக்கில் திரண்டு பின்னூட்டம் போடவேண்டுமாய் வேண்டுகிறேன்..

SurveySan said...

'iimsai'யின் படம் உங்களுதுன்னு ஒரு கன்ஃபூஷன் ஆயிடுச்சு.
ஒருத்தருக்கு ரெண்டுதான் அலவுட்னு நான்தான் உங்க கலைப் பொக்கிஷத்த சேக்காம வுட்டுட்டேன்.

தவறு புரிந்தது, உங்க 'மாஸ்டர்பீஸை'யும் ஆட்டத்துல சேத்தாச்சு :)

ஒரு 'அவசர' மீட்டிங் போட்டு, அத தூக்கணுமா, வேணாமான்னு ஆலோசிச்சு முடிவெடுக்கறோம்.

நம்மூரு பிகரா இருந்தா கூட ப்ரச்சனை இல்லை, நீங்க எங்கயோ போய் எந்த ஊரு பிகரையோ பிடிச்சது, நம்ம சட்டதிட்டங்களுக்கு உட்பட்டதான்னு, PiT (photography-in-tamil) கோட்பாட்டை பாத்துச் சொல்றேன்.

அமைதி அமைதி! :))

ரவி said...

ஆஹா, ரெண்டு ஐ வெச்ச இம்சை தான் பிரச்சினைக்கே காரணமா ?

இப்போது நடுவர்கள் என்னுடைய போட்டோவை ஆட்டத்தில் சேர்த்ததால்

நாளை நடைபெறவிருக்கும் உண்ணாவிரதத்தை கொரியா நாட்டு சரக்கான சோஜு அடித்து ரத்து செய்யப்போகிறேன்...

மேற்க்கொண்டு உலகப்போரை மூட்டிவிடும் வேலையில் தீவிரமாக இறங்கவிருக்கிறேன்...

பதிவர்கள் வ.வா.சங்க மொக்கை போட்டிக்கு தயாராகும்படி கேட்டுக்கொள்கிறேன்...

Anonymous said...

//நீதி கேட்டு நெடும் பயணம் புறப்படலாமா என்று யோசித்துக்கொண்டிருக்கும் இவ்வேளையில//

தோழா நீ என் இனம்டா.. உரிமைக்காக நாம் இதற்கு மேலும் செல்வோம் என்பதை இக்கணத்தில் தெரிவித்துக்கொள்கிறேன்.

ILA (a) இளா said...

வரலாற்று பிழையைத் தொடர்ந்து சீக்கிரம் புவியியல், அறிவியல் பிழைகளை எல்லாம் சுட்டிக்காட்டுமாறு கேட்டுக்கொல்லப்படுகிறார்,

அனானிகள் முன்னேற்றக் கழகம் (அ.மு.க) said...

//சமீபத்தில் கிடைத்த மாபெரும் விருது //

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

செந்தழல் என்னய்யா பெருந்தன்மை

Anonymous said...

போட்டாவை ஆட்டையில் சேர்க்காவிட்டால் அதே போட்டாவை வைத்து, கவுஜப் போட்டி நடத்தி, வலைப் பதிவர்களின் ஒட்டு மொத்த கவனத்தையும் திருப்பி, புகைப்படப் போட்டியை பிசுபிசுக்க வைப்போம் என்று அ மு க சார்பில் எச்சரிக்கிறோம்..
இவண்,
புதிதாக பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்ட ,
அ மு க ஒருங்கிணைப்பாளர்