Friday, June 12, 2009

கடைசி பக்கம் 12 ஜூன் 2009

கொஞ்சம் நியூஸ்..



கலாச்சார காவலர்கள்

கான்பூர் கல்லூரிகளின் மாணவிகள் இறுக்கமான ஜீன்ஸ் அணிய தடை விதித்த நிர்வாகம், இப்ப பேராசிரியைகளையும் இறுக்கமான ஜாக்கெட் அணியாதே என்கிறதாம்...




இது மனித உரிமை மீறல் என்றுதான் எனக்கு தோன்றுகிறது..எப்படி உடை அணியவேண்டும் என்று கூட இந்த கலாச்சார காவலர்கள்தான் சொல்வார்களாம்...சனியன் பிடித்த சகடைகள்...இவர்களை எல்லாம் சட்டை போடாத பாம்பை விட்டு கடிக்கச்செய்யவேண்டும்...

மாசிலாமணி




நகுல் சுனைனா நடித்த மாசிலா மணி படம் படு மொக்கையாம்...முந்தைய படத்தை நாக்கமுக்கவை வைத்தே ஒப்பேற்றிய சன் டிவி இப்ப என்ன செய்யப்போவுதோ தெரியல. திருட்டு விசிடியில கூட பார்த்து தொலையாதீங்கடே...

வடையில் ப்ளேடு



சென்னையில் சுற்றுலா வந்த பஞ்சாபி ஒருத்தர் பிரபல ஓட்டல் ஒன்றில் வடையை வாங்கி தின்னும்போது, வடையில் இருந்த ப்ளேடு வாயை கிழித்து ரத்த வெள்ளமாம். வழக்கமா மாஸ்டர்கள் சம்பளம் சரியில்லைன்னா சாப்பாட்டுல மூக்கு சிந்தி போட்டு அதுமேல வியர்வையை வழிச்சு ஊத்துவாய்ங்க. இப்ப ஷேவ் கூட சமையல் கட்டுலயே செய்ய ஆரம்பிச்சுட்டாங்க போல. பதிவர் இட்லிவடை பெங்களூரில் இருப்பதால் இதற்கும் அவருக்கும் சம்பந்தம் இல்லை என்று நம்புவோம்.

பன்றி காய்ச்சலுக்கு நொவார்ட்டிஸ் மருந்து



எனக்கு தெரிந்து ஸ்வைன் ப்ளூ பல ஆண்டுகளாக உலகத்தில் இருந்துகொண்டுதான் இருக்கிறது. ஆனால் இப்போது திடீரென ஸ்வன் ப்ளூ ஸ்வைன் ப்ளூ என்று எல்லோரும் (அதாவது அமெரிக்க & பிரிட்டன் மீடியா) கூக்குரலிட அவசியம் என்ன என்று தெரியவில்லை. ஒரு ஜேம்ஸ்பாண்ட் படத்தில் திட்டமிட்டு வைரஸை பரப்பி அதன் மருந்தை வைத்து பணம் சம்பாதிக்க முயலும் வில்லன் கதை நியாபகம் வருகிறது.

கோ.கோ பயிர்

எனக்கு தெரிந்து கோ.கோ (cocoa beans) ஒரு முக்கிய பண பயிர். இந்தியாவின் சாக்லெட் தேவையினை நிறைவேற்றிவரும் கேட்பரீஸ் உட்பட அனைத்து முக்கிய நிறுவனங்களும் கோகோவை இறக்குமதி செய்கின்றன.



இந்திய அரசும் மிகப்பெரிய வரியை விதித்து சம்பாதித்துக்கொள்கிறது. ஆனால் இந்தியாவில் கோகோ விளையும் தட்பவெப்ப நிலை பல இடங்களில் நிலவும்போது அதனை இந்தியாவில் பயிரிடும் வசதியை ஏற்படுத்தி கொடுக்கலாமே இந்திய அரசு ?

சமீபத்தில் கூட கொரியாவின் LOTTE சாக்லெட் நிறுவனம் சென்னையில் சாக்லெட் தொழிற்சாலை அமைப்பதாக தட்ஸ் தமிழ் செய்தி மூலம் அறிந்தேன்...

என்னைப்போன்ற ஒரு விவசாயி (நான் சத்தியமா விவசாயி) இதனால் பயன் அடைய முடியுமே ? விவரம் அறிந்தவர்கள் கொஞ்சம் சொல்லுங்களேன்..

X-Men Origins: Wolverine ஹாலிவுட் படம்



வழக்கம்போல ஹாலிவுட் பாலாவின் அக்கறை சீமை பதிவில் விமர்சனம் உள்ளது. எனக்கு பிடித்திருக்கிறது.

முன்பெல்லாம் படம் டவுன்லோட் செய்ய லிங்க் தேடி அலைவேன். ஆன்லைனில் பார்வையிடும் லிங்க் நல்ல க்வாலிட்டி இருக்காது. அதனால் கண் எரிச்சலும் நேர விரயமுமே மிச்சம். ஆனால் பிகேபி.இன் சமீபத்தில் கொடுத்த சுட்டியில் எல்லா படங்களும் நல்ல க்வாலிட்டி. நன்றி பி.கெ.பி..

10 comments:

ரவி said...

கோகோ பயிரிடுதலில் தமிழகம் 4 ஆவது இடத்தில் உள்ளது. முதலிடம் கேரளா (????..

Tech Shankar said...

நானும் விவசாயிதான். ஆனால் சின்னப்பிள்ளைங்க வெள்ளாமை வீடுவந்து சேராது - இப்படிச் சொல்லிச் சொல்லியே பெருசுங்க எல்லாம் என்னை வயக்காட்டுப் பக்கம் போகவே விடமாட்டேங்குதுங்க. சத்தியமா உண்மைங்க. நான் ரொம்ப சின்னப் பிள்ளை.

//என்னைப்போன்ற ஒரு விவசாயி (நான் சத்தியமா விவசாயி) இதனால் பயன் அடைய முடியுமே ?

அரவிந்தன் said...

//பதிவர் இட்லிவடை பெங்களூரில் இருப்பதால் இதற்கும் அவருக்கும் சம்பந்தம் இல்லை என்று நம்புவோம்.//

இது எப்பத்திலிருந்து.?

இட்லி வடை என்பது ஒரு குழுவாகத்தானே செயல்பட்டு வந்தது.

ILA (a) இளா said...

//ஆனால் பிகேபி.இன் சமீபத்தில் கொடுத்த சுட்டியில் எல்லா படங்களும் நல்ல க்வாலிட்டி. நன்றி பி.கெ.பி.//
link neengalum kudutha korainjaa poyiruveenga?

ஊர்சுற்றி said...

ஐயகோ, வடையில பிளேடா?!!!
பதறுதே!!!!

Anonymous said...

nanri ravi

Anonymous said...

link neengalum kudutha korainjaa poyiruveenga?

Anonymous said...

link neengalum kudutha korainjaa poyiruveenga?

Anonymous said...

link please

Anonymous said...

Waiting for the link for 4 days ..