Monday, June 22, 2009

உரையாடல் அமைப்புக்கு கதை அனுப்பியவர்களுக்கு - என் விமர்சனங்கள் பாகம் 3




41. எழுத்துப் பிறவி : ஸ்வாமி ஓம்கார்

அதிகம் டென்ஷனாகவில்லை ஸ்வாமிஜி. தன்னுடைய ஸ்வாமிஜி லைப் சம்பந்தமானதொரு கதையை எழுத்தில் மென்மையாக கொண்டுவந்திருக்கிறார்.

கதையில் முழுவதும் தொட்டுத்தொடரும் இளமை, மறுபிறவி, தியானம், அதில் ஒரு குட்டிக்கதை என்று ஒரு குட்டி காக்டெயில். கதையின் முடிவில் பெரிய ட்விஸ்ட் எதுவும் இல்லாதது மைனஸ்.

என்னுடைய மதிப்பெண் 60 / 100.

42. பசி........ : அது சரி

வழக்கம்போல சிறுகதை அடிப்படையற்ற கதை...இருந்தாலும் எடுத்துக்கொண்ட முயற்சிக்கும் நல்ல தேர்ந்த நீரோடை போன்ற நடைக்கும் கண்டிப்பாக பாராட்டவேண்டும்...

இலக்கில்லாமல் பயணித்து டொங் என முடிந்துவிடுவது அபத்தம். ஒரு குறிப்பிட்ட கேரக்டரை சுற்றியே முழு கதையும் பின்னப்பட்டிருப்பது இன்னொரு மைனஸ்...

இவர் கொஞ்சம் நல்ல கதைகளை வாசித்து எழுத பழகினால் அற்புதமான எழுத்தாளர் நமக்கு ரெடி...

என்னுடைய மதிப்பெண் 50 / 100.

43. பாஸ்கட் பால் : முரளிகண்ணன்

தேர்ந்த நடை. இரண்டு கேரக்டர்கள் பேசிக்கொள்வதை வாசிக்கும்போது ஏதோ நமக்குள் ஏற்கனவே பேசிக்கொண்டதை எழுத்தாக்கியது போல ஒரு பீலிங் எழுதவதை தவிர்க்க இயலவில்லை...

முடிவில் பெரிய ட்விஸ்ட் இல்லை என்றாலும், ஆக்கப்பட்ட விதம், எடுத்துக்கொண்ட கரு, அற்புதமான நடை ஆகியவை ஸ்கோர் செய்துவிடுகின்றன...

அடிப்படையில் பாஸ்கெட்பால் மற்றும் வாலிபால் ப்ளேயரான எனக்கு இந்த கதையை மறுபடி படித்து ரசிக்க முடிந்ததில் ஆச்சர்யம் ஏதுமில்லைதானே ? வாழ்த்துக்கள்...

என்னுடைய மதிப்பெண் 65 / 100.

44. தொலைபேசி (சிறுகதை - உரையாடல் : சமூக கலை இலக்கிய அமைப்பு) : சுழியன்

அரசியல் கதை. பொது தளத்தில் அப்படியே வெளியிட்டால் வம்பு வழக்கு வர வாய்ப்புண்டு. ஆனால் நிதர்சனம் முகத்தில் அறைவதை தடுக்கமுடிவதில்லையே...

100 சதம் உண்மைச்சம்பவம் போல தெரிந்தாலும், தன்னுடைய அழகான நடையில் ஸ்கோர் செய்கிறார் சுழியன். தேர்ந்த எழுத்து. படைப்பாளியின் நல்ல வாசிப்பனுபவம் நன்றாகவே தெரிகிறது...

என்னுடைய மதிப்பெண் 65 / 100.

45. செயற்கை மணம் ! (சிறுகதை போட்டிக்காக) : கோவி.கண்ணன்

கதைக்கும் தலைப்புக்கும் என்ன சம்பந்தம் என்று கடைசி ட்விஸ்ட்டில் புரிந்தது...எளிமையான நடை...

கதை எழுதுவது, அது பத்திரிக்கையில் வெளிவருவது போன்ற தீம் இந்த கதைப்போட்டிக்கு நல்ல சூட்...

எளிமை. கரண்ட் அபையர்ஸ். உண்மையோ என்று நம்பும் கரு....நல்ல ட்விஸ்ட். ஸ்கோர் செய்கிறது..

என்னுடைய மதிப்பெண் 68 / 100.

46. அவள் பத்தினி ஆனாள்- சிறுகதைப் போட்டிக்காக : ramachandranusha(உஷா)

அந்தகர் என்றால் குருடர் என்று அர்த்தம்...கதையை படிக்கும் முன் பின்னூட்டங்களை படிக்கவேண்டாம்...அப்படி படித்தால் க்ளைமாக்ஸ் ட்விஸ்டுடன் முழுமையாக கதையை ரசிக்கமுடியாமல் போகலாம்...

இதுவரை படித்த கதைகளில் வந்துள்ள முதல் வரலாற்றுக்கதை...நல்ல முயற்சி...நல்ல நடை...அழகு தமிழ்..நன்று...!!..வெற்றிக்கு வாழ்த்துக்கள்...!!!

என்னுடைய மதிப்பெண் 70 / 100.

47. மௌனம் சூழ்ந்த உறவு (போட்டிச்சிறுகதை) : தொடர்பவன்

எழுத்துப்பிழைகள். கதையில் வித்யாசம் காட்ட முயன்றிருக்கிறார் எழுத்தாளர். ஆனால் 'அந்த' குறிப்பிட்ட வித்யாசத்தின் ஆழமான பிரச்சினைகளை அலச முயலாமல் நுனிப்புல் மேய்ந்த்தால் கதையோடு ஒன்றிட தடையாகிறது...இன்னும் ஆழமாக எழுதியிருந்தால், அல்லது 'சமூகம்' தவறாக நினைக்குமோ என்று நாம் பேச துணிவதை, எழுத்தில் பேசியிருந்தால் ஒரு அற்புதமான கதை கிடைத்திருக்கும்தான்...

இருந்தாலும் 'வித்யாச' முயற்சி நன்று...!!! என்னுடைய மதிப்பெண் 55/100

48. கதை சொல்லும் கதை! : வால்பையன்

வித்யாசம் காட்ட முயன்றிருக்கிறார் வால்பையன். நல்ல சிந்தனை. போட்டி மற்றும் அதன் வெற்றியை நோக்கித்தான் பயணிக்கிறது இந்த கதை.

கதை நம்மோடு ஒன்றவோ, ஒரு சமூக பிரச்சினையை பேசவோ முயலாதது ஏமாற்றம்...இருந்தாலும் 'கிறுக்கு' புத்தியில் தோன்றிய 'நறுக்கு' சிந்தனை, வால்பையனின் இந்த மொக்கைக்கதை...

ரசிப்பதற்கேனும் கண்டிப்பாக ஒருமுறை படிக்கவேண்டும்...

என்னுடைய மதிப்பெண் 60/100

49. நாலணா : அமிர்தவர்ஷினி அம்மா

ஒரு தேர்ந்த எழுத்தாளரின் பக்குவத்தோடும், வட்டார வழக்கியலின் அழகோடும் வெளிப்படும் இந்தச்சிறுகதை கண்டிப்பாக இன்னொரு நல்ல வாசகியை, நல்ல படைப்பாளியை எடுத்துக்காட்டுகிறது...

சமூகம் சார்ந்த பிரச்சினைகளை சிறுகதைகள் பேசவேண்டும், அவற்றின் மூலம் மாற்றம் வரவேண்டும் என்றெல்லாம் நான் நினைத்ததுண்டு. அன்பார்ச்சுனேட்லி, அதுபோன்ற முயற்சிகளை விட நடிகையின் கதைகள் பரபரப்பாக ரசிக்கப்படுவதை கண்டு நொந்த காலம் கூட உண்டு.

ஆனால் இதுபோன்ற சிறுகதைகளை பதிவுசெய்வது காலத்தின் கட்டாயம். நிறைய சிந்தனைகளை கிளப்பிய அருமையான கதை.

என்னுடைய மதிப்பெண் 71 /100

50. தேவதைகளும், சாபங்களும் இன்னும் பிறவும்! : Jeeves

தனிப்பட்ட வகையில் கதையின் முடிவில் எனக்கு உடன்பாடில்லை. சுகமாக வாழ்தல் - ஜாலி குட் என்பதை தவிர்த்து கொஞ்சம் இரக்கமில்லாத முடிவு.....ஆனால் இம்மியும் பிசகாத நடை, பர்பெக்ட் ஆன டயலாக்ஸ்.

ஒரு தரமான கதைக்கு எந்த விதத்திலும் குறைவில்லாதது. கடைசி ட்விஸ்ட் பத்தி இல்லாமல் இருந்திருந்தால்கூட கதை அதன் இலக்கை அடைந்திருக்கும். கடைசி கட்டத்தில் சில ஆங்கில செண்டன்ஸ்களை தவிர்த்திருந்திருக்கலாம்.

என்னுடைய மதிப்பெண் 70/100

முதல் இருபது கதைகளின் விமர்சனம் இங்கே
இருபதில் இருந்து நாற்பது கதைகளின் விமர்சனம் இங்கே

20 comments:

ரவி said...

தமிழ்மணத்தில் சேர்க்க முடியல. அதான் இந்த கயமை/

கே.என்.சிவராமன் said...

நன்றி ரவி, தங்கள் ஆதரவுக்கும், நண்பர்களை உற்சாகப்படுத்துவதற்கும்...

தோழமையுடன்
பைத்தியக்காரன்

ரவி said...

நன்றி பைத்தியக்காரன். !!!

வால்பையன் said...

//'கிறுக்கு' புத்தியில் தோன்றிய 'நறுக்கு' சிந்தனை, வால்பையனின் இந்த மொக்கைக்கதை...
ரசிப்பதற்கேனும் கண்டிப்பாக ஒருமுறை படிக்கவேண்டும்...//


:)
ரொம்ப நன்றியண்ணே!
60 மார்க் கொடுத்ததுக்கு, வித்தியாசமான முயற்சிக்காக தான் செய்தேன், மற்றபடி கருத்து சொல்ல தான் நிறைய பேர் இருக்காங்களே நானும் எதுக்கு!

அபி அப்பா said...

இதுவரை செந்தழலார் பதிவு படி

80=1
72=1
71=1
70=7
68=1
65=7
60=8

போதும்ப்பா சட்டு புட்டுன்னு முடிச்சி கொடுத்துடுங்க ரவி சாரே:-))

ரவி said...

நன்றி வால்ஸ்...!!

யோசிச்சு இன்னொரு கதையை எழுதவும்...

ரவி said...

இன்னும் 50 கதைகளை படிக்கனும்...

வால்பையன் said...

//யோசிச்சு இன்னொரு கதையை எழுதவும்...//

யோசிக்கிறதா!
அத செய்யுற மாதிரி இருந்தா தான் முதல்லயே நல்ல கதையா எழுதியிருப்பேனே!

நாக்க தொங்க போட்டுகிட்டு உட்காந்திருக்கேன், எப்போ தான் வருவிங்க, சொல்லி ஒரு மாமாங்கம் ஆச்சு!

Mathuvathanan Mounasamy / cowboymathu said...

போட்டி முடிவு வருவதற்கு முதல் உங்க முடிவுகளை அறிவிச்சிடுங்க தல..

ரவி said...

வால்...சம்மர்ல லீவு கிடைக்கல...டிசம்பர் தான் வருவேன்...ஈரோடு வரவா இல்ல கோயம்புத்தூரா இல்ல திருப்பூரா ? முடிவு செய்யவும்....

ரவி said...

மது, இது என்னுடைய தனிப்பட்ட விமர்சனம் தானே ? முடிவு எல்லாம் அறிவிக்கனுமா என்ன ?

வால்பையன் said...

//ஈரோடு வரவா இல்ல கோயம்புத்தூரா இல்ல திருப்பூரா ? முடிவு செய்யவும்.... //

ஈரோட்டில் என்னை மட்டும் தான் பார்க்கமுடியும், திருப்பூர், கோவை என்றால் நிறைய நண்பர்களை சந்திகலாமே!

மீட்டிங் பொது இடத்தில் வைத்து கொள்ளலாம்!
அதை மட்டும் ரூம் போட்டு வச்சிகலாம்!

தொடர்பவன் said...

உங்கள் விமர்சனத்திற்கு நன்றி..முதல் சிறுகதை முயற்சி என்பதால் அதன் வடிவம் முழுமையாய் கைவரவில்லை.இருப்பினும் இன்னும் ஆழமாக செல்ல முயற்ச்சிக்கிறேன்

ரவி said...

நன்றி தொடர்பவன்...

நந்தாகுமாரன் said...

மீண்டும் ஒரு முறை சொல்கிறேன் ... உங்கள் முயற்சி பாராட்டிற்குரியது

அது சரி(18185106603874041862) said...

//
42. பசி........ : அது சரி

வழக்கம்போல சிறுகதை அடிப்படையற்ற கதை...இருந்தாலும் எடுத்துக்கொண்ட முயற்சிக்கும் நல்ல தேர்ந்த நீரோடை போன்ற நடைக்கும் கண்டிப்பாக பாராட்டவேண்டும்...

இலக்கில்லாமல் பயணித்து டொங் என முடிந்துவிடுவது அபத்தம். ஒரு குறிப்பிட்ட கேரக்டரை சுற்றியே முழு கதையும் பின்னப்பட்டிருப்பது இன்னொரு மைனஸ்...

இவர் கொஞ்சம் நல்ல கதைகளை வாசித்து எழுத பழகினால் அற்புதமான எழுத்தாளர் நமக்கு ரெடி...

என்னுடைய மதிப்பெண் 50 / 100
//

ஆத்தா நான் பாஸாயிட்டேன்.... அதுவும் கொஞ்சம் டீசன்டனா மார்க்கோட..

எங்க கன்னாபின்னானு திட்டி மைனஸ் எரநூறு போட்ருவீங்களோன்னு நினைச்சிக்கிட்டு இருந்தேன்...

தப்பிச்சிட்டோம்ல :0))

அது சரி(18185106603874041862) said...

//
42. பசி........ : அது சரி

இலக்கில்லாமல் பயணித்து டொங் என முடிந்துவிடுவது அபத்தம். ஒரு குறிப்பிட்ட கேரக்டரை சுற்றியே முழு கதையும் பின்னப்பட்டிருப்பது இன்னொரு மைனஸ்...

//

ரவியண்ணா,

இலக்கு நிர்ணயித்தாலும் இலக்கின்றி சில வாழ்க்கைகள் தொலைந்து போகிறது...அப்படி தொலைந்து போன ஒரு வாழ்க்கை பதித்து சென்ற தடங்களில் ஒரு சிலவற்றை மட்டுமே அந்த கதையில் காட்டியிருக்கிறேன்...

தவிர டொங் என்று முடிந்து விட்டது என்பது உண்மையே...அது வேண்டுமென்றே செய்தது...நடுவில் என்ன நடந்தது, இனி என்ன நடக்கும் என்பது வாசிப்பவர்களே தீர்மானிக்கலாம்...

அது சரி(18185106603874041862) said...

//
இவர் கொஞ்சம் நல்ல கதைகளை வாசித்து எழுத பழகினால் அற்புதமான எழுத்தாளர் நமக்கு ரெடி...
//

ம்ம்க்கும்...இங்க குவாட்டர் அடிக்கவே டைம் இல்ல...இதுல எங்க வாசிக்க??

யாரும் கவலைப்படாதீங்கப்பா...அப்படியெல்லாம் யாரையும் நான் கொடுமைபடுத்த மாட்டேன் :0))

அது சரி(18185106603874041862) said...

நூற்றுக்கும் மேற்பட்ட கதைகளை வாசித்து பொறுப்புடன் விமர்சனம் செய்யும் உங்களுக்கு ஒரு ஸ்பெஷல் தேங்க்ஸ்.....

எந்த கதையையும் இதெல்லாம் ஒரு கதையா என்று விமர்சிக்கவில்லை..உங்கள் விமர்சனம் மிகவும் ஆக்கப்பூர்வமாகவே உள்ளது...

மிக்க நன்றி ரவி...

ஷங்கி said...

நண்பரே, இப்பதான் ஒரு கதையை எழுதிப் போட்டிக்கு அனுப்பினேன். ஆர்வமும், நேரமுமிருந்தால், கொஞ்சம் படித்துப் பார்த்து தங்கள் கருத்தைச் சொல்லவும்.
உரல்: http://wimpystar.blogspot.com/2009/06/blog-post_27.html

நன்றி
சங்கா