Friday, June 12, 2009
வணங்காமண் கப்பலை தமிழ்நாட்டுக்கு அனுப்புங்கள்...
வணங்கா மண் கப்பலுக்கு இலங்கை அரசு அனுமதி மறுத்துள்ளது...அந்த கப்பலை சோதனை செய்து, அதில் ஆயுதங்கள் எதுவும் இல்லை என்று தெரிந்தபிறகும் அந்த கப்பலை திருப்பி அனுப்ப முடிவு செய்துள்ளது.
இதற்கு ஒரே காரணம்தான். அவை தமிழர்களால் தமிழர்களுக்கு அனுப்பப்பட்ட உணவு மற்றும் மருந்துப்பொருட்கள்...இலங்கை கொலைவெறி அரசின் பேரினவாதம் மற்றும் வல்லாதிக்கத்தின் இன்னொரு எடுத்துக்காட்டாக நிற்கிறது இந்த சம்பவம்...
இந்த கப்பலை அனுமதிக்கவேண்டும் என்று எந்த நாடும் சொல்லவில்லை, எந்த அமைப்பும் கேட்கவில்லை...அப்படி கேட்டாலும் இலங்கை அரசும் அதை கேட்கப்போவதில்லை. போர் வெற்றியின் பட்டாசு சத்தத்தின் இடையே எந்த அழுகுரலும், கூக்குரலும் அவர்கள் காதில் விழப்போவதில்லை...
ஆனால் கல்கத்தாவுக்கு போகும் இந்த கப்பல் அதில் உள்ள பொருட்கள் ஏலம் விடப்பட்டு ஸ்க்ராப் இரும்புக்குத்தான் செல்லப்போகிறது என்று நம்பகமான தகவல்கள் கிடைக்கின்றன...
அதனால் சொல்கிறேன், அந்த கப்பலை தமிழ்நாட்டுக்கு அனுப்புங்கள்...சென்னை துறைமுகத்தில் நிற்கட்டும். முடிந்தால் கலைஞர் அதனை இலங்கைக்கு அனுப்புவார். இல்லையென்றால் திருச்சியிலும், திண்டுக்கல்லிலும், மதுரையிலும், ராமநாதபுரத்திலும் பரவி வாழும் இலங்கை 'அகதி' களிடம் கொடுத்துவிடுகிறோம்...
தமிழ் வலையுலகில் இருக்கும் ஈழ, அரசியல், பத்திரிக்கை நன்பர்களாக லக்கிலுக், பாலபாரதி, அபி அப்பா, உடன்பிறப்பு, எம்.பி உதயசூரியன், ஆழியூரான், சுகுணா திவாகர், வளர்மதி, சோபா சக்தி, தமிழச்சி, ஓசை செல்லா, தமிழ் சசி, பெயரிலி, ஜ்யோராம் சுந்தர், வினவு போன்றவர்கள் அதற்கு உதவுவார்கள்...!!! என்ன உதவுவாங்க தானே ? அப்ப நீங்க பதிவுக்கு ஒரு ஒட்டை போட்டுட்டு (கப்பல்ல ஓட்டை போடச்சொல்லல) கிளம்புங்க...
Subscribe to:
Post Comments (Atom)
22 comments:
கலைஞருக்கு இந்த விஷயம் தெரிந்தால் உடனே மன்மோகன் சிங்குக்கும், சோனியாவுக்கும் தந்தி அனுப்புவார்.
லக்கி, இதை பற்றி எழுதி நாம் கலைஞருக்கு தந்தி அனுப்பினால் என்ன ?
கலைஞருக்கு எழுதி பிரயோசனமில்லை என்பதுதான் தெரிந்துவிட்டதே. கொடநாட்டில் ரெஸ்ட் எடுக்கும் ஈழத்தாய்க்கு வேண்டுமானால் அனுப்பிப் பார்க்கலாம்.
வேற வழியில்லை, கலைஞரே உதவுங்கள் என்று முந்தை பதிவு ஒன்றை போட்டேனே நியாபகம் இல்லையா ?
அனுப்பலாம், ஏன் டெல்லியில் அமர்ந்திருக்கும் அண்ணனுக்கோ அல்லது துணை முதல்வர் ஸ்டாலினுக்கோ, அல்லது, கணிமொழி எம்பிக்கோ கூட அனுப்பலாம்.
பதவி எதுவும் இல்லாமல் இருக்கும் அம்மையாரை ஏன் தொந்தரவு செய்கிறீர்கள்....பாவம்...திமுக அரசின் பொய் வழக்குகளை சந்திக்கவே நேரம் சரியாக இருக்கிறது..
கலைஞர் உதவ நினைத்தாலும் 2011 தேர்தலுக்காக நாடகமாடுகிறார் என்றுதானே சொல்லப்போகிறோம் ரவி?
பைனல் அவுட்புட்டுக்கான எந்த முயற்சியையும் யாரும் முன்னெடுப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை :-(
நண்பர்களே,
கலைஞருடன் எல்லாம் தந்தியனுப்பி கேட்டு இயலாது என்ற நிலையில்தான் கப்படல் கல்கத்தாவில் உடையப்போகிறது.
இதுபற்றி நேற்று எனது முல்லைமண் வலைப்பூவில் கட்டுரையொன்று இட்டுள்ளேன். நேரமிருப்பவர்கள் வாசியுங்கள்.
தமிழகத்தில் உள்ள ஈழத்தவருக்குச் செல்ல மன்மோகன் சோனியா கூட்டணி அப்பமாட்டார்கள் என்பதும் உண்மை.
தமிழரின் உழைப்பு இப்படி வீணாகிறதேயென்ற கவலை மட்டுமல்ல இனிமேல் ஈழத்தமிழன் உரிமைகள் பற்றி நினைக்காதே என்றளவுக்கு வவுனியாவிலும் யாழ்ப்பாணத்திலும் அமைக்கப்பட்டுள்ள முகாம்களில் வாழும் தமிழர்கள் வஞ்சிக்கப்படுகிறார்கள். கேட்பாரற்றுத் தமிழினம் சாகிறது.
வலியது வாழும் மற்றவை அழியுமென்று சொன்ன தமிழ்த்தலைவர் பிரபாகரனின் மொழி உண்யாகிறது.
சாந்தி
என்னது 2011 தேர்தலா ? அதுவும் சரிதான்...
ஆனால் அந்த நேரத்தில் டாக் ஆப் த டவுன் நடிகர் இளைய தளபதி விஜய் தான்..அவர் தான் அடுத்த முதல்வர். பேசாமல் அவருக்கே அனுப்பலாம்..
அல்லது மொரிஷியஸில் மீன் வறுத்து தின்றுகொண்டிருக்கும் கேப்டனுக்கு அனுப்பலாம்...ஆனால் மொரிஷியஸில் தந்தி வசதி இருக்கோ இல்லையே ?
Blogger லக்கிலுக் said...
கொடநாட்டில் ரெஸ்ட் எடுக்கும் ஈழத்தாய்க்கு வேண்டுமானால் அனுப்பிப் பார்க்கலாம்.
Friday, 12 June, 2009
எவராலும் இந்த விதியை மாற்ற முடியாது. ஈழத்தாய் ஈனத்தாயாய் காலங்கள் கரைந்துவிட்டது.
சாந்தி
வலியது வாழும் மற்றவை அழியுமென்று சொன்ன தமிழ்த்தலைவர் பிரபாகரனின் மொழி உண்மையாகிறது.
கசப்பான உண்மையை எளிமையாக சொல்லிவிட்டீர்கள்...
ரவி! மனம் வெறுத்துப் போயே சொல்கிறேன். விரைவில் தமிழகத்தில் வாழ்பவர்களும் பதுக்குக் குழிகளுக்குள் பதுங்குவார்கள். அன்று நமக்கு குரல் கொடுக்கவும் எந்த நாதியும் இருக்கப் போவதில்லை :-(
நானும் வெறுத்து தான் போயிட்டேன்...
இருந்தாலும் நமது இயக்கம் இல்லையென்ற்றால் நமது மற்றும் நம்மை சார்ந்தவர்களது இருப்பு கேள்விக்குறியாயிடுமே ?
அதுக்காக ஓடிக்கிட்டிருக்கேன்...இனியும் ஓடவேண்டும்...
அதன் நீட்சிதான் இந்த மொக்கை பதிவு..
tanku
இன்னாப்பா இப்படிப்பண்ணிபோட்டீங்க.
இன்னா கப்பல் அது.வணங்கா மண்ணா?? அதுவும் மண்கவ்வப் போகுதாமா? தமிழ்நாட்டுக்கு கப்பலை அனுப்பினா ஸ்டாலினுக்கும்,அழகிரிக்கும் போக மீதியை யாருக்கு கொடுக்கலாம்.கருணாநிதி யோசிக்க அவகாசம் தேவைப்படுமில்ல..தமிழனைக் கொல்ல ஆயுதம் கொடுத்த களவாணிக்கே நீங்க கப்பல் தானம் பண்ணப்போறிங்களோ??
பண்ணுங்கோ... பண்ணுங்கோ...
சுப்ரமணி
//வலியது வாழும் மற்றவை அழியுமென்று சொன்ன தமிழ்த்தலைவர் பிரபாகரனின் மொழி உண்மையாகிறது.
கசப்பான உண்மையை எளிமையாக சொல்லிவிட்டீர்கள்...//
செழும் தமிழே வலியது வாழும் என்று முதலில நம்ப தலைக்குத் தெரிஞ்சு போச்சுதெண்ணா பின்ன என்ன பன்னாடைக்குப் போராட்டம்.எல்லாம் பம்மாத்துத் தானே? உலக நாடெல்லாம் எதிரா நிற்கெண்ணு தெரிஞ்சா அடக்கிவாசிக்க வேண்டியதுதானே??
எல்லாத்துக்கும் ஒரு காரணம் வைச்சிருபீங்க இல்ல..எடுத்துவிடும்.
ஆமா வலியது மட்டுதான் வாழும் எண்ணு தலைவர் சொன்னா டைனோசர் இப்பவும் இருந்திருக்கணுமே?/
சுப்ரமணி
"தமிழகத்தில் வாழ்பவர்களும் பதுக்குக் குழிகளுக்குள் பதுங்குவார்கள். "
மிகவும் அஞ்சத்தகுந்த வெளிப்பாடு. அப்படி நடக்கக்கூடாது என்று நம்பத்தான் முடியும்,....
நீங்கள் சொல்வதெல்லாம் ௱% யதார்த்தமான விடயம் ....ஆனால் நீங்கள் ஒருவிடயத்தை மறந்து போயிட்டியள் பாருங்கோ? பக்சா விட்டாலும் விடுவான் ,,,,உந்த குறுக்கால போன மேனனோ நாராயணனோ அல்லாட்டி வெள்ளைசனியன் சோனியாவோ விடவே மாட்டனுகள் ....இதனை முதல்லை நீங்கள் புரிந்து கொள்ளுங்கோ!!!
எரிச்சல்தான் வருகிறது நமது அரசியல் வாதிகள் நடத்தும் நாடகங்களை பார்த்தால்..
தனது வாரிசுகளின் பதவிக்காக தள்ளாத வயதிலும் அந்தரத்தில் பறக்கும் முதல்வர் ஈழப் பிரச்சினைக்கு தந்திகளை மட்டும் பறக்க விடுகிறார்.
u r rite
pathungukuzhikkuL thamizhanai anuppiyee thiirvathu enRu thamizinaththalaivarum,Ezhaththaayum mudiveduththu remba naal Achchu thooZhar lakky
u r right
நன்றி தமிழ்நாட்டு தமிழன், வெறுமை, அனானிகள்
Post a Comment