உங்களிடம் யாகூ முகவரி இருக்கா ? கண்டிப்பா இருக்கும்...
ஓப்பன் ஐடி பற்றி கேட்கும் பெட்டியில் உங்கஐடி@yahoo.com என்று கொடுங்க.
அது யாகூவின் லாகின் பேஜுக்கு கொண்டு செல்லும்...
அங்கிட்டு உங்கள் யூசர் நேம் பாஸ்வேர்ட் கொடுத்து லாகின் ஆவுங்க...
அப்புறமா ஒரு பேஜ் லோட் ஆகி Confirm என்று கேட்கும்.
அதில் கன்பர்ம் பட்டன் அடிச்சிட்டீங்கன்னா போதும்...
தமிழ்மணத்தில் மட்டும் இதன் மூலம் ஓட்டு போட முயற்சி செய்யுங்க...
இவ்வளவு சொல்லியும் ஓட்டு போட முடியாதவர்களால் எதுவுமே முடியாது. அதனால் அட்லீஸ் நமீதா படத்தை டபுள் க்ளிக் செய்து பார்த்து சந்தோஷம் அடையவும்...
தமிழ்மணத்தில் இருந்த வாக்களிப்பு முறையில் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது. இனி வாக்களிப்பதற்கு OpenIDஐ பயன்படுத்த வேண்டும். OpenIDஐ பயன்படுத்தும் அதே நேரத்தில் முன்பு போலவே சுலபமாக வாக்களிக்கும் வகையிலும் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது. முதன் முறையாக ஒரு இடுகைக்கு வாக்களிக்கும் பொழுது மட்டுமே தங்களது OpenIDஐ வாசகர்கள்/பதிவர்கள் தமிழ்மணத்திற்கு அளிக்க வேண்டும். அடுத்த சில வாரங்களுக்கு எத்தனை பதிவுகளுக்கு ஒட்டளித்தாலும் நீங்கள் உங்கள் openidஐ அளிக்க வேண்டிய தேவை இருக்காது. இந்த புதிய தொழில்நுட்பம் மூலமாக இடுகைகளுக்கு விழும் வாக்குகள் நேர்மையானதாகவும், அதன் தரத்தைச் சார்ந்ததாகவும் மட்டுமே இருக்கும் என நம்புகிறோம்.
எவ்வாறு வாக்களிப்பது ?
தமிழ்மணத்தில் வாக்களிப்பதற்கு உங்கள் OpenIDஐ பயன்படுத்த வேண்டும்
OpenID என்றால் என்ன ?
உங்கள் ப்ளாகர், வேர்ட்பிரஸ், யாகூ முகவரிகளே OpenID முகவரி ஆகும். இது குறித்த மேலதிக விபரங்கள் OpenID தளத்தில் உள்ளது .
எப்படி வாக்களிப்பது ?
வாக்களிக்க நுழையும் பொழுது OpenId பெட்டியில் உங்களது ப்ளாகர்/வேர்ட்பிரஸ் முகவரியை இவ்வாறு அளிக்க வேண்டும் - username.blogspot.com அல்லது username.wordpress.com. யாகூ முகவரியை username@yahoo.com என அளிக்க வேண்டும்
அவ்வாறு அளித்தவுடன் ப்ளாகர்/வேர்ட்பிரஸ்/யாகூ தளத்திற்கு நீங்கள் கொண்டு செல்லப்படுவீர்கள். அங்கு உங்கள் பயனர்பெயரையும், கடவுச்சொல்லையும் அளிக்க வேண்டும். ப்ளாகர்/வேர்ட்பிரஸ்/யாகூ அதனை சோதித்து அது ஒரு சரியான முகவரியே என்ற தகவலை மட்டும் தமிழ்மணத்திற்கு வழங்கும்
ஒவ்வொரு முறை வாக்களிக்கும் பொழுதும் என்னுடைய OpenID அளிக்க வேண்டுமா ?
இல்லை. முதல் முறை வாக்களிக்கும் பொழுது மட்டுமே OpenIDஐ அளிக்க வேண்டும். தமிழ்மணம் அதனை நினைவில் வைத்துக் கொள்ளும். அடுத்த சில வாரங்களுக்கு எத்தனை பதிவுகளுக்கு ஒட்டளித்தாலும் நீங்கள் உங்கள் openidஐ அளிக்க வேண்டிய தேவை இருக்காது.
என்னுடைய யாகூ, ப்ளாகர், வேர்ட்பிரஸ் பயனர் பெயர், கடவுச்சொல் தமிழ்மணத்திற்கு தெரியுமா ? தமிழ்மணம் அதனை சேமிக்கிறதா ?
உங்கள் பயனர் பெயரோ, கடவுச்சொல்லோ தமிழ்மணத்திற்கு தெரியாது. உங்களது OpenID முகவரி மட்டுமே தமிழ்மணத்திற்கு தெரியும். தமிழ்மணம் உங்களது OpenID தவிர வேறு எந்த விபரங்களையும் கோருவதில்லை. சேமிப்பதும் இல்லை.
இந்த தொழில்நுட்பம் தற்பொழுது சோதனை வடிவத்தில் உள்ளது. சில பிரச்சனைகளை (Bad signature) பதிவர்கள் தமிழ்மணத்திற்கு தெரிவித்திருந்தார்கள். அது சரி செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய நுட்பத்தில் வேறு ஏதேனும் பிரச்சனைகள் இருந்தால் தமிழ்மணம் நிர்வாகத்திற்கு தெரியப்படுத்த
13 comments:
இவ்வளவு சொல்லியும் ஓட்டு போட முடியாதவர்களால் எதுவுமே முடியாது. அதனால் அட்லீஸ் நமீதா படத்தை டபுள் க்ளிக் செய்து பார்த்து சந்தோஷம் அடையவும்...
LOL
ஜிமெயில் ஆகாதா? அப்ப இனிமேதான் யாகூக்கு போகணும். மிக்க நன்றி!
ஜிமெயிலும் ஆகும்...
username.blogspot.com என்று உள்ளது.
இதில் உங்கள் மின்னஞ்சல் kudanthai.anbu@gmail.com மற்றும் உங்கள் வலைப்பதிவு kundanthayaar.blogspot.com எனில்,
நீங்கள் கொடுக்கவேண்டியது...
kudanthai.anbu.blogspot.com என்பதே.
உங்கள் வலைப்பதிவு முகவரியை தரவேண்டாம்.
எங்கள் அண்ணன்...
எங்கள் தங்கம், தட்டச்சு சிங்கம்...
பதிவுலகின் பீஷ்மர் எங்கள் அண்ணன் உண்மை தமிழனுக்கு "ஐ லவ் யூ" சொல்லும் எங்கள் அண்ணி வருங்கால முதல்வர் தலைவி நமீதா வாழ்க.. வாழ்க...
இப்படிக்கு.
நையாண்டி நைனா
-பொருளாளர்-
-உண்மைத்தமிழன் பதிவு படிப்போர் பேரவை.
-மும்பை கிளை.
உண்மைத்தமிழன் பதிவை விடாமல் படிப்போர் சங்கம் எந்த பிரவுசர் உபயோகிக்கிறது என்று சொன்னால் வலையுலகம் வாழ்த்தும்...
Why this much steps to vote in Tamilmanam?
I was tried to vote for you. Not able to do it. Finally I jumped to different Post.
But this procedure is tedious. Who will vote?
ஓப்பன் ஐடி வெச்சி நான் போட்ட முதல் ஓட்டு உங்களுக்குத்தான்!
நன்றி!
(இம்புட்டு நாளாஅ ஓப்பன் ஐடி பத்தி பல முறை படிச்சி பார்த்து டிரை பண்ணி அப்பீட்டு ஆயிட்டேன்)
//தமிழ்மணத்தில் மட்டும் இதன் மூலம் ஓட்டு போட முயற்சி செய்யுங்க...//
வொய் சோ?
/*உண்மைத்தமிழன் பதிவை விடாமல் படிப்போர் சங்கம் எந்த பிரவுசர் உபயோகிக்கிறது என்று சொன்னால் வலையுலகம் வாழ்த்தும்...*/
இந்த கேள்வி எதுக்குன்னு தெரிஞ்சிக்கலாமா அண்ணே....
எங்க பேரவையின் இன்னொரு சிங்கமும் இங்கே தான் சுத்திகிட்டு இருக்கு போலே...
உண்மைத்தமிழன் பதிவுகள் ஓப்பன் ஆகாமல் இருப்பதற்கு பிரவுசர்கள் தான் காரணம், பதிவின் நீளம் காரணமே அல்ல என்று அப்பன் முருகன் மேல் ஆனை என்று சொன்னாராம்...
அன்புமணிக்கு நீங்கள் விளக்கியிருப்பது எனக்கும் உதவியது.
நன்றி.
Post a Comment